8/30/2009

விஜய் TV யின் தரம் குறைகிறதா???..ஓர் அலசல்..


மீண்டும் ஒரு ஹாய் நண்பர்களே....

என்னடா இந்த வழிப்போக்கன் ஒரே மொக்கயனா இருக்கானேன்னு பீல் பண்ணும் “நல்ல உள்ளங்களுக்கு” இந்த முறை ஒரு அலசல் பதிவை இடுகிறேன்...
இந்த பதிவை முழுதாக படித்து ஏதேனும் தவறாயின் பின்னூட்டமிடவும்...


நான் ஏன் விஜய் டீவியை எடுத்துள்ளேன் என்றால் அவர்கள் தான் நம்மலுகேற்ற முழு நேர பொழுதுபோக்கு சேனல்....

நான் ஏன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளேன் என்றால் முன்பிருந்த தரம் விஜய் தொலைக்காட்சியிடம் குறைந்துள்ளது..அதற்கான காரணங்களாக நான் கருதும் காரணங்கள்....

1 .விஜய் டீவிக்கே என பிரபலமான நிகழ்ச்சிகள் தற்போது ஒளிபரப்பப்படுவதில்லை..

முதலில் அவ்வாறு நீக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப்பார்ப்போம்.....


1 . கலக்கப்போவது யாரு?..

விஜய் டீவிக்கே தனித்தன்மையான இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது..மக்களின் பெரும் வரவேற்பைப்பெற்ற இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது விஜய் தொலைக்காட்சியை பார்க்கும் ஆர்வத்தை மக்களிடம் நிச்சயம் குறைத்திருக்கும்...ஆனால் இப்போது கலக்கப்போவது யாரு சுட்டிகள் தேர்வு இடம் பெறுவதாக கேள்விப்பட்டேன்..பார்ப்போம் எப்படி வருகிறது என்று...

2 . லொல்லு சபா..
தமிழ்த்திரைப்படங்களை வைத்து நடாத்தப்பட்டு வந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி...இந்த நிகழ்ச்சி மூலம் தான் நடிகர் சந்தானம் தமிழ்த்திரையுலகிற்கு கிடைத்தார்..பல நகைச்சுவை ரசிகர்களைக்கொண்ட இந்த நிகழ்ச்சி இப்போது ஒலிபரப்பப்படுவதில்லை..

3 . Mathan's திரைப்பார்வை

தமிழ் திரைப்படங்களைப்பற்றி அதிக அறிவுள்ள மதன் அவர்களால் நடாத்தப்பட்டு வந்த ஒரு திரைப்படங்களைப்பற்றிய ஒரு அலசல் நிகழ்ச்சி...இதுவும் விஜய் தொலைக்காட்சியின் தரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வந்தது..இப்போது இதுவும் நிறுத்தப்பட்டுள்ளது..

4 . கனாக்காணும் காலங்கள்..

சீரியல் என்றாலே ஒரே அழுகை என்னும் எண்ணத்தை மாற்றிய தொடர்..அதிக பள்ளி ரசிகர்களைக்கொண்ட இந்த தொடர் புது முகங்கள் மூலம் புத்துயிர் பெற்று பின் நிறுத்தப்பட்டது..காரணம் புரியவில்லை..

5 .இசைக்குடும்பம்..

இசைக்கலைஞர்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி...ஒரு சீசனுடன் அப்பீட்டகிவிட்டது...எனக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக இருந்தது..

6 . coffee வித் அனு..

பிரபங்களின் அனுபவங்கள் , புகைப்படங்கள் போன்ற விஷயங்களுடன் அவர்களுடனான ஒரு பேட்டி நிகழ்ச்சி..அனுஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார்..இதுவும் இப்போது இல்லை...
__________________________________________________________________
இது போன்ற நிகழ்ச்சிகள் நீக்கப்பட்டதுடன் இப்போது விஜய் டீவியினால் வழங்கப்படும் ” சில “ நிகழ்ச்சிகள் தரமற்று காணப்படுகின்றது..
அவ்வாறான நிகழ்ச்சிகள் ...

1 . Boys VS Girls..
ஜோடி நம்பர் 1 ஆக இருந்த நிகழ்ச்சியை இவ்வாறு பேர் மாற்றி கெடுத்துவிட்டார்கள்..முன்னிருந்தது போல் உற்சாகம் இப்போது இந்த நிகழ்ச்சசியிலில்லை..ஷாம் , மீனாவின் நடுவர்த்தன்மையில் ஏதோ பக்கச்சார்பு இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது...

2 . அனு அளவும் பயமில்லை..

