எல்லாருக்கும் வணக்கம்...
இது அரசியல் கூட்டமோ,கட்சி மாநாடோ இல்ல இது மானாட மயிலாட பார்த்தவன் ஒருவனின் புலம்பல்....(அந்நியன் ஸ்டைல்ல.. :))) )
நேற்று ஞாயிற்றுக்கிழமை..(19/04/2009)..IPLல்ல தென்னாபிரிக்காவுக்கு மாத்தினதும் மாத்தினான் அத நம்மூர் டீவி எதிலயும் போட மாட்டேங்குறான் என்ற கடுப்புல வந்து இருந்தேன்..
முன்னாடி மேசைல ரிமோட் இருந்திச்சு..
போட்டு பாக்கலாம்ன்னு எடுத்து போட்டேன்..
அப்பதான் போட்டதும் வந்தது கலைஞர் டீவி...
மானாட மயிலாட தான் போய்கிட்டு இருந்திச்சு..சரி இது வரைக்கும் பாத்ததில்ல இன்னைக்காவது பாப்பமேன்னு போட்டேன்..(அட நிஜமா தாங்க..:))) )
முன்னால வந்து நின்னுச்சு காம்பேர் “டா”வும் காம்பேர் “டீ”யும்(அதாங்க அந்த 2 பேர்)..
முதல்ல அந்த “டா” கத்திச்சு...
“அடுத்து நாம பாக்க போறது ரஞ்ஜித் ஆண்ட் ஐஸ்வரியாவோட பர்ஃபாமன்ச..”என்றது...
இருவரும் வந்து ஆடினர்...
ஏதோ திருவிழா ரவுண்டாமாம்...பரவாஇல்லை சுமாராகத்தான் ஆடினார்கள் (பொய் சொல்ல கூடாதில்ல..)
திருப்பியும் ரெண்டு காம்பேரும் வந்தார்கள்...திருப்பியும் அந்த “டா” கத்திச்சு..
“ரஞ்ஜித் ஆண்ட் ஐஸ்வையாவோட பர்ஃபார்மன்ஸ் உண்மையிலேயே ஒரு திருவிழாவை பாத்த மாதிரி இருந்திச்சு”ன்னான்...
உடனே அந்த பொண்ணு வாங்கி (ஐஸ்வரியா) “இன்னும் பர்ஃபார்மன்ஸ் முடியல “ன்னு சொல்லீட்டு திருப்பியும் சாங்க போட்டுட்டு ஒரு 1 நிமிஷம் ஆடிச்சு...
திருப்பியும் “டா” வாங்கி “இப்ப தான் நிஜமான திருவிழா முடிஞ்சிருக்கு...கலா மாஸ்டர் நீங்க சொல்லுங்க “என்றான்..
மாஸ்டர் மைக்க வாங்கி “இன்னும் முடியல..ன்னுட்டு இதோ நானும் வரேன்”என்ற்றாங்கோ...
அவங்களும் அங்க போய் திருப்பியும் ஒரு நிமிஷம் ஆடி முடிச்சுட்டு..
குஷ்புவ பாத்து ”இன்னும் முடியல ’குஷ்’(குஷ்ஷாமாம்..) இங்க வா”என்றார்..
குஷ்பு கூடவே ரம்பாவும்(எங்க தன்னையும் திருப்பி கூப்பிட வைக்காம :))) ) அங்க போய் மறுபடியும் ஒரு நிமிஷம் ஆடி முடித்தனர்...(இத பாத்து முடிக்கவே ’ஷபா முடியல’)..
முடிஞ்சாச்சா..இந்த முறை “டீ” வாங்கி ”கலா மாஸ்டர் இப்ப சொல்லுங்க எப்பிடி இவங்களோட பர்ஃபார்மன்ஸ்???” என்றது...
கலா மாஸ்டர் “ரஞ்ஜித் பின்னீட்டடா...ஸ்ஸூப்பர்ப்.., ஸுப்பர்ப்.., ஸூப்பர்ப்..என்னோட மார்க்ஸ் 20”என்றார்..(பாராட்ட தான் வேணும் ஆனா இது கொஞ்சம் ஓஓஓவர் தானே???)
பிறகு “டா” வாங்கி “குஷ்பூ மேடம் நீங்க சொல்லுங்க”என்றான்..
