நம்ம சக வலைப்பதிவு அண்ணாக்கள் எல்லாம் கவித கவிதயா வடிச்சு தல்லுறத பாத்த நம்மளுக்கும் கவித எழுதனும்ன்னு ஒரு ஆசை..
அதன் ஒரு வெளிப்பாடே இந்த கவித(அப்பிடின்னு நெனைச்சு தான் எழுதுறேன்)
நேற்று மாலை வகுப்பு முடிந்து பேரூந்தில் இருந்த போது தோன்றியது...
ஆரம்பிக்கிறேன்..
அதிகாலை அலாரம் வைத்து
அம்மா எழுப்பிவிட
கனவுப்புத்தகத்தை மூடிவிட்டு
கண்முழித்தேன்...
வறண்டு கிடந்த முகத்தைக் கழுவி
தேநீரை உறிஞ்சினேன்...
இஸ்திரித்த சீருடையை அணிந்து
இட்லி இரண்டை விழுங்கினேன்..
அடுக்கி வைத்த புத்தக பையுடன்
அவசரமாக புறப்பட்டேன்..
நேற்று கொடுத்த வீட்டுவேலையை
உடனே சென்று முடிக்க வேண்டுமே
என்ற நினைவில்..
இன்று என் அதிர்ஷ்டம் -நெருங்கியது
ஒரு அழகிய பேரூந்து..
பாய்ந்து ஏறினேன் -
மனதில் மகிழ்ச்சியுடன்..
கால்வாசி தூரம் விரைந்தது.
அதன்பின் தான் அகப்பட்டேன்
இந்த நேரத்தைப்போக்கி வெறுப்பை-
கூட்டும் "வாகன நெருக்கடியில்"..
:(((
திறந்து கிடந்த ஜன்னலின் ஊடாக
எட்டிப்பார்த்தேன்..
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
அசையாது நின்றன வாகனங்கள்..
"பிச்சை போடுங்கய்யா.."கேட்டது-
வெளியில் ஒரு ஏழை..போட்டேன்
மகிழ்ச்சியில் காணப்பட்டான் அவன்..
இதனால் இன்று நல்ல வருமானம் போலும்..
பக்கத்தில் இருந்தவன் பற்றினான்-
ஒரு சிகரட்டை..
காற்றும் அவன் பக்கம்
கண்றாவி மனம் என்னிடமே வந்தது..
:(((
பொன்னான நேரம் கரைந்து போக
காணப்பட்டேன் கவலையுடன்..
ஒருவழியாக பள்ளியை அடைந்தேன்..
இறங்கி ஓடினேன் அவசரமாக..
வகுப்பை அடைந்தேன்..
அதுவும் வீணானது
ஆசிரியர் சொன்னார்..
"மணி அடிச்சாச்சு வெளியே நில்"என்று..
_______________________________________________
எப்பிடி கவித???
ஏதாவது பிழை இருந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்ளவும்..ஏனென்றால் இது என் கன்னிக்கவிதை....
பிடித்தால் வோட்டயும் குத்துங்கள்..
அடுத்த பதிவில் சந்திப்போம்......
36 Responses:
நாந்தே மொதொ...
ஆஹா முதல் கவிதையா????
வாசிச்சுட்டு வரேன்...
நீ கவிதை எல்லாம் எழுதுவியாப்பா???
:-)
எங்க கிடைக்கும் கனவுப்புத்தகம்???
நல்லா இருக்கு...
:-)
//ஒரு அழகிய பேரூந்து//
இப்பிடின்னு ஒன்னு இருக்கா நம்ம ஊர்ல???
எல்லா பேருந்தும் கழுவி மாசக் கணக்குல இருக்குற மாதிரில்ல இருக்கும்???
நல்லா இருக்கு கவிதை...
வாழ்த்துகள்...
நல்லா இருக்கு தல..
இயல்பா....
வாழ்க்கை பிரச்சனைகளை ஒரு அலசி
இயல்பா எழுதி இருக்கீங்க பிரவீன்.. நல்லா இருக்கு.. கொஞ்சம் எழுத்துப் பிழைகளை மட்டும் சரி பண்ணுங்க.. ஆரம்பத்துல வந்த கனவுப்புத்தகம் என்கிற வரிகள் அருமை..