இதுவும் அனுஹாசனால் நடாத்தப்படும் நிகழ்ச்சி..சில பெண் சின்னத்திரை பிரபலங்களின் தைரியத்தை பரிசோதிக்கும் நிகழ்ச்சியிது..அன்று இந்த் நிகழ்ச்சியில் என்னடாவெற்றால் ஒரு பிரபல நடிகை கொடுக்கப்பட்ட போட்டியை எவ்வாறு கடப்பது என்று இருந்து அழுது தள்ளுகிறார்..இந்த விவகாரத்தை வைத்தே அரை மணி நேரத்தை கடத்தி விட்டார்கள்..இந்த நிகழ்ச்சியும் பார்க்கும் படியில்லை...

______________________________________________________

எது எவ்வாறு இருந்தாலும் இன்னும் விஜய் டீவி இன்னும் ரசிகர்களை கொண்டுள்ளதற்கு இந்த நிகழ்ச்சிகளே காரணம்..


1 . நீயா நானா..

கோபிநாத் என்பவரால் நடாத்தப்படும் ஒரு விவாத நிகழ்ச்சி..ஒவ்வறு வாரமும் வித்தியசமான தலைப்புகளை எடுத்து விவாதிக்கும் இந்த நிகழ்ச்சி இன்னும் ரசிக்கும் படியே உள்ளது..

2 . சூப்பர் சிங்கர் ஜூனியர்..

தமிழகத்தின் செல்ல குறலுக்கான தேடலாக நடாத்தப்படும் இந்த நிகழ்ச்சி என் பேவரிட் நிகழ்ச்சியாகும்..சின்ன குழந்தைகளின் பாடும் திறனை வளர்க்கும் இந்த நிகழ்ச்சி வர வேற்கத்தக்கது...

3 . தமிழ் எங்கள் பேச்சு..

தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் நிகழ்ச்சி என்பதாலேயே எனக்கு இந்த நிகழ்ச்சியில் ஓர் ஆர்வம்..இப்போது இது தமிழ் எங்கள் பேச்சு சுட்டிகள் ஆக நடைப்பெறுகிறது.. நல்ல நிகழ்ச்சி..

4 . பாட்டு பாட வா...

இந்த நிகழ்ச்சி பாடகி அனுராதா ஸ்ரீராம் அவர்களால் தொகுத்தளிக்கப்படுகிறது..பின்ணனிப்பாடகர்களின் பாட்டு வரிகளை சோதிக்கும் ஒரு நிகழ்ச்சி..வித்தியாசமான நல்ல நிகழ்ச்சி..

5 . அது இது எது???..

சிவகார்த்திகேயனால் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி..பிரபலங்களுடனான ஒரு கலகலப்பான நிகழ்ச்சி..விஜய் டீவியின் புதிய அறிமுகம்..பார்க்கலாம்..


இது போன்ற நிகழ்ச்சிகள் இருப்பினும் முன்பிருந்தது போல விஜய் தொலைக்காட்சியில் இருந்த விருவிருப்பு குறைந்துள்ளது என்று நான் சொல்கிறேன்..என்ன நான் சொல்றது??
:)))

விஜய் டீவி உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறோம்....

__________________________________________________

ஓகே ஃப்ரெண்ஸ் அடுத்த பதிவில பார்ப்போம்..
வர்ட்டா..
:)))

விஜய் TV யின் தரம் குறைகிறதா???..ஓர் அலசல்..SocialTwist Tell-a-Friend

8/27/2009

சில இயக்குனர்களின் அடுத்த பட கதை....கற்பனை :)))

வணக்கம் தோழர்களே....

இதுவும் ஒரு மொக்கைப்பதிவு தான்... நான் நீண்ட காலமா ஒரு மொக்கைப்பதிவு போடாததால் நீங்க எல்லாம் சோர்ந்து போயிருப்பீங்க என்பது எனக்கு தெரியுது......

அதான் கெளம்பீட்டன்....

இந்த முறை சில இயக்குனர்களின் அடுத்த படக்கதை என்னவாக இருக்கும்ன்னு ஒரு காமெடிக்கற்பனை...

முதலில்...

1 . பேரரசு
இவரோட அடுத்த படப்பேரு “கீழ்ப்பாக்கம்” ஆ இருக்கும்...ஏன்னா இவரோட படத்த பாக்குறவங்க எல்லாம் @#$#@ ஆ போற்தனால...
சரி கதை இது தான்...
ஹீரோவோட பக்கத்துவீட்டு பொன்னுதான் ஹீரோயின்..அந்த நேரத்துல வில்லன் “பீடா பிச்சாண்டி” ஹீரோயின் வீட்டோட தகராறு பான்றான்.அப்ப ஹீரோ அத தடுக்கப்போக ஹீரோவோடு பிரச்சனை வருகிறது.. அத ஹீரோ எப்பிடி சமாளிக்கிறார்..ஹீரோயினோடு எப்பிடி சேர்கிறார் என்பது தான் கதை..

