ஹாய் வலை நண்பர்களே...
என்னடா இவன் எப்ப பாத்தாலும் எதையாவது copy , paste பண்ணுறானேன்னு சில நல்ல உள்ளங்கள் சொல்லுறது கேக்குது....
அதுக்காகத்தான் இந்தமுறை என் அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிரலாம்ன்னு கிளம்பி இருக்கேன்...
கடந்த வெள்ளிக்கிழமை என் பள்ளியில் "நாடக போட்டி" நடந்தது.. நாமளும் நடிச்சோம்....
நம்மளுக்கு இதுவரையும் 2 முறை நடிச்ச அனுபவம் இருந்தது...பயிற்சிக்கு கூப்பிட்டார்கள்.. நானும் போனேன்..கதைய சொன்னாங்க...
பரவாயில்ல கதை கேக்க சுமாராதான் இருந்தது..
சரி கதையில 2 ஹீரோ..ஒரு ஹீரோ கதையின் சொந்தக்காரர்..அடுத்த ஹீரோ யாருன்னு கேக்க , நண்பன் ஒருவன் எழுந்தான்..[காரணம் மற்றவர்கள் நீண்ட நேரம் போயும் எழும்ப வில்லை.. :))) ]
சரி நாடகத்தின் முதல் நாள் பயிற்சி..
நடிக்க ஆரம்பித்தார்கள்... இரண்டாவதாக எழுந்த என் நண்பன் ர்ர்ரொம்ப நாடகத்தனமா நடிச்சான்...
கதையை இயக்கும் நண்பன் பாத்துட்டு இந்த நாடகம் வெற்றாதுன்னு கவலைப்பட்டான்...பிறகு என்ன ஹீரோவாகச்சொன்னான்...
நான் ஹீரோவாக்கப்பட்டேன் ...[ஆனாலும் எனக்கு ஒரு பயம்..ஏனென்றால் நான் இதுவரை நடித்த நாடகம் இரண்டும் தோற்று விட்டது...]
நடிக்க தொடங்கியதும் இயக்கும் நண்பனுக்கு என்னை ரொம்ப பிடித்து விட்டது... நீ இந்த வேடத்தை ரொம்ப நல்லா பண்ணுறடா..நீயே செய்..நாடகம் நிச்சயமா வெத்தும்..அப்பிடின்னு சொன்னான்... நான் அவனிடம் "மச்சான் நான் இதுக்கு முதல் ஒரு தடைவை ஹீரோவா பண்ணியிருக்கன்..ஆனா அது தோற்றுப்போச்சு"ன்னு சொன்னேன்...அதுக்கு அவன் "பரவா இல்ல இந்த முறை நல்லா செய்வோம்"என்றான்...
சரி ஆண்டவன் விட்ட வழி அப்பிடின்னு தொடங்கி செய்தோம்....
5 வதுமுறை பயிற்சி செய்து கொண்டிருந்தோம்...[ நாளைக்கு நாடக போட்டி..].அப்போது என் இன்னொரு நண்பன் வந்து "மச்சான் எங்க நாடகத்துல நடிக்கிறேன்னு சொல்லீட்டு இப்ப கொஞ்ச பேர் வாராங்க இல்லடா" நீங்க கொஞ்ச பேர் நடிக்க முடியுமான்னு கேட்டான்..அப்ப நானும் என் நண்பர்களும் யோசிச்சுட்டு சரி நம்மளுக்கு சான்றிதழ் கிடிக்குதுதானேன்னு ஓகே சொல்லீட்டோம்..[அந்த கதைக்கு பயிற்சியே பண்ண வில்லை..]
அடுத்த நாள் போட்டி...
எங்கள் நாடகம் 2வதாக அரங்கேறியது[மொத்தமாக 5 நாடங்கள்].. நானும் நடித்தேன்[பயத்துடன்] ...
ஒரு வழியாக முடிந்தது ...அப்போது அனைவரும் எங்கள் நாடகத்தயும் [என்னையும்] பாராட்டினார்கள்...அடுத்த நாடங்களை பார்ப்பதற்கு கூட நேரமில்லை...அடுத்த நாடகத்திற்க்கு தயார் ஆக வேண்டும்...[இந்த நாடகத்தில் சின்ன வேடம் தான்..]
அதுவும் கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறியது..
ஆனாலும் இந்த நாடகத்தையும் விட எங்கள் நாடகத்திற்கே அதிக வரவேற்பு....
