8/27/2009

சில இயக்குனர்களின் அடுத்த பட கதை....கற்பனை :)))

வணக்கம் தோழர்களே....

இதுவும் ஒரு மொக்கைப்பதிவு தான்... நான் நீண்ட காலமா ஒரு மொக்கைப்பதிவு போடாததால் நீங்க எல்லாம் சோர்ந்து போயிருப்பீங்க என்பது எனக்கு தெரியுது......

அதான் கெளம்பீட்டன்....

இந்த முறை சில இயக்குனர்களின் அடுத்த படக்கதை என்னவாக இருக்கும்ன்னு ஒரு காமெடிக்கற்பனை...

முதலில்...

1 . பேரரசு
இவரோட அடுத்த படப்பேரு “கீழ்ப்பாக்கம்” ஆ இருக்கும்...ஏன்னா இவரோட படத்த பாக்குறவங்க எல்லாம் @#$#@ ஆ போற்தனால...
சரி கதை இது தான்...
ஹீரோவோட பக்கத்துவீட்டு பொன்னுதான் ஹீரோயின்..அந்த நேரத்துல வில்லன் “பீடா பிச்சாண்டி” ஹீரோயின் வீட்டோட தகராறு பான்றான்.அப்ப ஹீரோ அத தடுக்கப்போக ஹீரோவோடு பிரச்சனை வருகிறது.. அத ஹீரோ எப்பிடி சமாளிக்கிறார்..ஹீரோயினோடு எப்பிடி சேர்கிறார் என்பது தான் கதை..

இம்முறை ஹீரோக்கு அவரோட பக்கத்து வீட்டுக்குமுள்ள தொடர்பு சம்மந்தமாக கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்...
:)))


2 . சேரன்

(இவரோட ஆட்டோகிராஃப் க்கு நான் ரசிகன்...
பொக்கிஷத்துக்காக தான் இந்த மொக்கை..)

இவரோட அடுத்த படக்கதை - ஒரு ஊர்..அந்த ஊர்ல இருக்கிற ஹீரோவும் ஹீரோயின்னும் சின்ன வதிலிருந்தே காதல் பண்ணுறாங்க...ஆனா ஹீரோ சின்ன வயதிலேயே அப்பாவோட ட்ரான்ஸ்ஃபர் காரணமாக நகரத்துக்கு கெளம்பி வந்துடுறாங்க..சிட்டிக்கு வந்த ஹீரோ நம்மள மாதிரி ப்ளாக் ஸ்பாட்டில் ஒரு தளத்தை ஆரம்பித்து அதில் ஹீரோயின்னுடனான தனது காதலை பதிவுகளாக எழுதி draft ஆக சேமித்து வைக்கிறார்...இவ்வாரு இருக்கும் தருணத்தில் ஹீரோ இறந்து விடுகிறார்..
அப்போது ஹீரோவின் கணனியைப்பார்த்த அப்பா அவரின் ப்ளாகர் தளத்துக்கு போகிறார்..அங்கு draft ஆக இருக்கும் பதிவுகளைப்பார்த்து கவலைப்பட்டு அந்த பதிவுகளை எப்பிடி போஸ்ட் செய்கிறார் என்பது தான் கதை...

:)))

3 . A.M.ராஜா(ஜெயம் ரவியின் அண்ணன்..)

(இவ்ரோட படங்கள் தான் Mகுமரன் சன் ஆஃப் மகாலஷ்மி , உனக்கும் எனக்கும்[ 2 உம் தெலுங்கில் வெற்றி பெற்ற படங்களின் ரீமேக்])

இவரோட அடுத்த படம் அனேகமா( நிச்சயமாகவே) தெலுங்கில் வெற்றிகரமாக ஓடி முடித்த ஏதாவது ஒரு படத்தை ரீமேக்குக்கு தேடிக்கொண்டிருப்பார்.. இங்க போய் பாருங்க...(சாரி நமக்கு தெலுங்கு பக்கம் அவ்வளவா தெரியாது..)


4 . ஷங்கர்

இவரப்பத்தி தான் உங்களுக்கே நல்லாத்தெரியுமே...இவரோட அடுத்த படம் அனேகமா ரஜினிய வச்சுத்தான் இருக்கும்...பெரும் பொருட்செலவில் ”வாழ்க்கைத்தர வேறுபாட்டப்பத்தி”ஒரு கத பண்ணுவாரு(கதை சொல்லி ஓய்ந்து பொயிட்டேன் நீங்களே இத மையமா வச்சு ஒரு கத சிரியேட் பண்ணி கொள்ளுனங்க ஓகே..)ஸ்ஸ்ஸ்ஸபாபாபாபா.....


இன்னும் இந்த லிஸ்ட்டில் விக்ரமன் , சுசி கணேஷன்(கந்தசாமிக்கு பிறகு..)இப்பிடி நிறைய பேர் வருவாங்க..ஆனா ரொம்ப பேசக்கூடாதுன்னு எங்கப்பா சொல்லி இருக்காரு..
:)))


அதனால இத்தோட நிறுத்திகிறேன்...
வர்ட்டா..

அடுத்த பதிவில் சந்திப்போம்...

சில இயக்குனர்களின் அடுத்த பட கதை....கற்பனை :)))SocialTwist Tell-a-Friend

15 Responses:

பிரியமுடன்...வசந்த் said...

//இவரோட அடுத்த படப்பேரு “கீழ்ப்பாக்கம்” ஆ இருக்கும்...//

இதுல டாக்டரா வேஷம்
கட்டுவாரோ........

:)

sakthi said...

arumai

கார்த்திகைப் பாண்டியன் said...

:-))))))

நையாண்டி நைனா said...

பேரரசு படத்தை போட்டு உங்கள் புது பேனருக்கு திருஸ்டி கழித்த உங்கள் உள்குத்து என்னை மிக கவர்ந்தது.

டக்ளஸ்... said...

:))

வால்பையன் said...

டரியல்!

யோ வாய்ஸ் said...

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வழிப்போக்கன் said...

கருத்துகளுக்கு நன்றி தோழர்களே....

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

நல்லா பன்றாய்ங்கப்பா காமெடி

SShathiesh said...

எல்லோரையும் ஒருகை பார்த்த்விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.

கலையரசன் said...

என்ன 4 பேரை மட்டும் எழுதியிருக்கீங்க? பாக்கி அடுத்த பார்ட்டா? வெயிட் பண்ணுறேன்!!

Sukumar Swaminathan said...

கூல்.... இந்த பேரரசு நெசமாவே கீல்பாக்கமுன்னு பேர் வச்சாலும் வச்சிடுவாரு ...

வழிப்போக்கன் said...

நன்றிகள்...

ஜமால் அண்ணா..
சதீஷ் அண்ணா..
கலையரசன் அண்ணா...
சுகுமார் அண்ணா...

Anbu said...

:-))

tataindiaxenon said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com