11/04/2010

எந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்..!!!


முதல்ல நான் உங்களிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்...ஏன்னா நீங்கள் நினைக்கக்கூடும்..என்னடா இவன் இருந்துட்டு எப்போதாவது ஒரு போஸ்ட்டா போடுகிறான்னு...
சில பல முக்கிய வேலைகள் இருந்தமையால் ப்ளாக் பக்கம் தலைவைக்க முடியவில்லை....

சரி தலைப்பை எல்லாரும் பார்த்துட்டு இவன் அப்புடி என்னத்த கலாய்த்து கிழிக்கப்போறான்னு நினைக்ககூடும்....
நாமலும் எங்களால் முடிந்தளவு எந்திரனை கலாய்க்கும் ஒரு முயற்சியாக "ஒரு short movie" எடுத்திருக்கிறோம்.அதுதான் இந்த "சந்திரன்"



எனவே இந்த படம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதல்ல...

ஓவரா அறுக்காமல் நேராக விஷயத்துக்கு வருகிறேன்...படத்தப்பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களை கமெண்ஸ்ஸாக சொல்லுங்கள்....


அட இந்த படத்தில் இவனுக்கு என்ன வேலைன்னு கேக்குறீங்களா... நான் தான் இந்த படத்த இயக்கியிருக்கேன்....
இப்படத்தில் பங்கு பெற்ற மற்ற நண்பர்கள் வருமாரு...

Starring - Priyadharshan, Duel, George, Abienash, Sabareesan, Sutharman, Sajanthan, Aravinthan

Cinemotography - Praveen, Avenash, Partheepan,
Dialogue - Priyadharshan, Praveen
Produced by - Partheepan
Editing - Avenash
Story, Screenplay, Direction - JS Praveen


இதோ உங்களுக்காக....





எப்பூடி நம்ம படம்???
:)))

எந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்..!!!SocialTwist Tell-a-Friend

9/30/2010

எந்திரன்- விமர்சனம்....

ஹாய் தோழர்களே...

மிக அரிதாய் கிடைத்த எந்திரன் "வி.ஐ.பி" காட்சி இலவச டிக்கட் மூலம் எந்திரனை முதன் முதலில் பார்க்கலாம் என்று ஓடோடி சென்றேன்...

சன் டீவியில் சங்கரும் ரஜினியும் குடுத்த எதிர்பார்ப்பை முழுமையாய் திருப்திப்படுத்தவில்லை....

இனி கதையை சுருக்கமாக‌ பார்ப்போம்...



வசீகரன்(ப்ரொப்பசர் ரஜனி) 10 வருட கால உழைப்பு மூலம் மனித உருவம் கொண்ட எந்திரனை உருவாக்குகிறார்..அவருக்கு கருணாஸும் சந்தானமும் அஸிஸ்டண்டா இருக்காங்க... அதுக்கு "சிட்டி"(சிட்டி பாபு)ன்னு பேர் வச்சு,அத அனுமதி வாங்க முன்னால சமூகதோட பழக விட்டு அதோட நடவடிக்கையை பாக்கலாம்ன்னு வசீ சொல்ராரு...வசீயோட காதலியா சானா(ஐஸ்)இருகாங்க...



சிட்டிய பழக விட்டு பார்கிறாங்க...சிட்டி சானாக்கும் பல உதவிகளை செய்கிறது..பிறகு உலகிற்கு இந்த சிட்டிய அறிமுக படுத்தும் விழாவுக்கு வர்ர வசீயோட குரு ப்ரொப்பசர் "போக்ரா"க்கு இந்த ரோபோவ பாக்க பொறாமையா இருக்கு...பிறகு சிட்டிய‌ அனுமதி செய்கிற பரீட்சைல சிட்டியை இலகுவாக கெட்டவனாக மாற்றலாம்ன்னு சொல்லி அனுமதிக்க மறுக்கிறார் போக்ரா....

பின் சிட்டியின் திறமையால அது மக்களை பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுகிறது..ஆனால் அதுக்கு உணர்வுகள் இன்மையால் பல விபரீதங்கள் ஏற்படுகிறது...

அதனால் அதுக்கு உணர்வுகள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்குவேன்னு போக்ரா சொன்னதால் அதுக்கு உண்ர்வுகளை புகுத்துகிறார் வசீ..

பின் உணர்வுகளை புகுத்தியதால் சிட்டிக்கு சானா மீது காதல் வருகிறது...இது வசீக்கு தெரிய வரும் போது இது நடக்காது என்று ரோபோக்கு புரியவைக்கு வசீயும் சானாவும் முயன்ற போதும் சிட்டிக்கு சானா மீது காதல் குறையவில்லை..இதனால் கோபம் கொண்ட வசீ தன் கையாலேயே சிட்டியை உடைத்து விடுகிறார்

பின் அதனை குப்பைபொறுக்கும் இடத்தில் தேடி எடுத்து அதுக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார் போக்ரா...காரணம் அவரின் வியாபாரதிற்கு சிட்டியின் ஆக்க முறையை பயன்படுத்தலாம் என்பதால்....
அத்துடன் சிட்டிக்கு கெட்ட எண்ணங்கள் உள்ள ஒரு "ரெட் சிப்"ஐயும் பொருத்துகிறார்..
அத்துடன் சிட்டி ஒரு அசுரன் ஆகிறான்...பின்னர் சானாவை கடத்தி சென்று தன் ராஜ்ஜியதில் வைக்கிறான்...அங்கு சிட்டியை போலவே அசுர குணம் கொண்ட நூற்றுக்கணக்கான ரொபோவை சிட்டியே உருவாக்கி உள்ளான்...
பின் அங்கிருந்து சானாவை வசீ மிட்டாரா..சிட்டியின் ராஜ்ஜியம் அழிக்கப்பட்டதா என்பதே மிகுதி கதை...


படத்தில் சந்தானமும் கருணாசும் பெரிதாக பயன் படுத்த படவில்லை...அத்துடன் சில இடங்களில் லொஜிக் விளங்கவில்லை..குறிப்பாக‌
உடைக்கப்பட்ட சிட்டி தானாக எப்படி உயிர் பெற்று போக்ராவுடன் காரில் ஏறுகிறது..அத்துடன் கடைசி சண்டையில் சில காட்சிகள் புரியவில்லை....அது நீங்கள் படம் பார்த்தால் அது புரியும்....


பாடல் காட்சிகளிலும் படத்தின் காட்சிகளிலும் பிரம்மாண்டம் தெரிகிறது....அந்த பிரம்மாண்டதிற்காகவே இன்னும் ஒருமுறை பார்க்கலாம்ன்னு தேன்றுகிறது....
:)

ரஜனியும் ஐசும் நடிப்பில் ஜொலிக்கிறார்கள்....வில்லன்(போக்ரா) புதிய முகமாக தெரிகிறார்...அத்துடன் அநேக தெரிந்த முகங்கள் படத்தில்..

கதையை பொருத்தவரை முதல் பாதி அளவிற்கு இரண்டாம் பாதி இல்ல....
இருந்தாலும் இந்தளவிற்கு முயற்சி செய்த சங்கரை பாராட்டலாம்...



மொத்ததில் எந்திரன் ‍எதிர்கால தமிழ் சினிமாவிற்கு ஒரு வழிகாட்டியாக அமைவான் என்பதில் ஐயமில்லை........

எந்திரன்- விமர்சனம்....SocialTwist Tell-a-Friend