இம்முறை ஹீரோக்கு அவரோட பக்கத்து வீட்டுக்குமுள்ள தொடர்பு சம்மந்தமாக கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்...
:)))


2 . சேரன்

(இவரோட ஆட்டோகிராஃப் க்கு நான் ரசிகன்...
பொக்கிஷத்துக்காக தான் இந்த மொக்கை..)

இவரோட அடுத்த படக்கதை - ஒரு ஊர்..அந்த ஊர்ல இருக்கிற ஹீரோவும் ஹீரோயின்னும் சின்ன வதிலிருந்தே காதல் பண்ணுறாங்க...ஆனா ஹீரோ சின்ன வயதிலேயே அப்பாவோட ட்ரான்ஸ்ஃபர் காரணமாக நகரத்துக்கு கெளம்பி வந்துடுறாங்க..சிட்டிக்கு வந்த ஹீரோ நம்மள மாதிரி ப்ளாக் ஸ்பாட்டில் ஒரு தளத்தை ஆரம்பித்து அதில் ஹீரோயின்னுடனான தனது காதலை பதிவுகளாக எழுதி draft ஆக சேமித்து வைக்கிறார்...இவ்வாரு இருக்கும் தருணத்தில் ஹீரோ இறந்து விடுகிறார்..
அப்போது ஹீரோவின் கணனியைப்பார்த்த அப்பா அவரின் ப்ளாகர் தளத்துக்கு போகிறார்..அங்கு draft ஆக இருக்கும் பதிவுகளைப்பார்த்து கவலைப்பட்டு அந்த பதிவுகளை எப்பிடி போஸ்ட் செய்கிறார் என்பது தான் கதை...

:)))

3 . A.M.ராஜா(ஜெயம் ரவியின் அண்ணன்..)

(இவ்ரோட படங்கள் தான் Mகுமரன் சன் ஆஃப் மகாலஷ்மி , உனக்கும் எனக்கும்[ 2 உம் தெலுங்கில் வெற்றி பெற்ற படங்களின் ரீமேக்])

இவரோட அடுத்த படம் அனேகமா( நிச்சயமாகவே) தெலுங்கில் வெற்றிகரமாக ஓடி முடித்த ஏதாவது ஒரு படத்தை ரீமேக்குக்கு தேடிக்கொண்டிருப்பார்.. இங்க போய் பாருங்க...(சாரி நமக்கு தெலுங்கு பக்கம் அவ்வளவா தெரியாது..)


4 . ஷங்கர்

இவரப்பத்தி தான் உங்களுக்கே நல்லாத்தெரியுமே...இவரோட அடுத்த படம் அனேகமா ரஜினிய வச்சுத்தான் இருக்கும்...பெரும் பொருட்செலவில் ”வாழ்க்கைத்தர வேறுபாட்டப்பத்தி”ஒரு கத பண்ணுவாரு(கதை சொல்லி ஓய்ந்து பொயிட்டேன் நீங்களே இத மையமா வச்சு ஒரு கத சிரியேட் பண்ணி கொள்ளுனங்க ஓகே..)ஸ்ஸ்ஸ்ஸபாபாபாபா.....


இன்னும் இந்த லிஸ்ட்டில் விக்ரமன் , சுசி கணேஷன்(கந்தசாமிக்கு பிறகு..)இப்பிடி நிறைய பேர் வருவாங்க..ஆனா ரொம்ப பேசக்கூடாதுன்னு எங்கப்பா சொல்லி இருக்காரு..
:)))


அதனால இத்தோட நிறுத்திகிறேன்...
வர்ட்டா..

அடுத்த பதிவில் சந்திப்போம்...

சில இயக்குனர்களின் அடுத்த பட கதை....கற்பனை :)))SocialTwist Tell-a-Friend

8/20/2009

ஆதவன் பாட்டு கலக்கல்....

ஹாய் நண்பர்களே......


மீண்டும் ஹாரிஸ் மற்றும் சூர்யா இணைந்திருக்கும் படம் “ஆதவன்”..கே.ஸ்.ரவிகுமார் இயக்கும் இந்த படத்தில் முதல் முறையாக நம்ம நயன் சுர்யாவுடன் ஜோடி போடுகிறார்....இதற்கு முன் இவர்கள் இருவரும் இணைந்து கஜினியில் நடித்திருந்தாலும் இப்போது தான் ஜோடியாக நடிக்கிறார்கள்...


இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன... நான் இந்த பதிவை போடும் வரையில் எந்த பிரபல தளங்களிலும் இந்த பட பாடல்கள் வெளியாகவில்லை..அதான் நாம முந்திகலாம்ன்னு இந்த பட பாடல்களை உங்களுக்கு தருகிறேன்...

