5/28/2009

இவன் யார்???

நண்பர்களே....

நம்மளயும் ஒரு மனுஷன்னு மதிச்சு ஒரு தொடர்பதிவுக்கு அழைச்சிருக்காங்க....
அழைத்த அந்த பெரிய உள்ளம் ஜமால் அண்ணா தான்...அதோட இது தான் நம்மளோட முதலாவது தொடர் பதிவு...
:)))
சரி விஷயத்துக்கு வருவோம்..

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எங்கப்பா இந்த ஜோசியம் எல்லாம் பாக்குறது இல்ல...சோ என்னோட அண்ணாவோட பேருக்கு ரைமிங்கா வச்சிருப்பார் போல...(அண்ணா பேர் பிரசன்னா..)....எனக்கு ஆரம்பத்தில் பிடிக்க வில்லை..போகபோக பிடிச்சுபோச்சு...

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
என் நண்பன் இறந்த போது...

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ஹ்ம்ம்..
முன்பு ஆசிரியரிடம் திட்டு வாங்கியதுண்டு..இப்ப அதுக்காகவே நல்ல பேர் வாங்குகிறேன்..இப்போதெல்லாம் என்னயே என் எழுத்து கவர்கிறது....

4.பிடித்த மதிய உணவு என்ன?
அவரைக்காய் கறி(அவரைக்காய் கொட்டையுடன்..),வல்லாரை கீரை, உருளைக்கிழங்கு பொரியல்,கோலி ஃப்லவர் கறி....

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
யோசிச்சுத்தான் பாக்கனும்...
:)))

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் தான் குளிக்கப்பிடிக்கும்..காரணம் அலையோடு விளையாட விருப்பம்....

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஹ்ம்ம்...
முகத்தத்தான் பார்ப்பேன்..

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது : எல்லா விஷயத்துலயும் கலக்கனும்னு நினைக்குறது..

பிடிக்காதது : சில வேளைகளில் என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போவது...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
இதுக்கு விடை கொடுக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை...

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
கடவுள்...இவர தவிர இப்போதுக்கு எல்லாரும் பக்கத்துல தான் இருக்காங்க...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கறுப்பு காற்சட்டை,மண் நிற டீ-சர்ட்....

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கம்ப்யூட்டர் ஸ்க்ரீனப்பாத்து கிட்டு "சகல கலா டாக்டர் "(வசூல்ராஜா MBBS)கேட்டுகிட்டிருக்கன்...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சிவப்பு..

14.பிடித்த மணம் ?
சாரி.. நம்மளுக்கு இந்த மணம் எல்லாம் தெரியாது...

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அஸீஸ்- நல்ல அழகான கவிதைகள் எழுதுவார்..
அன்புடன் அருணா- இவரும் நல்லா கவிதகள் வரைவார்..
புதியவன்- அட இவர் கூட சூப்பரா கவிதைகள் தீட்டுவார்..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
குறித்து சொல்லவே முடியாது...
இவரு போட்டா அது ஹிட்டாகாம போகாது...

17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கட்(T20)

18.கண்ணாடி அணிபவரா?
நம்ம கண்ணோட பவரே பவரு..(அட போட மாட்டேன்ங்குறதத்தான் அப்பிடி சொன்னேன்..)


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைச்சுவைப்படம் பிடிக்கும்..
கமல்லோட எல்லா படம்முமே பிடிக்கும்...



20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்



21.பிடித்த பருவ காலம் எது?
ஜில்லுன்னு ஒரு மழைக்காலம்...

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
மீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்போதெல்லாம் வெட்டியா இருக்கனோ அப்பெல்லாம் மாத்துவன்...


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது : குழந்தைகளின் சிரிப்பு சத்தம்..

பிடிக்காதது : வாகன இரைச்சல்...



25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
யாழ்ப்பாணம் தான்... தூரம் சரியாகத்தெரிய வில்லை....

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நிறைய உண்டு..குறிப்பா எல்லாரயும் நல்லா கலாய்ப்பேன்...



27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தொடர்ந்து உண்மை பேசுதல்...
:)))



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
என் மனம் தான்..சிலவேளை என்னையே மீறிவிடும்..



29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
யாழ்ப்பாணம்...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
எல்லோராலும் விரும்பும் படியாக...


31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
சாரி பாஸ்..அதான் சொன்னேன்ல....


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை...


எப்பிடி நம்ம பதில்கள்...???

தொடர் பதிவுக்கு நான் அழைப்பது...
அஸீஸ் -
HUMMING BIRD
அன்புடன் அருணா - அன்புடன் அருணா
புதியவன் - :: வானம் உன் வசப்படும் ::

இவன் யார்???SocialTwist Tell-a-Friend

5/24/2009

இத கட்டினா என்ன கட்டாம போனா என்ன???




ஹாய் நண்பர்களே...

