4/18/2009

டிப்பெஸ்(white ink) கல்வியை வளர்க்குதா??? இல்ல அழிக்குதா??? :)))

ஹாய் நண்பர்களே...

இத படிச்ச உடனே சில பேருக்கு "டிப்பெஸ்"ன்னா என்னன்னு ஒரு கேள்வி எழும்பி இருக்கலாம்...சோ அத முதல்ல தீர்ப்போம்..

டிப்பெஸ்ன்னு நாங்க எத சொல்லுவோம்ன்னா பேனாவால எழுதிய எழுத்துக்களை வெறும் அழிரப்பரால (rubber eraser) அழிக்க முடியாது..அதனால அத அழிக்க பயன்படுத்துவது தான் இந்த டிப்பெஸ்(வெள்ளை மை)..
இத நீங்க சிலவேளை வேறு மாதிரி அழைத்திருக்கலாம்..நாங்க இத இப்பிடி தான் அழைப்போம் அதான்......

இது தான் அது..

இப்ப ஓக்கேவா, சரி மேட்டருக்கு வருவோம்....

நான் இன்னும் ஒரு பள்ளி மாணவனாக இருக்கேன்ல..
இப்பிடி தான் அன்று ஒரு நாள் எமது வகுப்பில சார் ர்ர்ரொம்ப தீவிரமா பாடம் எடுத்துகிட்டிருக்கையில் எனக்கு முன்னால் இருந்த மாணவனுக்கு ராக்கெட் வேகத்தில் பறந்து வந்து விழுந்தது ஒரு டிப்பெஸ்...
அவன் அதை தொட்டு கும்பிட்டான்..(படிக்கிற பொருட்கள் கீழே விழுந்தாலோ,மிதி பட்டாலோ தொட்டு கும்பிடும் நல்ல பழக்கத்த நம்மவர்கள் கொண்டிருக்கிறார்கள்)

சார் அத பாத்துட்டார்...
உடனே அவன எழுப்பினார்..(சார் அப்ப ரொம்ப நல்ல மூட்ல இருந்ததால கோபப்படவில்லை)
"என்னடா செய்ற???"என்றார்..
அவன் "சார் டிப்பெஸ் விழுந்திடுச்சு அதான்..."ன்னு இழுத்தான்..

அப்பதான் சார் கேட்டார்.."டிப்பெஸ்ஸ போய் கும்பிடுறியே அது படிப்ப அழிக்கிற பொருள் இல்லயாடா??"அப்பிடின்னு..

பையன் குழம்பீட்டான்..
அப்பரமா "சார் அது .."அப்பிடின்னு ஏதோ ஆரம்பிக்க உடனே சார் "என்னடா நீங்க??? சரி சரி இரு"ன்னு முடிச்சுவச்சுட்டார்...

பிறகு தான் நான் இத யோசிச்சு பாத்தேன் எனக்கு அது படிப்ப வளர்க்குதா?? இல்ல அழிக்குதா??ன்னு தெரியல..
அதான் இங்க பல மேதாவிகள்,அறிஞர்கள் இருப்பீங்க..இதுக்கு சரியான தீர்வு சொல்லுவீங்கன்னு இங்க இத அவுத்து விடுறேன்....
பாத்து நல்ல விடையா சொல்லுங்க....

ஓக்கே..
-------------------------------------------------------------------------------------------------

இந்த பதிவ படிக்கிறவங்களுக்கு அதே சார் கேட்ட ஒரு கேள்வியயும் சொல்லுறேன் ..பதில் சொல்ல முயற்சி பண்ணுங்க..( நம்ம பையன் ஒருத்தன் உடனே எழுந்து அந்த நேரமே பதில் சொல்லீட்டான்..)

2 பேர் ஒருநாள் காட்டுக்கு மரம் வெட்ட போனாங்களாம்..
ஒருத்தன் காலைல இருந்து நான்ஸ்டாப்பா வெட்டினானாம்..அவனால வெறும் 8 மரம் தான் வெட்ட முடிந்ததாம்..
மற்றவன் ஒவ்வொறு மரம் வெட்டி முடிந்ததும் ஒரு ஓரமாக இருந்து வெற்றிலை மென்று கொண்டிருந்து விட்டு தான் அடுத்த மரம் வெட்ட போவானாம்..ஆனால் அவன் 11 மரம் வெட்டினானாம்..

எப்பிடி இது சாத்தியம்???

ஒகே..
ஓவரா பேசியாச்சு...
இது ரெண்டுக்கும் நல்ல தீர்வ சொல்லுங்க....

பிடிச்சா வோட்டயும் குத்துங்க...
பை..பை..

டிப்பெஸ்(white ink) கல்வியை வளர்க்குதா??? இல்ல அழிக்குதா??? :)))SocialTwist Tell-a-Friend

18 Responses:

தேவன் மாயம் said...

இது டைப்பிங் அழிக்க உபயோகிப்பார்கள்!!

தேவன் மாயம் said...

இப்போது ஸ்கூலில் இதை மாணவர்கள் உபயோகிக்கிறார்கள்!!

தேவன் மாயம் said...

படிப்பை அழிக்கவில்லை!! படிப்பில் தவறுகளை அழிப்பது தப்பில்லை!!

Prabhu said...