இந்த பட பாடல்களை இங்கே கிளிக்குவதன் மூலம் டவுன்லோட் செய்யலாம்....

அத்துடன் இந்த திரைப்பட பாடல் ஒன்றின் வீடியோவும் தருகிறேன்....எப்பூடின்னு சொல்லுங்க..

அடுத்த பதிவில் பார்ப்போம்....

ஆதவன் பாட்டு கலக்கல்....SocialTwist Tell-a-Friend

8/14/2009

மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில.. - பார்ட் 2

ஹையோ...ஹையோ...


மற்ற நண்பர்கள் எல்லாம் ஏதேதோ புதுசு புதுசா பதிவ போட்டு கலக்கு கலக்குன்னு கலக்குறாங்க...
நாம தான் எப்பயாவது ஒரு பதிவ போட்டு கிட்டு இருக்கோம்...
அதான் இப்ப கொஞ்சம் பதிவர்களை சிரிக்க வைக்கலாம்ன்னு திரும்ப கெளம்பி இருக்கேன்....

இதோட பார்ட் 1 இங்க..இத ஜோக்ஸ்ன்னு நினச்சு போடுறேன்....
சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
:)))1 . உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே..உங்களுக்கு தெரியுமா???
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதே...

_________________________________________________________

2 . நாம நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்???
தெரியலயே...
ட்ராஃபிக் ஜாம் ஆகிடும்...

_________________________________________________________
3 . மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்???
தின்னுடும்...
இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்....

_________________________________________________________

4 . சொந்த ஊர் எது???
அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...

_________________________________________________________

5 . நேத்து ஏன் ஆஃபீசுக்கு லீவு போட்டீங்க????
ஒரு சேஞ்சுக்கு விட்டிலேயே தூங்கீட்டேன்...

_________________________________________________________

6 . என்னால வாயே தொறக்க முடியல டாக்டர்...
சரி..சரி..உங்க மனைவிய வெளிய போகச்சொல்லுறேன்....

_________________________________________________________

7 . உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்???
வாயாலதான்....

_________________________________________________________

8 . கடவுள் நம்ம பாவங்கள் எல்லாத்தையும் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும் சாமி???
முதல்ல பாவம் பண்ணனும்...

__________________________________________________________

9 . சோம்பேரிகளுக்கான போட்டீல உனக்கு முதலிடம் கிடச்சதாமே..எப்படிடா??
போட்டிக்கு பேர் கொடுத்தேன்.. கலந்துகவே இல்ல....

_________________________________________________________

10 . ஆனாலும் இவர் கொஞ்சம் முன் ஜாக்கிரதையானவர்....ட்ரைவர் கிட்ட “மெதுவா போ..மெதுவா போ”ன்னு சொல்லுறார்...

ஏன் அதுல என்ன தப்பு???

ட்ரைவர் நடந்து போய்கிட்டிருக்கார் சார்...
_________________________________________________________

எப்பூடி???
மீண்டும் சந்திப்போம்....மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில.. - பார்ட் 2SocialTwist Tell-a-Friend

8/08/2009

டூ இன் ஒன்....ஹாய் நண்பர்களே...

அடிச்சுது பாருங்க லக்கு...
வலை உலகில் வழங்கப்படும் 2 பெரிய விருதுகள் எனக்கு ஒன்றாய் கிடைத்திருக்கிறது.....

முதலாவதாக...

INTERESTING BLOG AWARD...


இந்த விருதை எனக்கு நண்பர் சுபாங்கன் வழங்கினார்....
( நம்ம வலை என்ன அவ்வளவு சுவாரஸ்யமாவா இருக்கு??? :)))
இந்த விருதை எனக்களித்த அவருக்கு என் நன்றிகள்....
நான் இந்த விருதை

1 . தமிழ் மாங்கனி -http://enpoems.blogspot.com/

2 . புதியவன் - http://puthiyavanonline.blogspot.com/

இவர்களுக்கு வழங்க ஆசைப்படுகிறேன்....

மற்றய விருது...வண்ணாத்துப்பூச்சி விருது...

இந்த பெருமைக்குறிய விருதினை எனக்கு சுகுமார் சுவாமி நாதன்- வலைமனைஅவர்கள் வழங்கினார்கள்...
இந்த விருதினை நான்

1 . லோக்கல் தமிழன் - http://localtamilan.blogspot.com/

2 . டக்ளஸ் - http://tucklasssu.blogspot.com/
ஆகியோருக்கு வழங்க ஆசைப்படுகிறேன்....

இந்தவிருதினை பெற எனக்கு ஊக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துகள்....


அடுத்த பதிவில் சந்திப்போம்.....

டூ இன் ஒன்....SocialTwist Tell-a-Friend