‘குஷ்’ மைக்க வாங்கி “ ஐசூ வாட்ட எஸ்ப்பரஷன்??..’உம்மா’ என்றார்..(என்னாத்திது???) மை மார்க்ஸ் ஆல்சோ 20”என்றார்..இவரோட பங்குக்கு வெளுத்து வாங்கீட்டு போக ”டீ” அடுத்து ”ரம்பா மேடம் நீங்க சொல்லுங்க”ன்னுச்சு...
ரம்பா வாங்கி “அவங்க சொன்னாப்பிறகு நான் என்ன சொல்லுறது என்னோட மார்க்ஸும் 20”என்றார்..(இதுலயும் காப்பி அடிக்கிற பழக்கம் போகவில்லயா???)..
இதுக்கு பிறகு என் வாழ்க்கையிலேயே இத பாக்குறது இல்லன்னு முடிவு பண்ணி டீவியயே ஆஃப் பண்ணீட்டேன்..
என் சோக கதைய கேட்டுடீங்க இல்ல??? இனிமேல் இத பாக்குற நோக்கம் இருந்தால் அத கைவிடுவதே நல்லது...
:)))
ஓக்கே...
நான் இதுக்கு ரூம் போட்டு ஃபீல் பண்ணனும் .. நான் வரேன்..
:)))
4/19/2009
மானாட மயிலாட..ஒரு கேவலமான பார்வை..
Subscribe to:
Post Comments (RSS)
76 Responses:
நீங்க ரொம்ப லேட் தல..
நாங்க எல்லா முதல் பாகத்துலையே நொந்துட்டோம்..
இது எத்தனாவது பாகம் மூனா, நாலா??
எப்படியோ...
பார்த்தால் சரி???????
தமிழனை காட்டிக்கொடுத்து,உயிர் வளர்க்கும்,முதுகு எலும்பு இல்லாத கோழை:கிழமும்,மாமியும் மண்ணில் போனால்தான்,தமிழன் வாழ முடியும்!
அடக் கொடுமையே.. அந்தக் கெறகத்த பார்க்குறதுக்கு தூக்கு போட்டுத் தொங்கலாம் நண்பா.. அதுலையும் ஜட்சுங்கர பேருல அந்த மூணு லூசுங்களும் சொல்ற கமெண்ட்ஸ் கேட்டா மண்டை காயும் நண்பா..
ரொம்ப தைரியம் வழிப்போக்கா!!
மா.மா. 3 ஐப்பற்றி பகிரங்கமான பதிவு!!
துணிச்சல்தான்!!
கனடா தமிழ் மக்கள் இதைப் பார்க்க ப்ளேன் புடுச்சு வந்தாங்களே!! பாக்கல!!
ஹா ஹா ஹா கலக்கல் காமெடி வர்ணனை
ம்ம்ஹூம் இப்படியெல்லாம் பதிவுஎழுதி படிக்கிறவங்களை ஏன் கொலைபண்ணனும் என்றுதான் நினைத்து கனவுலேக்கூட அதைப்பற்றியெல்லாம் நினைப்பது கிடையாது........
ஃப்ரீயா வுடு மாமு ஃப்ரீயா வுடு... பாவம் அவங்களுக்கும் ஏதாவது செய்தாகனும் அட ஒரு சிலபேருக்கு வேலை கிடைக்குதுலே....
குருவி படத்தில குஷ்பூட ஆட்டதை பாத்து பயந்ததால இனிமே இப்பிடி ரிஸ்க் எடுக்கிறதில்லன்னு இருந்தேன்., ஆனா நேற்று விதிவசத்தால ரிஸ்க் ரிப்பீட் ஆயிடுச்சு :(
வில்லு படத்துல தான் குஷ்பூ ஆட்னாங்கோண்ணா..!
:)))
லோகு said...
நீங்க ரொம்ப லேட் தல..
நாங்க எல்லா முதல் பாகத்துலையே நொந்துட்டோம்..
இது எத்தனாவது பாகம் மூனா, நாலா??//
அப்டீங்களா??
விதி யார விட்டுச்சு???
:)))
SUREஷ் said...
எப்படியோ...
பார்த்தால் சரி???????//
நல்ல மணம் அண்ணா உங்களுக்கு..
கார்த்திகைப் பாண்டியன் said...
