நம்ம சக வலைப்பதிவு அண்ணாக்கள் எல்லாம் கவித கவிதயா வடிச்சு தல்லுறத பாத்த நம்மளுக்கும் கவித எழுதனும்ன்னு ஒரு ஆசை..
அதன் ஒரு வெளிப்பாடே இந்த கவித(அப்பிடின்னு நெனைச்சு தான் எழுதுறேன்)
நேற்று மாலை வகுப்பு முடிந்து பேரூந்தில் இருந்த போது தோன்றியது...
ஆரம்பிக்கிறேன்..
"காலையில் சாலை"
அதிகாலை அலாரம் வைத்து
அம்மா எழுப்பிவிட
கனவுப்புத்தகத்தை மூடிவிட்டு
கண்முழித்தேன்...
வறண்டு கிடந்த முகத்தைக் கழுவி
தேநீரை உறிஞ்சினேன்...
இஸ்திரித்த சீருடையை அணிந்து
இட்லி இரண்டை விழுங்கினேன்..
அடுக்கி வைத்த புத்தக பையுடன்
அவசரமாக புறப்பட்டேன்..
நேற்று கொடுத்த வீட்டுவேலையை
உடனே சென்று முடிக்க வேண்டுமே
என்ற நினைவில்..
இன்று என் அதிர்ஷ்டம் -நெருங்கியது
ஒரு அழகிய பேரூந்து..
பாய்ந்து ஏறினேன் -
மனதில் மகிழ்ச்சியுடன்..
கால்வாசி தூரம் விரைந்தது.
அதன்பின் தான் அகப்பட்டேன்
இந்த நேரத்தைப்போக்கி வெறுப்பை-
கூட்டும் "வாகன நெருக்கடியில்"..
:(((
திறந்து கிடந்த ஜன்னலின் ஊடாக
எட்டிப்பார்த்தேன்..
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
அசையாது நின்றன வாகனங்கள்..
"பிச்சை போடுங்கய்யா.."கேட்டது-
வெளியில் ஒரு ஏழை..போட்டேன்
மகிழ்ச்சியில் காணப்பட்டான் அவன்..
இதனால் இன்று நல்ல வருமானம் போலும்..
பக்கத்தில் இருந்தவன் பற்றினான்-
ஒரு சிகரட்டை..
காற்றும் அவன் பக்கம்
கண்றாவி மனம் என்னிடமே வந்தது..
:(((
பொன்னான நேரம் கரைந்து போக
காணப்பட்டேன் கவலையுடன்..
ஒருவழியாக பள்ளியை அடைந்தேன்..
இறங்கி ஓடினேன் அவசரமாக..
வகுப்பை அடைந்தேன்..
அதுவும் வீணானது
ஆசிரியர் சொன்னார்..
"மணி அடிச்சாச்சு வெளியே நில்"என்று..
_______________________________________________
எப்பிடி கவித???
ஏதாவது பிழை இருந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்ளவும்..ஏனென்றால் இது என் கன்னிக்கவிதை....
பிடித்தால் வோட்டயும் குத்துங்கள்..
அடுத்த பதிவில் சந்திப்போம்......