வணக்கம் நண்பர்களே....
இதுவும் ஒரு படங்கள் உள்ள பதிவு தான்....
எனக்கு மின்னஞ்சலில் வந்தது...
நான் பதிலளிக்க முனைந்தேன்....
முடிந்ததா இல்லயான்னு கடைசில சொல்றேன்....
இப்ப கேள்விய பாருங்க..(ஆங்கிலத்தில் உள்ளது..பொறுத்துக்கொள்ளவும்..)
என்ன மக்கா??
எப்பூடி???
இப்ப சொல்லுறேன்...
நம்மளால “முடியல..”
:)))
முடிந்ததான்னு பின்னூட்டத்துல சொல்லுங்க...
பிறகு சந்திப்போம்...
:)))
7/24/2009
4 கேள்வி முடிந்தால் பதிலளியுங்கள்... :)))
வழிப்போக்கன் 7/24/2009 Comments (19 )
Labels: பொது
7/19/2009
நிதி நெருக்கடியால் பிரபல நிறுவனங்களின் சின்னங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் :)))
நண்பர்களே வணக்கம்...

வழிப்போக்கன் 7/19/2009 Comments (7 )
Labels: நகைச்சுவை
7/17/2009
ஆரம்ப பள்ளி ஞாபகங்கள்...
நண்பர்களே வணக்கம்...
என்னடா இவன ரொம்ப நாளா காணோமேன்னு தேடின நல்ல உள்ளங்களுக்கு முதலில் என் நன்றிகள்...
அது வேறு ஒன்னும் இல்ல... நாளானா இந்தப்பரீட்சைய மட்டும் வச்சுடுறாங்க...
அதுக்கு முகம் கொடுக்கத்தான் இவ்வளவு நாள்...
இனி வழமை போல் வருவோம்ல....
என்னை 2வது தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள்....ஐந்தறைப்பெட்டிஎன்னும் வலையை நடாத்தும் சுபாங்கன் அண்ணாதான் அழைத்தார்...
இதில் என் ஆரம்ப பள்ளி பற்றி குறிப்பிட சொல்லி இருக்கிறார்கள்...
சரி ஆரம்பிக்கலாமா.......
அப்போ எனக்கு 6 வயசு இருக்கும...montessori(தொடக்கப்பள்ளிக்கு முன்னர் அடிப்படைகளை சொல்லித்தரும் இடம்..) முடிச்சுட்டு இருந்தேன்...
அப்பதான் என்னை றோயல் கல்லூரி என்னும் பிரபல பாடசாலையில் சேர்த்தார்கள் என் பெற்றோர்....
ரொம்ப பெரிய பாடசாலை.முதல் கொஞ்ச நாள் பிடிக்காமல்த்தான் இருந்தது..போகபோக பிடித்தது...என் முதல் வகுப்பு ஆசிரியர் பெயர் தவகுமார் மிஸ்..முதலாம் வகுப்பு என்பதால் ரொம்ப பணிவுடன் சொல்லித்தந்தார்..அப்ப என்ன அ,ஆ,இ,ஈ தானே ஜாலியாக இருந்தது... நிறைய நண்பர்கள்...சந்தோஷமா போச்சு வாழ்க்கை..இதுதான் என் முதலாமாண்டு படம்..(இதுல நான் எங்க நிக்கிறேன் என்று சொல்ல மாட்டேனே...)
2ம் வகுப்புக்கு வந்ததும் நம்ம முதுகுல புததக பைய ஏத்தீட்டாங்க ஆனாலும் அப்ப கொஞ்ச குறைவுதான்..புது வகுப்பு எல்லாம் சந்தோஷமா இருந்தது..எனது 2வது மற்றும் 3வது எடுத்தவங்க மகில்ராஜன் மிஸ்...
அப்பெல்லாம் நான் அவரேஜ் ஸ்டூடண்ட் தான்...ஏதோ என்னால முடிஞ்சத படிப்பேன்..ஆனாலும் பெற்றோர் கூட்டத்துல எல்லா ஆசிரியர்களும் “இவரோட அண்ணா அளவுக்கு படிக்கிறார் இல்ல”ன்னு சொல்லுவாங்க..
அப்பிடியே ஒருமாதிரியா 4வகுப்பு வந்தது..
லோகநாதன் மிஸ்...இவங்க என்னை கொஞ்சம் உற்சாகப்படுத்தினாங்கன்னுதான் சொல்லனும்..இவங்க வகுப்புல தான் நான் ஒருமுறை கணித பாடத்துக்கு 100 மார்க்ஸ் வாங்கினேன்..(அட நிஜமாதான்... :))) அதுல இருந்து தான் இவனும் கொஞ்சம் படிப்பான்னு சொல்ல தொடங்கினாங்க...இந்த வருடமும் மிக சந்தோஷமான வருடம்...
இனி 5ம் ஆண்டு.....
இந்த வருடம் தான் புலமைப்பரிசில் பரீட்சை...என்னை விசேட தனியார் வகுப்புகளுக்கு அனுப்ப தொடங்கிய ஆண்டும் இது தான்.... நானும் அனுப்பிய இடங்களுக்கெல்லாம் போய் படிச்சேன்...வருட முடிவில் பரீட்சையும் வந்தது... நானும் எழுதினேன் >>>>>>>>>>>>> பாஸ் பண்ண முடியல...அந்த வருடம் எனக்கு மறக்க முடியத வருடம்....சில ஏச்சுபேச்சுக்கள் , சில ஆதரவுகள்.....
அப்பிடியே 6 வது வகுப்புக்கு போனேன் ....இதுதான் என் ஆரம்ப கல்வி அனுபவம்..
என் ஆரம்ப பள்ளிப்பக்கம் இப்பவும் நான் போக நேரும் போது பழைய ஞாபகங்கள் என்னை ஈர்க்கும்....(இப்பவும் அதே பள்ளியில் தான் படிக்கிறேன்..கடைசி வருடம்..)
என் நண்பர்கள் இன்னும் என்னுடன் இருப்பதால் இப்பவும் ஜாலிதான்...ஆனாலும் எந்த சுமையும் இல்லாத அந்த நாற்கள் இன்னும் என் நெஞ்சில் பசுமையாய்....இந்த பசுமையான நினைவுக்கு என்னை அழைத்த சுபாங்கன் அண்ணாவுக்கு நன்றிகள்....
இனி நான் அழைக்கணும்மில்ல....
1. தமிழ்துளி - தேவா அண்ணா
2. கற்போம் வாருங்கள் - ஜமால் அண்ணா
3. பொன்னியின் செல்வன் - கார்த்திகைப்பாண்டியன் அண்ணா
அப்போ அடுத்த பதிவில் சந்திப்போம்...
:)))
வழிப்போக்கன் 7/17/2009 Comments (11 )
Labels: அனுபவம்