அடக் கொடுமையே.. அந்தக் கெறகத்த பார்க்குறதுக்கு தூக்கு போட்டுத் தொங்கலாம் நண்பா.. அதுலையும் ஜட்சுங்கர பேருல அந்த மூணு லூசுங்களும் சொல்ற கமெண்ட்ஸ் கேட்டா மண்டை காயும் நண்பா..//
அனுபவம் பேசுது போல???
:)))
thevanmayam said...
ரொம்ப தைரியம் வழிப்போக்கா!!
மா.மா. 3 ஐப்பற்றி பகிரங்கமான பதிவு!!
துணிச்சல்தான்!!//
உண்மையில் இது ஒரு விழிப்புணர்வுப்பதிவு...
:)))
thevanmayam said...
கனடா தமிழ் மக்கள் இதைப் பார்க்க ப்ளேன் புடுச்சு வந்தாங்களே!! பாக்கல!!//
இதத்தான் வினைய விலைகொடுத்து வங்குறது என்பதா???
:)))
அபுஅஃப்ஸர் said...
ஹா ஹா ஹா கலக்கல் காமெடி வர்ணனை
ம்ம்ஹூம் இப்படியெல்லாம் பதிவுஎழுதி படிக்கிறவங்களை ஏன் கொலைபண்ணனும் என்றுதான் நினைத்து கனவுலேக்கூட அதைப்பற்றியெல்லாம் நினைப்பது கிடையாது........
ஃப்ரீயா வுடு மாமு ஃப்ரீயா வுடு... பாவம் அவங்களுக்கும் ஏதாவது செய்தாகனும் அட ஒரு சிலபேருக்கு வேலை கிடைக்குதுலே....//
அதுக்கு நாங்க தான் கிடைச்சமா???
Ramanan Satha said...
குருவி படத்தில குஷ்பூட ஆட்டதை பாத்து பயந்ததால இனிமே இப்பிடி ரிஸ்க் எடுக்கிறதில்லன்னு இருந்தேன்., ஆனா நேற்று விதிவசத்தால ரிஸ்க் ரிப்பீட் ஆயிடுச்சு :(//
சாரி பாஷூ..
அது குருவி இல்ல வில்லு...
:(
ஸ்ரீமதி said...
:)))//
நன்றி ஸ்ரீமதி...
லோகு said...
நாங்க எல்லா முதல் பாகத்துலையே நொந்துட்டோம்..
இது எத்தனாவது பாகம் மூனா, நாலா??
பெரிய ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்....
பதிவரின் ரசனை மாறுபட்டு இருக்கலாம்.தவறில்லை.ஆனால் பின்னூட்டத்தில் எல்லோரும் ஒரே ஜால்ரா ஜல்லி அடிக்கிறீங்களே!லூசா நீங்க:)
ஒரு லைவ் நிகழ்ச்சியில் ஒரு பெண் நடன இயக்குநர்,எந்த தொலைக்காட்சியிலும் நிகழ்த்தாத நடனம்,அரங்க அமைப்புன்னு சில பாராட்டத்தக்க விசயங்களும் இருக்கவே செய்கிறது.
கண்ணு ரெண்டு இருக்கும்போது ஒரு கண்ண மூடிகிட்டுத்தான் பின்னூட்டம் போடுவேனா எப்படி:)
நான் இந்த விளையாட்டுக்கு வரலிங்களோ
ஞானி ஒரு தடவை இந்த நிகழ்ச்சி "மானாட மயிலாட" இல்லை...
"மானாட மார்பாட" என்று சொன்னதாக நினைவு....
இந்த மாதிரி விபரீதமா நடக்க கூடாதுன்னு தான் நான் இந்த கூத்தை பாக்குறது இல்லங்கோ ......மாட்டிகிட்டியா நீ ...ஹா ஹா ஹா
//சீனு said...
ஞானி ஒரு தடவை இந்த நிகழ்ச்சி "மானாட மயிலாட" இல்லை...