தலைப்ப பாத்துட்டு "கல்யாணம் கட்டுறதப்பத்தி"தப்பா நினைக்க வேண்டாம்....
நான் கட்டடம் கட்டுறதப்பத்தி பேசுறன்...
நான் பார்த்து ரசித்த சில நகைச்சுவைப்படங்களை உங்களுக்கு காட்டி சந்தோஷப்படலாம்ன்னு உங்களுக்கும் காட்டுறேன்...

இந்த படங்களில் உள்ள கட்டடங்களை கட்டினால் என்ன,கட்டா விட்டால் என்ன???
நீங்களே பாருங்கள்...












யாருக்காக இந்த ATM இயந்திரம்???




ஆத்துர அவசரத்துக்கு இதுல எப்பிடி போறது???

_____________________________________________________________



இந்த பதிவ படிக்கிற நண்பர்களுக்கு இந்த படம் இலவசம்....
இது "சோனியா காந்தி 21 வயதில்"....
படத்த எல்லாம் பாத்தாச்சுல்ல ....

பி.கு:- இவன் என்னடா எப்ப பாத்தாலும் சும்மா படங்களயும் வீடியோவுமா போடுறானேன்னு நினைப்பவர்களுக்கு..கற்பனை தயாராகிகிட்டு இருக்கு....விரைவில் வரும்...

பை..பை..

இத கட்டினா என்ன கட்டாம போனா என்ன???SocialTwist Tell-a-Friend

5/18/2009

நம்ம இந்திய வீரர்களின் ஆட்டம்...

ஹாய் நண்பர்களே...


என்னடா இவன் ஒரே கிரிக்கட் வீடியோவா போட்டு கிட்டிருக்கானேன்னு கோப்பப்படாதீங்க....
(இவற்றை போட 2 காரணம்..ஒன்னு நம்மளுக்கு கிரிக்கட் பற்றி கொஞ்சம் தெரியும்....மற்றது பதிவு போட வேற விஷயும் இல்ல...)
:)))

நம்ம வீரர்களின் டான்ஸ் எப்பிடின்னு பாக்கலாமா???


முதல்ல நம்ம ஹர்பஜன் சிங்...



அடுத்து தமிழக வீரர் தினேஸ் கார்த்திக்...



இப்ப நம்ம இர்பான் பதான்...



நம்ம சாந்த்க்கு மட்டு 2 வீடியோ....
பார்த்து பகிழுங்கள்...






கலக்கல் ஆட்டம் இல்ல???
ஒக்கே பிடிச்சா வோட்டயும் குத்துங்க...
பை..பை..






நம்ம இந்திய வீரர்களின் ஆட்டம்...SocialTwist Tell-a-Friend

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் போடுங்க....

ஹாய் நண்பர்களே....

ஐ.பி.எல் போட்டிகள் உலக அளவில் பிரபலம் அடைந்து வருகிறது....
2வது தொடரில் நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் கலக்கி வருகிறது..ஹேடன் ஒவ்வொரு போட்டியிலும் பின்னி பிடலெடுக்கிறார்..

அண்மையில் நான் பார்த்து மகிழ்ந்த உற்சாகம் மிகுந்த வீடியோ இது...
இந்திய வீரர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு வீரர்களும் சேர்ந்து விசிலடிக்கும் இந்த வீடியோவை நீங்கள் பார்த்தே ஆகவேண்டும்....



எப்பிடி விசில்???

ஓக்கே அடுத்த பதிவில் பார்க்கலாம்...
( இந்த பதிவு சற்று மொக்கையாக இருப்பின் மன்னிக்கவும்...:)))
பை ..பை..

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் போடுங்க....SocialTwist Tell-a-Friend

5/09/2009

வில்லு படத்தில் அழிக்கப்பட்ட பில்லா கிண்டல் காட்சிகள்..

இப்போ ஒரு நாலு மாசத்துக்கு முன்னுக்கு வந்து வாசூலை அள்ளிக்குவித்த(அதான் எல்லாருக்கும் எப்பிடி குவிச்சுதுன்னு தெரியுமே..) "வில்லு" திரைப்படத்தில் அஜீத்தின் "பில்லா" படத்தை கிண்டல் அடிக்கும் விதமாக எடுக்கப்பட்டு பின்னர் அழிக்கப்பட்ட காட்சிகளை நீங்கள் சில வேளை பார்த்திருக்க மாட்டீர்கள்....

அப்பிடி பாக்காதவங்க இப்ப பாருங்க....
சீ என்ட் எஞ்ஞாய்....
:)))





எப்பிடி நம்ம வடிவேலுவோட காமெடி???
ஹையோ ஹையோ...

இன்று அன்னையர் தினத்தை கொண்டாடும் என்னருமை அன்னயர்களுக்கு வாழ்த்துகள்....

அடுத்த பதிவில் சந்திப்போம்...
பை..பை..

வில்லு படத்தில் அழிக்கப்பட்ட பில்லா கிண்டல் காட்சிகள்..SocialTwist Tell-a-Friend