6/26/2009

மைக்கல் ஜாக்சன் “THE KING OF POP" க்கு சமர்ப்பணம்





நண்பர்களே வணக்கம்...

பாப் பாடல்களின் அரசன் என வர்ணிக்கப்படும் மைக்கல் ஜாக்சன் (மைக்கல் ஜோசப் ஜாக்சன்) லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று மரணமடைந்தார்...மைக்கல் ஜாக்சன் என்றால் தெரியாதவர்கள் மிகக்குறைவு...அந்த அளவுக்கு உலக மக்களை தன் குரலாலும் ஆட்டத்தாலும் கவர்ந்திருந்தார்...

மைக்கல் ஜாக்சன் 1958 ஆகஸ்ட் 29ம் திகதி பிறந்தார்..அவரது குடும்பத்தில் 7வது குழந்தையாக பிறந்தார்..தனது 11 வது வயதில் முதல் முதலாக குழுவாக இசையில் தடம் பதித்தார்..பின்னர் 1971ல் சுயமாக மேடை ஏறினார்..” பாப் இசையின் அரசன் “ என வர்ணிக்கப்பட்ட இவரது 4 ஆல்பங்கள் உலகின் சிறந்த விற்பனை ரெக்காட்டை(world'd best - selling record)கொண்டுள்ளன..Off the wall(1979) , Bad(1987) , Dengerous(1991) , History(1995) என்பனவே அவையாகும்..ஆனாலும் அவரது Thriller(1982) எப்போதும் சிறந்த விற்பனையாகும்..

1980களில் ஜாக்சனே அமெரிக்க ஆபிரிகாவின் சிறந்த பாடகராக இருந்தார்..அவரது "Beat it" , "Billie jean" போன்ற பாடல்களாலும் அவரது தனித்துவமான நடனத்தாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார்..அவரது பாடல்கள் இலகுவில் புரிந்து கொள்ள கூடியவை..

அவர் பல கின்னஸ் உலக சாதனைகளையும் , க்ராமி அவார்டுகளையும் (Most successful entertainer of all time உட்பட)பெற்றுள்ளார்....இவ்வளவு பெருமைமிக்க மைக்கல் ஜாக்சன் சிரிது காலம் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார்.. நேற்று தனது 50வது வயதில் காலமானார்..
அவரின் ரசிகனான நான் இந்த பதிவை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்....
அவரின் படங்கள் சில...



























மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

மைக்கல் ஜாக்சன் “THE KING OF POP" க்கு சமர்ப்பணம்SocialTwist Tell-a-Friend

11 Responses:

தேவன் மாயம் said...

ஒரு குயில் தன் பயணத்தை முடித்துக்கொண்டது!!!

தேவன் மாயம் said...

மாபெரும் கலைஞன் !!! அவனுடைய ஆத்மா சாந்தியடையட்டும்!!

வழிப்போக்கன் said...

thevanmayam said...
ஒரு குயில் தன் பயணத்தை முடித்துக்கொண்டது!!!//

சரியா சொன்னீங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

ஒரு ஆச்சர்ய கலைஞனின் ஆட்டம் நின்றுவிட்டது

Jackiesekar said...

நல்ல அஞ்சலி பதிவு.. வழிப்போக்கன்

கலையரசன் said...

அவர் ஒரு சகாப்தம்!
இன்னம் கொஞ்சம் அவரை பற்றி
எழுதியிருக்கலாம்...
அவருக்கு பதிவுலகம் சார்பில்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்வோம்!!

அப்துல்மாலிக் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஒரு நடனப்புயல் கரைகடந்தது

வழிப்போக்கன் said...

பிரியமுடன்.........வசந்த் said...
ஒரு ஆச்சர்ய கலைஞனின் ஆட்டம் நின்றுவிட்டது//

ஆமாம் வசந்த் அண்ணா....

வழிப்போக்கன் said...

கலையரசன் said...
அவர் ஒரு சகாப்தம்!
இன்னம் கொஞ்சம் அவரை பற்றி
எழுதியிருக்கலாம்...
அவருக்கு பதிவுலகம் சார்பில்
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்வோம்!//

கிடைத்ததை எழுதினேன்...

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...
ஆழ்ந்த அனுதாபங்கள்

ஒரு நடனப்புயல் கரைகடந்தது//

ஹ்ம்ம்..
:(((

இது நம்ம ஆளு said...

அருமை
வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க