6/15/2009

ஒரு புதிர்..விடையும் தருகிறேன்....


என்ன மக்கா சௌக்யமா???

பதிவு போட்டு 1 வாரம் ஆச்சு...
அதான் நம்ம கிட்ட ஒருவன் கேட்டதை உங்களிடம் நான் கேற்கிறேன்..

இத புதிர்ன்னு சொல்லுறதா இல்ல வேற எப்பிடியாவது சொல்லுறதான்னு தெரியல...ஓகே புதிர்ன்னு வச்சுகலாம்...

புதிருக்கு ரெடியா???

*முதலில் 9க்குள் ஒரு எண்ணை நினைக்க..


*அதனை 9 ஆல் பெருக்குக..( x9 )

*வரும் எண்கள் இரண்டையும் கூட்டுக...
(இப்போ 54 வந்தால் 5+4 என..)

*வந்த எண்ணிலிருந்து 5 ஐ கழிக்க...( -5 )

*இனி A=1 , B=2 , C=3 .............. Z=26 என உங்கள் எண்ணுக்கு எழுத்து ஒன்றை பெற்றுக்கொள்க...(ஆங்கில எழுத்துகள் மட்டுமே..)

*ஓகேவா இனி உங்களின் எழுத்தை முதல் எழுத்தாக கொண்ட ஒரு நாட்டை நினைக்க....

* நினைத்த நாட்டின் கடைசி எழுத்தை, முதல் எழுத்தாக கொண்ட ஒரு மிருகத்தை நினைக்க...

*அந்த மிருகத்தின் கடைசி எழுத்தை முதல் எழுத்தாக கொண்ட ஒரு பழத்தை நினைக்க....

ஆச்சா???

இனி விடைக்கு வருவோம்...

நீங்கள் நினைத்தவை

1.Denmark , Kangaroo , Orange
2.Dominica , Ass , strawberry

இந்த 2 ல் ஒன்றா???

இல்லாவிட்டால் உங்கள் விடையை பின்னூட்டமாக இடவும்...(இதுக்காக ரூம் போட்டு யோசிக்க வேண்டாம்... :)))

சரி இனி எப்பிடி இதுன்னு பார்ப்போம்...

9க்குள் எந்த எண்ணை 9 ஆல் பெருக்கி , வரும் விடையை கூட்டினாலும் 9 தான் வரும்....(உதாரண்மாக 5 ஐ எடுத்தால் 5 x 9 = 45 ,4 + 5 =9....)
அதனால ஒன்பதிலிருந்து 5 கழித்தால் 4 விடையாக வரும்...இனி 4 க்கு எழுத்தை தேடினால் D கிடைக்கும்...

D யில் தொடங்கும் நாட்டை நினைக்க சொன்னால் அனைவரும் இலகுவில் நினைப்பது Denmark...இல்லாவிட்டால் Dominica தான்...
இனி K வில் தொடங்கும் மிருகம் என்றால் உடனே Kangarooவை நினைப்பர்,அல்லது (Dominica நினைத்தவர்கள்..)A வில் தொடங்கும் Ass ஐ நினைப்பர்...

இனி பழம் என்றவுடன் O வில் தொடங்கும் Orange ஐ நினைப்பர் அல்லது (Assஐ நினைத்தவர்கள்)...Sவில் தொடங்கும் Strawberryஐ நினைப்பர்....

இப்படிதான் வந்தது விடை....
_____________________________________________________________________

சரி இனி இந்த பதிவ படிப்பவர்களுக்கு ஒரு தத்துவமும் ஒரு படமும் இலவசம்...

தத்துவம்...

”முயற்சி செய்யாமல் போவதை விட முயற்சி செய்து தோற்றுபோவது மேலானது...”


ஒரு படம்...

நான் அண்மையில் பார்த்து ரசித்த ஒரு படம்....எப்பூடி???

ஓகே இனி விடை பெறும் நேரம்....
இப்ப போறேன்,,<<>>>>>>>>>>>>>>>>>திரும்பி வருவேன்னு சொல்ல வந்தேன்...

வர்ட்டா????

ஒரு புதிர்..விடையும் தருகிறேன்....SocialTwist Tell-a-Friend

18 Responses:

நசரேயன் said...

//”முயற்சி செய்யாமல் போவதை விட முயற்சி செய்து தோற்றுபோவது மேலானது...//
சரி, கேட்டுகிறேன்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஆஹா...........

SUREஷ் (பழனியிலிருந்து) said...

உலக நாடுகளின் பட்டியலைப் பார்த்து அப்புறம் எழுதி விடுகிறேன்

Subankan said...

இந்த ஒன்பது விளையாட்டை வைத்தே பல புதிர்கள் உலவுது போலிருக்கே!, நடக்கட்டும்.

பார்சா குமார‌ன் said...

naan ninathtathu 1

பிரியமுடன்.........வசந்த் said...

//”முயற்சி செய்யாமல் போவதை விட முயற்சி செய்து தோற்றுபோவது மேலானது...”//

தரமான சிந்தனை

நம்பர் விளையாட்டு?

இன்னமும் சின்ன புள்ளைய்யாவே இருக்கீகளே......

FloraiPuyal said...

எனக்கு Djibouti, Impala, Avocado வருது.

thevanmayam said...

ஆஹா!
அருமை!!

நட்புடன் ஜமால் said...

”முயற்சி செய்யாமல் போவதை விட முயற்சி செய்து தோற்றுபோவது மேலானது...”\\

அருமைப்பா!

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

வழிப்போக்கன் said...

நசரேயன் said...
//”முயற்சி செய்யாமல் போவதை விட முயற்சி செய்து தோற்றுபோவது மேலானது...//
சரி, கேட்டுகிறேன்//

ர்ர்ரொம்ப மகிழ்ச்சிண்ணா....
:)))

வழிப்போக்கன் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
உலக நாடுகளின் பட்டியலைப் பார்த்து அப்புறம் எழுதி விடுகிறேன்//

நான்றி அண்ணா...

வழிப்போக்கன் said...

நன்றி ....

சுபாங்கன் அண்ணா...
பார்சா குமாரன் அண்ணா...
ப்ரியமுடன் வசந்த் அண்ணா...
FloraiPuyal...
நட்புடன் ஜமால் அண்ணா...
thevanmayam அண்ணா...

RAMYA said...

//
முயற்சி செய்யாமல் போவதை விட முயற்சி செய்து தோற்றுபோவது மேலானது...
//

நல்லா சிந்திச்சிருக்கீங்க

அமாம் அந்த நம்பர் விளையாட்டை பார்த்தவுடன் லேசா எனக்கு தலை சுத்திடுச்சு :))

அருமையான சிந்தனை.

நடகட்டும் நடகட்டும் :))

கலையரசன் said...

அடங்கமாட்டிங்க போல...
நல்லாயிருக்கு..

ரசித்தேன்.. தொடர்கிறேன்!!

வால்பையன் said...

அண்ணே நீங்க எனக்கு பாலோயரானது நன்றி!

நானும் உங்களுக்கு ஆகிவிட்டேன்!(பாலோயராய்)

அன்புடன் அருணா said...

ம்ம்ம்..நல்ல முன்னேற்றம்!!!!

ஆபிரகாம் said...

நல்லா முயற்சி! ஹாஹாஹா