"மானாட மார்பாட" என்று சொன்னதாக நினைவு....//
அதிலும் கிருத்திகா ஐஸ்வர்யா நிஷா போன்றவர்களின் மார்புகள் அழகாக ஆடுகின்றன ரம்பா பெரும்பாலும் மார்பைக் காட்டிய உடைகள் தான் அணிகின்றார்
நல்லவேளை நான் இருக்கும் போது பாக்கலை :)
//ஆனால் பின்னூட்டத்தில் எல்லோரும் ஒரே ஜால்ரா ஜல்லி அடிக்கிறீங்களே!லூசா நீங்க:)//
உலகத்தில் இருக்கும் அனைவரும் வந்து அவருக்கு ஜால்ரா தட்ட வில்லையே.. இந்த பதிவுக்கு ஒத்த கருத்துடைய சிலர் மட்டும் இங்கு பின்னூட்டம் இடுகிறோம். எங்களது கருத்தைத்தான் இங்கு சொல்கிறோம். உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள். அதை விட்டு விட்டு எங்களை லூசு என்பதால் நீங்கள் அறிவாளி என்று பொருள் ஆகி விடாது.. தங்கள் வேலையை மட்டும் சிறப்பாக செய்யுங்கள் நண்பரே..
மருத்துவர் ராமதாஸ் ஒரு தடவை சொன்னார்..அது மானாட மயிலாட இல்லை மானாட மாராட என்று... கொடுமை இதப்போய் பாத்திருக்கீறீங்களே... இனிமே பாப்பீங்க...
கனடா தமிழ் மக்கள் இதைப் பார்க்க ப்ளேன் புடுச்சு வந்தாங்களே!! பாக்கல!!
enatha solarathu inga sila pannadainga ipdithan. ithuku poratha vida canada nadakura poratathuku poyirunthalum makkal athikama irunthirukum.
ha ha eppadi ithunai naal thapichinga thalaiva haa haa da di matter super
டக்ளஸ்....... said...
லோகு said...
நாங்க எல்லா முதல் பாகத்துலையே நொந்துட்டோம்..
இது எத்தனாவது பாகம் மூனா, நாலா??
பெரிய ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்....//
ஹைய்யோ..
என்ன கொடுமை சரவணா இது???
:)))
ராஜ நடராஜன் said...
பதிவரின் ரசனை மாறுபட்டு இருக்கலாம்.தவறில்லை.ஆனால் பின்னூட்டத்தில் எல்லோரும் ஒரே ஜால்ரா ஜல்லி அடிக்கிறீங்களே!லூசா நீங்க:)
ஒரு லைவ் நிகழ்ச்சியில் ஒரு பெண் நடன இயக்குநர்,எந்த தொலைக்காட்சியிலும் நிகழ்த்தாத நடனம்,அரங்க அமைப்புன்னு சில பாராட்டத்தக்க விசயங்களும் இருக்கவே செய்கிறது.
கண்ணு ரெண்டு இருக்கும்போது ஒரு கண்ண மூடிகிட்டுத்தான் பின்னூட்டம் போடுவேனா எப்படி:)//
சார் அவங்க அவங்களுக்குத்தான் அதோட வலி புரியும்..
நீங்க கோபப்படாதீங்க...
ஆ.முத்துராமலிங்கம் said...
நான் இந்த விளையாட்டுக்கு வரலிங்களோ//
சூப்பர் எஸ்கேப்..
:)))
சீனு said...
ஞானி ஒரு தடவை இந்த நிகழ்ச்சி "மானாட மயிலாட" இல்லை...
"மானாட மார்பாட" என்று சொன்னதாக நினைவு....//
ஹ்ம்ம்..
அதுவும் ஒருவகையில் சரிதான்...
:)))
Azeez said...
இந்த மாதிரி விபரீதமா நடக்க கூடாதுன்னு தான் நான் இந்த கூத்தை பாக்குறது இல்லங்கோ ......மாட்டிகிட்டியா நீ ...ஹா ஹா ஹா//
என்ன சந்தோஷம்???
:)))
நமிதா..! said...
நல்லவேளை நான் இருக்கும் போது பாக்கலை :)//
நீங்க தப்பிச்சீங்க..
லோகு said...
//ஆனால் பின்னூட்டத்தில் எல்லோரும் ஒரே ஜால்ரா ஜல்லி அடிக்கிறீங்களே!லூசா நீங்க:)//
உலகத்தில் இருக்கும் அனைவரும் வந்து அவருக்கு ஜால்ரா தட்ட வில்லையே.. இந்த பதிவுக்கு ஒத்த கருத்துடைய சிலர் மட்டும் இங்கு பின்னூட்டம் இடுகிறோம். எங்களது கருத்தைத்தான் இங்கு சொல்கிறோம். உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள். அதை விட்டு விட்டு எங்களை லூசு என்பதால் நீங்கள் அறிவாளி என்று பொருள் ஆகி விடாது.. தங்கள் வேலையை மட்டும் சிறப்பாக செய்யுங்கள் நண்பரே..//
க்கூல் கூல் ..தோழா..
thevanmayam said...