சரி இனி விருது வாழங்க வரச்சொன்னார்கள்...
அங்கு வந்த நடுவர் நாடகத்தைப்பற்றி 20 நிமிடம் பேசிவிட்டு முடிவுகள் பின்னரே அறிவிக்கப்படும்ன்னுட்டார் ...
முடிவுகளுக்கு இன்னும் அரை மாதம் அளவில் செல்லுமாம்....
அதற்காக காத்திருக்கிறோம்...
கிடைத்தவுடன் சொல்லுகிறேன்...
அடுத்தபதிவில் சந்திப்பொம்...
:)))
6/06/2009
என் நாடக அனுபவம்...!!!
Subscribe to:
Post Comments (RSS)
16 Responses:
ஹிரோயின் யாருங்க... அதை சொல்லவே இல்லியே
அரங்கேற்றிய நாடகத்தை ஒரு பதிவா போட்டால் நல்லாயிருக்கும்
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
வெற்றிபெற வாழ்த்துக்கள் ஹீரோ!!!
என்னமோ ஒரு விஷயம் இருக்கு, ஆனா தெரிய மாட்டேங்குது.
congrats...
நட்புடன் ஜமால் said...
வெற்றி பெற வாழ்த்துகள்//
நன்றி ஜமால் அண்ணா....
அபுஅஃப்ஸர் said...
ஹிரோயின் யாருங்க... அதை சொல்லவே இல்லியே
அரங்கேற்றிய நாடகத்தை ஒரு பதிவா போட்டால் நல்லாயிருக்கும்
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//
ஒரே ஒரு பெண் ரோல் தான்...
நன்றி அண்ணா...
Subankan said...
வெற்றிபெற வாழ்த்துக்கள் ஹீரோ!!!//
நன்றி அண்ணா...
SUREஷ் (பழனியிலிருந்து) said...
என்னமோ ஒரு விஷயம் இருக்கு, ஆனா தெரிய மாட்டேங்குது.//
அட நம்புங்க ஒன்னு இல்ல...
:)))
வேத்தியன் said...
congrats...//
நன்றி... நன்றி..
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு
இந்த சுட்டியை சொடுக்குங்கள்
தமிழர்ஸ் பிளாக்
இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்
ஹீரோ தம்பி.. நீங்க சூப்பர் ஸ்டார் ஆனதுக்கு அப்புறம் என்னைய மறந்துடாதீங்க..:-)
சரி இனி விருது வாழங்க வரச்சொன்னார்கள்...
அங்கு வந்த நடுவர் நாடகத்தைப்பற்றி 20 நிமிடம் பேசிவிட்டு முடிவுகள் பின்னரே அறிவிக்கப்படும்ன்னுட்டார் ...
முடிவுகளுக்கு இன்னும் அரை மாதம் அளவில் செல்லுமாம்....
அதற்காக காத்திருக்கிறோம்...
///
ஹீரோ வெற்றிபெற வாழ்த்துக்கள்!!
கார்த்திகைப் பாண்டியன் said...
ஹீரோ தம்பி.. நீங்க சூப்பர் ஸ்டார் ஆனதுக்கு அப்புறம் என்னைய மறந்துடாதீங்க..:-)//
ச்சீ..அப்படி எலாம் ஆக மாட்டேன்..
:)))
கார்த்திகைப் பாண்டியன் said...
ஹீரோ தம்பி.. நீங்க சூப்பர் ஸ்டார் ஆனதுக்கு அப்புறம் என்னைய மறந்துடாதீங்க..:-)//
ச்சீ..அப்படி எலாம் ஆக மாட்டேன்..
:)))
thevanmayam said...
சரி இனி விருது வாழங்க வரச்சொன்னார்கள்...
அங்கு வந்த நடுவர் நாடகத்தைப்பற்றி 20 நிமிடம் பேசிவிட்டு முடிவுகள் பின்னரே அறிவிக்கப்படும்ன்னுட்டார் ...
முடிவுகளுக்கு இன்னும் அரை மாதம் அளவில் செல்லுமாம்....
அதற்காக காத்திருக்கிறோம்...
///
ஹீரோ வெற்றிபெற வாழ்த்துக்கள்!!///
ர்ர்ரொம்ப நன்றி அண்ணா!!!
பெரிய ஆள்தாம்பா நீங்க... :-)
Post a Comment