3/31/2009

சிம்புவும் பேரரசுவும் ஒன்றாக...

தலைப்பப்பாத்து பதறாதீங்க....
பயப்படாதீங்க..சிம்புவும் "வெற்றி இயக்குனர்"பேரரசுவும் படத்தில் ஒன்றாக சேரவில்லை...பாட்டில் தான் ஒன்றாக சேருகிறார்கள்...


லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசனின் படமான "வல்லவன்" படத்தில் இடம்பெற்ற "யம்மாடி அத்தாடி உன்ன எனக்கு தரியாடி"என்ற கருத்து மிக்க பாடலை எழுதியவரும் இதே சிங்கம் தான்(அதை நம்ம காந்த குறல் T.R தான் பாடிக்கிழிச்சாரு...ஹி ஹி)..


இதே கூட்டணி மீண்டும் "தொட்டுப்பார்" என்ற படத்தில் ஒரு பாடலுக்கு சேர்கிறது...பாடலின் ஆரம்ப வரிகள் இது தான்..

" ஓல வெடி ஓல வெடி பத்தவெச்சேனே..."(என்ன அர்த்தம் உள்ள வரிகள்???)
இந்த பாடலை சமீபத்தில் சுசித்ராவுடன் இணைந்து பாடியுள்ளார் சிம்பு...
பாட்டை கேட்டவர்களின் காதில் கதகளி பண்ணிவிட்டதாம் பாடல்..

"சிம்பு-பேரரசு கூட்டணி கதகளி என்ன காதில் களரி பைட்டே நடக்கும்.."

சிம்புவும் பேரரசுவும் ஒன்றாக...SocialTwist Tell-a-Friend

3/27/2009

நீங்களும் டைரக்டராகலாம்...

தற்போது தமிழ் சினிமாவிலுள்ள இயக்குனர்கள் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட ஃபார்முலாவை பேணி வருகிறார்கள்...
அதை வைத்து போடுற ஒரு காமெடிப் பதிவு தான் இது...

பேரரசு
*கண்டிப்பா ஹீரோ நெத்தியில சந்தனமோ, குங்குமமோ, விபூதியோ இருக்கணும்...

*படத்துல 5 பாட்டு, 4 ஃபைட் இருக்குறதோட முதல் பாதி சென்டிமென்ட்டா நகைச்சுவையாவும் ரெண்டாவது பாதி நகைச்சுவையான சென்டிமென்ட்டாகவும் இருக்கணும்...

*வில்லன்களுக்கு அடைமொழியுடன் பெயர் இருக்கணும்...
( "பான்பாராக் ரவி" மாதிரி...)

*ஹீரோயின் பாட்டுக்கு மட்டுமே வந்துட்டுப் போனா போதுமானது...

டீ.ஆர்
*கதையில (அப்பிடின்னு ஒன்னு இருந்தா...) தங்கச்சி கட்டாயமா இருக்கணும்...

*ஒரு ஹீரோயின் டீ.ஆரையே சுத்தி சுத்தி வந்து காதலை அள்ளித் தெளிக்கணும்...

*தங்கச்சிக்காக வர்ற ஃபைட் சீன்ல இவரு ரைமிங்ல பேசியே அடிக்கிறா மாதிரி ஒரு சீன் கட்டாயம்...

*டீ.ஆரால எழுதப்பட்ட நாலு/ஐந்து அறுவையான காதல் பாட்டுகள்...

*முடிவுல தங்கச்சி சாகணும்/பிரியணும்..
அதுக்காக இவரு ஃபீல் பண்ணனும்...

விக்ரமன்
*இவரோட கதையில எல்லாரும் நல்லவங்களா இருக்கணும்...

*S.A.ராஜ்குமாரோட மியூசிக்ல 4 பாட்டு மெலடியா இருக்கணும்..

*ஹீரோ/ஹீரோயின் குடும்பம் கூட்டுக் குடும்பமா இருக்கணும்..
அதுல தாத்தா முதல் பேரன் வரைக்கும் சேர்ந்து வாழணும்..

*சில மொக்க சீனுக்கு மட்டுமே ஹீரோ கோவப்பட்டு வேட்டிய மடிச்சுகட்டிகிட்டு ஃபைட் பண்ணனும்...

எஸ்.ஏ.சந்திரசேகர்
*உங்களுக்கு கதையே இல்லாம மூனு மணி நேரப் படம் எடுக்கத் தெரிஞ்சிருக்கணும்...

*ஹீரோக்கு திடீர்ன்னு காதல் வரணும்...

*காதலுக்கு ஒரு வில்லனோ/விதியோ தடையாய் இருக்க, அதை ஹீரோ வின் பண்ணனும்...

*ஹீரோ ரொம்ப "நல்லவரா" இருக்கணும்...

ஷங்கர்
*பணத்தை கொட்டி படம் எடுக்குற மாதிரி கதை பண்ணத் தெரிஞ்சிருக்கணும்...

*எல்லா பாடல்களும் வெளிநாட்டுல சுடணும்...

*பிரமாண்டத்துக்கு குறைச்சலே இருக்கக் கூடாது...

*சமூகத்தை திருத்துறா மாதிரி கதை இருக்கணும்...







மேல சொன்ன டிப்ஸை ஃபாலோ பண்ணா நீங்களும் இவங்களை மாதிரி டைரக்டராகலாம்...
என்ன ரெடியா ???

இது தான் என்னோட முதல் பதிவு...
உங்க கருத்தைச் சொல்லிட்டு போங்க...

நீங்களும் டைரக்டராகலாம்...SocialTwist Tell-a-Friend

3/01/2009

நான் புதுசுங்கோ...

தோழர்களே,
ஒரு ஆர்வத்தில் ஆரம்பித்திருக்கிறேன்.
சிறிது காலத்தின் பின் பதிவுகள் இட ஆரம்பிப்பேன்.
இதுக்கு உங்கள் ஆதரவும் அரவணைப்பும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வழிப்போக்கன்...

நான் புதுசுங்கோ...SocialTwist Tell-a-Friend