கனடா தமிழ் மக்கள் இதைப் பார்க்க ப்ளேன் புடுச்சு வந்தாங்களே!! பாக்கல!!///
யாரு அந்த கூமுட்டி தலைக?? தமிழ்நாட்டு உறவுகளே வெறுக்கும் பொது..இந்த கனடா சொறி நாயிக என்னத்தை புடுங்க இந்த மாறாட பாக்க வந்தாக...
நாஞ்சில் பிரதாப் said...
மருத்துவர் ராமதாஸ் ஒரு தடவை சொன்னார்..அது மானாட மயிலாட இல்லை மானாட மாராட என்று... கொடுமை இதப்போய் பாத்திருக்கீறீங்களே... இனிமே பாப்பீங்க...//
சத்தியமா இல்ல..
:)))
Suresh said...
ha ha eppadi ithunai naal thapichinga thalaiva haa haa da di matter super//
பெரிய விஷயம் தான் சுரேஷ் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
லோயர் said...
thevanmayam said...
கனடா தமிழ் மக்கள் இதைப் பார்க்க ப்ளேன் புடுச்சு வந்தாங்களே!! பாக்கல!!///
யாரு அந்த கூமுட்டி தலைக?? தமிழ்நாட்டு உறவுகளே வெறுக்கும் பொது..இந்த கனடா சொறி நாயிக என்னத்தை புடுங்க இந்த மாறாட பாக்க வந்தாக...//
ஆவேசப்படாதீங்க கூல்...
:)))
வந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்..
nalla pathivu
ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பா... இத போயி இவ்வளவு நேரம் பார்த்தீங்களா!!! ரொம்ப பொறுமைதாங்க... :)
Its really ridiculous. This three idiotic old ladies think that they are more beautiful & brilliant.
Its a Third Rate programme.
Barathy
இது மானாட மயிலாட இல்லை.
மாராட மசிராட என்று ஒரு இடத்திலும்,
அங்கே எமது சொந்தங்களின் ஊனாட உயிராடிக் கொண்டிருக்கும் போது இதெல்லாம் தேவையா என்று வேறொரு இடத்திலும் வாசித்தேன். உண்மையில் இது எல்லாம் அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் கேவலமான விடயங்கள்.
ரொம்ப தான் மிரண்டு போய் இருக்கீங்க.. :-))))
நான் இது வரை பார்த்தது இல்லை இந்த நிகழ்ச்சி
ஆஹா...
இதப் போய் பாத்தது உன்னோட முதல் குத்தம் தம்பி...
:-)
உன்னை யார் இதை எல்லாம் போய் பாக்கச் சொன்னது???
:-)
பாத்தா இப்பிடித்தான்..
ஒக்காந்து ஃபீல் பண்ணனும்...
:-)
48
49
போட்டான் 50ஐ வேத்தியன்...
:-)
50உம் நானே...
51உம் நானே...
ச்சும்மா பாடிப்பாத்தேன்...
:-)
'கிழி' , 'கிழிச்சிட்டான்' , 'கிழி .. கிழி' ன்னு குஷ், கலாவும் பல முறை அலறியதை பார்த்ததிலிருந்து , அந்த டிவி பக்கம் தலை வைத்து படுப்பதில்லை.
தமிழ் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான பகுதியான "மானாட மயிலாட" நிகழ்ச்சியைப் பற்றி அவதூறாக எழுதிய இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.
;-)
நல்ல வேளையா ஜப்பான்-ல எந்த தமிழ் தொல்லைக்காட்சியும் தெரியறதில்லை.
என்ன அப்பு இப்படி சொல்றீக ... தலைவருக்கு இத
டெய்லி பாத்த பின்னாலதான் காலையில உடன் பிறப்பு
அல்லாருக்கும் கடுதாசி எழுதவே ஓசனை வருமாமே!
இவங்க பணம் சம்பாதிக ஒரு விளம்பரம்,என்ன கொடுமை இது.
கனடா தமிழ் மக்கள் இதைப் பார்க்க ப்ளேன் புடுச்சு வந்தாங்களே!! பாக்கல!!//
இதை தான் வினைய விலைகொடுத்து வங்குறது என்பதா???