கவித
கவித
பிரமாதம்.............
தொடர்ந்து எழுதுங்க......
நீரோட்டமான வாக்கிய அமைப்பு
நிகழ்கால வாழ்வியலை எடுத்தியம்பும் போக்கு
தங்களின் கவிதைக்கு அணிசெய்வதாகவுள்ளது........
வாழ்த்துக்கள்.......
அடரஸ் அனுப்பறேன்..
அந்த கனவுப் புத்தகத்த இரவல் கொடுங்கப்பா..!
//நம்ம சக வலைப்பதிவு அண்ணாக்கள் எல்லாம் கவித கவிதயா வடிச்சு தல்லுறத பாத்த நம்மளுக்கும் கவித எழுதனும்ன்னு ஒரு ஆசை//
நல்ல ஆசை
ஆசைகொள் முயற்சி செய் முயன்று பார் வெற்றிக்கொள்
இப்போ வெற்றிபெற்றிருக்கீர்கள் வழிப்போக்கன்
எழுத்து நடையுடன் கூடிய கவிதை என்ற பெயரில் நீர் தினமும் மீட் பண்ணும் ஒரு காலை சம்பவத்தை சொல்லிருக்கீர்
முதல் கவிதை
வாழ்த்துக்கள்
கவிதைக்கு இன்னும் சிறிது தூரம்தான்...
அடுத்தநாள் காலை
ஆறுமணிக்கு
அதேசாலை வழியாக
வாக்கி்ங் போனேன்.
நேற்றுப்பா
ர்த்த
சாலையாஇது!
இரைச்சல்களின்றி
இனிமையாய் இருந்தது.
திரும்ப வந்து
தலைப்பை மாற்றி
எழுத ஆரம்பித்தேன்
அதிகாலையில் சாலை.
wow enna kavithai superb pa
அதிகாலை அலாரம் வைத்து
அம்மா எழுப்பிவிட
கனவுப்புத்தகத்தை மூடிவிட்டு
கண்முழித்தேன்...
hey nijama nalla erukku
ஏதாவது பிழை இருந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்ளவும்..ஏனென்றால் இது என் கன்னிக்கவிதை....
ithuve ippadina adutha kavignar ready note pannunga pa
வேத்தியன் said...
நாந்தே மொதொ...//
வாழ்த்துகள்...
நீ கவிதை எல்லாம் எழுதுவியாப்பா???
:-)//
இப்பதான் ட்ரைபண்ணி இருக்கன்...
வேத்தியன் said...
எங்க கிடைக்கும் கனவுப்புத்தகம்???
நல்லா இருக்கு...
:-)//
எல்லா ஸ்லீபிங் ஸ்டோரிலும் கிடைக்கும்..
:)))
நன்றி வேத்தியன் அண்ணா...
SUREஷ் said...
நல்லா இருக்கு தல..
இயல்பா....
வாழ்க்கை பிரச்சனைகளை ஒரு அலசி//
வாழ்த்துகளுக்கு நன்றி சுரேஷ் அண்ணா..
கார்த்திகைப் பாண்டியன் said...
இயல்பா எழுதி இருக்கீங்க பிரவீன்.. நல்லா இருக்கு.. கொஞ்சம் எழுத்துப் பிழைகளை மட்டும் சரி பண்ணுங்க.. ஆரம்பத்துல வந்த கனவுப்புத்தகம் என்கிற வரிகள் அருமை..//
கண்டிப்பா திருத்திகிறேன்...
நன்றி அண்ணா...
முனைவர்.இரா.குணசீலன் said...
கவித
கவித
பிரமாதம்.............
தொடர்ந்து எழுதுங்க......
நீரோட்டமான வாக்கிய அமைப்பு
நிகழ்கால வாழ்வியலை எடுத்தியம்பும் போக்கு
தங்களின் கவிதைக்கு அணிசெய்வதாகவுள்ளது........
வாழ்த்துக்கள்.........