தம்பி, நாங்க வொயிட்னர்னு சொல்வோம். இத இப்ப ஸ்கூல் பசங்க போதைக்கு யூஸ் பண்றதா சொல்றாங்களே/ ஒரு வேளை அதுக்கு கும்பிட்டிருப்பானோ?

வழிப்போக்கன் said...

thevanmayam said...

இது டைப்பிங் அழிக்க உபயோகிப்பார்கள்!!//

ஹ்ம்ம்...
அப்டீங்களா???
:)))

வழிப்போக்கன் said...

thevanmayam said...

இப்போது ஸ்கூலில் இதை மாணவர்கள் உபயோகிக்கிறார்கள்!!//

அதத்தான் நானும் சொன்னேன்...

வழிப்போக்கன் said...

thevanmayam said...

படிப்பை அழிக்கவில்லை!! படிப்பில் தவறுகளை அழிப்பது தப்பில்லை!!//

டாக்டர் சொன்னா சரியாத்தான் இருக்கும்...
:)))

வழிப்போக்கன் said...

pappu said...

தம்பி, நாங்க வொயிட்னர்னு சொல்வோம். இத இப்ப ஸ்கூல் பசங்க போதைக்கு யூஸ் பண்றதா சொல்றாங்களே/ ஒரு வேளை அதுக்கு கும்பிட்டிருப்பானோ?//

இத எப்பிடி போதைக்கு யூஸ் பண்ண முடியும்???
வருகைக்கு நன்றி பப்பூ...

அப்துல்மாலிக் said...

இதை நாங்க இங்க் ரிமூவர்னு சொல்லுவோம் அல்லது கரெக்ஷனு சொல்லுவோம்

அப்துல்மாலிக் said...

திரும்ப லெட்டர் அடிக்கமுடியாத தருணங்களில் இதை பயன்படுத்துவோம், இது படிப்பை அழிப்பது இல்லை.. ஒருவேலை மாணவர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதால் ஆசிரியர் அப்படிசொல்லிருக்கலாம்.. விடுங்களேன்

அன்புடன் அருணா said...

//இத எப்பிடி போதைக்கு யூஸ் பண்ண முடியும்???//

இதோட மணம் ஒருவித போதை தருவதாகவும் அதனால் மாணவர்கள் நாக்கில் வைத்து ருசிக்கிறர்கள்.சில பள்ளிகளில் இது தடை செய்யப் பட்டிருக்கிறது...எங்க பள்ளியிலும்தான்...
அன்புடன் அருணா

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...

இதை நாங்க இங்க் ரிமூவர்னு சொல்லுவோம் அல்லது கரெக்ஷனு சொல்லுவோம்//

ஓஹோ..
அப்பிடியா???

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...

திரும்ப லெட்டர் அடிக்கமுடியாத தருணங்களில் இதை பயன்படுத்துவோம், இது படிப்பை அழிப்பது இல்லை.. ஒருவேலை மாணவர்கள் தவறான முறையில் பயன்படுத்துவதால் ஆசிரியர் அப்படிசொல்லிருக்கலாம்.. விடுங்களேன்//

சும்மா தான்...
அத நான் எப்பவோ விட்டுட்டேன்...
:)))

வழிப்போக்கன் said...

அன்புடன் அருணா said...

//இத எப்பிடி போதைக்கு யூஸ் பண்ண முடியும்???//

இதோட மணம் ஒருவித போதை தருவதாகவும் அதனால் மாணவர்கள் நாக்கில் வைத்து ருசிக்கிறர்கள்.சில பள்ளிகளில் இது தடை செய்யப் பட்டிருக்கிறது...எங்க பள்ளியிலும்தான்...
அன்புடன் அருணா//

ஓஹோ...
சாரி.. நம்ம பசங்களுக்கு இந்த மணந்துபாக்குற பழக்கமெல்லாம் இல்லங்கோ....
கருத்துகளுக்கு நன்றி அருணா...

வேத்தியன் said...

தம்பி...

இதை Correction Fluidன்னும் சொல்லுவாங்க...
படிப்புக்காக எழுதிய எழுத்தை அழிக்க அது உபயோகப்படுறதால அது படிப்பை அழிக்குதுன்னு சொல்லியிருப்பார் போல...
சும்மா அந்தாள வம்புக்கு இழுத்துக்கிட்டு...
விடுப்பா...
:-)

வெத்திலை போட்டுகிட்டு இருந்தவன் தன் கோடாரியை தீட்டிக் கொண்டும் இருந்திருப்பான்...
மத்தவன் அதே தேஞ்சு போன கோடாரியையே யூஸ் பண்ணிட்டு இருந்திருப்பான்...
அம்புட்டு தான்...
:-)

வேத்தியன் said...

வர்ர்ர்ட்ட்டாஆஆஆஆ....

வழிப்போக்கன் said...

@ வேத்தியன்..

ஓக்கே விட்டுருறேன்...
:)))

வழிப்போக்கன் said...

வெத்திலை போட்டுகிட்டு இருந்தவன் தன் கோடாரியை தீட்டிக் கொண்டும் இருந்திருப்பான்...
மத்தவன் அதே தேஞ்சு போன கோடாரியையே யூஸ் பண்ணிட்டு இருந்திருப்பான்...
அம்புட்டு தான்...
:-)//

சரியாச்சொன்னீங்க....
:)))