சரியான comment thala.
sakthi said...
nalla pathivu//
நன்றி ஷக்தி ...
ஆகாய நதி said...
ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பா... இத போயி இவ்வளவு நேரம் பார்த்தீங்களா!!! ரொம்ப பொறுமைதாங்க... :)//
முன்பே தெரியலயேங்க...
:)))
Anonymous said...
Its really ridiculous. This three idiotic old ladies think that they are more beautiful & brilliant.
Its a Third Rate programme.//
ரொம்ப பாதிக்கப்பட்டிருகீங்க போல???
:)))
Anonymous said...
Barathy
இது மானாட மயிலாட இல்லை.
மாராட மசிராட என்று ஒரு இடத்திலும்,
அங்கே எமது சொந்தங்களின் ஊனாட உயிராடிக் கொண்டிருக்கும் போது இதெல்லாம் தேவையா என்று வேறொரு இடத்திலும் வாசித்தேன். உண்மையில் இது எல்லாம் அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் கேவலமான விடயங்கள்.//
இதப்பத்தி நிறைய ஆராஞ்சு இருப்பீங்க போல???
:)))
கிரி said...
ரொம்ப தான் மிரண்டு போய் இருக்கீங்க.. :-))))
நான் இது வரை பார்த்தது இல்லை இந்த நிகழ்ச்சி//
வாழ்த்துக்கள்..கிரி..
வாழ்த்துக்கள் வேத்தியன்..
கருத்துகளுக்கு நன்றி தமிழ்..
Anonymous said...
இவங்க பணம் சம்பாதிக ஒரு விளம்பரம்,என்ன கொடுமை இது.//
நாங்க தான் பாவம்..
:)))
எவங்க ஆடினா என்ன?
எது ஆடினா என்ன?
பிடிச்சா தின்னு
பிடிக்கலைனா விழுங்கு.
அவ்வளவுதான்.
Anonymous said...
எவங்க ஆடினா என்ன?
எது ஆடினா என்ன?
பிடிச்சா தின்னு
பிடிக்கலைனா விழுங்கு.
அவ்வளவுதான்.//
சாரி தல..
நான் இந்த மாதிரி ஆனோனிமஸ் கொமெண்ட்ஸ்சுக்கேல்லாம் பதில் சொல்லுறது இல்ல..
:P
:))
Nethiyadi. Nice post.
அழகு ரசிப்பதற்கே
வாழ்க்கை வாழ்வதற்கே
அவ்வளவுதான்
இருக்கவே இருக்கிறது
கையில் ரிமொட்டு
தலைக்கு பிடிக்காவிட்டால் அலைவரிசையை மாத்து
No comments on your comments.Pl.
பட்டாம்பூச்சி said...
:))
Nethiyadi. Nice post.//
நன்றி பட்டாம்பூச்சி...
Anonymous said...
அழகு ரசிப்பதற்கே
வாழ்க்கை வாழ்வதற்கே
அவ்வளவுதான்
இருக்கவே இருக்கிறது
கையில் ரிமொட்டு
தலைக்கு பிடிக்காவிட்டால் அலைவரிசையை மாத்து
No comments on your comments.Pl.//
கருத்துக்கு நன்றி..
Do you know this?99% elders have interesting to watch this MAnada marpada programe.hahahahahaha
என்ன தம்பி இப்படி கிழி கிழின்னு (please note...கிழி, கிழி me being KUSH??)கிழிச்சிட்டீங்க??????????????
Anonymous said...
Do you know this?99% elders have interesting to watch this MAnada marpada programe.hahahahahaha//
விதி யார விட்டு வைக்குது???
:)))
அமிர்தவர்ஷினி said...
என்ன தம்பி இப்படி கிழி கிழின்னு (please note...கிழி, கிழி me being KUSH??)கிழிச்சிட்டீங்க??????????????//
அப்ப நீங்களும் பாத்து நொந்து போயிருக்கீங்க??
பாவம்..
:)))
குழந்தையாய் இருக்கும்போது நம்மையெல்லாம் வாழ வைத்த அதுதான் நாம் பருவ வயதை அடைந்தபோது நம்மை சாகடிப்பதும் அதுதான்
அதுதான் இறைவனின் விசித்திரமான படைப்பு.
ஹிஹிஹிஹி
Post a Comment