நன்றி ஐயா...
டக்ளஸ்....... said...
அடரஸ் அனுப்பறேன்..
அந்த கனவுப் புத்தகத்த இரவல் கொடுங்கப்பா..!//
அது உங்க வீட்டுலயும் இருக்கும் நல்லா தேடிப்பாருங்க...
:)))
அபுஅஃப்ஸர் said...
//நம்ம சக வலைப்பதிவு அண்ணாக்கள் எல்லாம் கவித கவிதயா வடிச்சு தல்லுறத பாத்த நம்மளுக்கும் கவித எழுதனும்ன்னு ஒரு ஆசை//
நல்ல ஆசை
ஆசைகொள் முயற்சி செய் முயன்று பார் வெற்றிக்கொள்
இப்போ வெற்றிபெற்றிருக்கீர்கள் வழிப்போக்கன்//
நன்றி அண்ணா..
எல்லாம் நீங்கள் கொடுக்கும் உற்சாகம் தான்...
அபுஅஃப்ஸர் said...
எழுத்து நடையுடன் கூடிய கவிதை என்ற பெயரில் நீர் தினமும் மீட் பண்ணும் ஒரு காலை சம்பவத்தை சொல்லிருக்கீர்
முதல் கவிதை
வாழ்த்துக்கள்//
வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா...
sakthi said...
wow enna kavithai superb pa//
நன்றி ஷக்தி..
sakthi said...
ஏதாவது பிழை இருந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்ளவும்..ஏனென்றால் இது என் கன்னிக்கவிதை....
ithuve ippadina adutha kavignar ready note pannunga pa//
அதை இனிவரும் காலம் தீர்மானிக்கும்...
:)))
முதல் பாரா.. நல்லா இருந்துச்சிங்க வழிப்போக்கன். மற்ற பாராக்கள் எல்லாம்.. வார்த்தைகளை இடம் மாற்றி போட்ட மாதிரிதான் ஃபீல் பண்ணினேன். தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். :) :)
இருந்தாலும் முதல் கவிதைன்னு சொல்லிட்டீங்க. :) அதனால்.. பிழைகளை... கண்டுகொள்ளாமல்..
வாழ்த்துகள்!!!
ஹாலிவுட் பாலா said...
முதல் பாரா.. நல்லா இருந்துச்சிங்க வழிப்போக்கன். மற்ற பாராக்கள் எல்லாம்.. வார்த்தைகளை இடம் மாற்றி போட்ட மாதிரிதான் ஃபீல் பண்ணினேன். தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். :) :)
இருந்தாலும் முதல் கவிதைன்னு சொல்லிட்டீங்க. :) அதனால்.. பிழைகளை... கண்டுகொள்ளாமல்..
வாழ்த்துகள்!!!//
கருத்துக்கும் அரிவுரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாலா...
:)))
சின்ன பாரதி வருக!!
முதல் கவிதையா?
நம்பமுடியலை!!!!!!!!!!!!!!!!!!!!11
கவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க.. ஆரம்பம் வெகு ஜோர். கனவுப் புத்தகம் அருமையான தொடக்கம்...
முதல் கவிதை என்பதுபோலன்றி நன்றாக இருந்தது.. ஒரு எட்டு டூ ஒன்பது மணி நிகழ்வைப் படம்பிடிப்பதாக...
தொடருங்கள்
thevanmayam said...
சின்ன பாரதி வருக!!//
பாவம் பாரதி..
:)))
thevanmayam said...
முதல் கவிதையா?
நம்பமுடியலை!!!!!!!!!!!!!!!!!!!!11//
அட நிஜமா தான் ..
பிலீவ் மீ...
ஆதவா said...
கவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க.. ஆரம்பம் வெகு ஜோர். கனவுப் புத்தகம் அருமையான தொடக்கம்...
முதல் கவிதை என்பதுபோலன்றி நன்றாக இருந்தது.. ஒரு எட்டு டூ ஒன்பது மணி நிகழ்வைப் படம்பிடிப்பதாக...
தொடருங்கள்//
நன்றி ஆதவா அண்ணா...
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
Post a Comment