8/30/2009

விஜய் TV யின் தரம் குறைகிறதா???..ஓர் அலசல்..


மீண்டும் ஒரு ஹாய் நண்பர்களே....

என்னடா இந்த வழிப்போக்கன் ஒரே மொக்கயனா இருக்கானேன்னு பீல் பண்ணும் “நல்ல உள்ளங்களுக்கு” இந்த முறை ஒரு அலசல் பதிவை இடுகிறேன்...
இந்த பதிவை முழுதாக படித்து ஏதேனும் தவறாயின் பின்னூட்டமிடவும்...


நான் ஏன் விஜய் டீவியை எடுத்துள்ளேன் என்றால் அவர்கள் தான் நம்மலுகேற்ற முழு நேர பொழுதுபோக்கு சேனல்....

நான் ஏன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளேன் என்றால் முன்பிருந்த தரம் விஜய் தொலைக்காட்சியிடம் குறைந்துள்ளது..அதற்கான காரணங்களாக நான் கருதும் காரணங்கள்....

1 .விஜய் டீவிக்கே என பிரபலமான நிகழ்ச்சிகள் தற்போது ஒளிபரப்பப்படுவதில்லை..

முதலில் அவ்வாறு நீக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப்பார்ப்போம்.....


1 . கலக்கப்போவது யாரு?..

விஜய் டீவிக்கே தனித்தன்மையான இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது..மக்களின் பெரும் வரவேற்பைப்பெற்ற இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது விஜய் தொலைக்காட்சியை பார்க்கும் ஆர்வத்தை மக்களிடம் நிச்சயம் குறைத்திருக்கும்...ஆனால் இப்போது கலக்கப்போவது யாரு சுட்டிகள் தேர்வு இடம் பெறுவதாக கேள்விப்பட்டேன்..பார்ப்போம் எப்படி வருகிறது என்று...

2 . லொல்லு சபா..
தமிழ்த்திரைப்படங்களை வைத்து நடாத்தப்பட்டு வந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி...இந்த நிகழ்ச்சி மூலம் தான் நடிகர் சந்தானம் தமிழ்த்திரையுலகிற்கு கிடைத்தார்..பல நகைச்சுவை ரசிகர்களைக்கொண்ட இந்த நிகழ்ச்சி இப்போது ஒலிபரப்பப்படுவதில்லை..

3 . Mathan's திரைப்பார்வை

தமிழ் திரைப்படங்களைப்பற்றி அதிக அறிவுள்ள மதன் அவர்களால் நடாத்தப்பட்டு வந்த ஒரு திரைப்படங்களைப்பற்றிய ஒரு அலசல் நிகழ்ச்சி...இதுவும் விஜய் தொலைக்காட்சியின் தரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வந்தது..இப்போது இதுவும் நிறுத்தப்பட்டுள்ளது..

4 . கனாக்காணும் காலங்கள்..

சீரியல் என்றாலே ஒரே அழுகை என்னும் எண்ணத்தை மாற்றிய தொடர்..அதிக பள்ளி ரசிகர்களைக்கொண்ட இந்த தொடர் புது முகங்கள் மூலம் புத்துயிர் பெற்று பின் நிறுத்தப்பட்டது..காரணம் புரியவில்லை..

5 .இசைக்குடும்பம்..

இசைக்கலைஞர்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி...ஒரு சீசனுடன் அப்பீட்டகிவிட்டது...எனக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக இருந்தது..

6 . coffee வித் அனு..

பிரபங்களின் அனுபவங்கள் , புகைப்படங்கள் போன்ற விஷயங்களுடன் அவர்களுடனான ஒரு பேட்டி நிகழ்ச்சி..அனுஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார்..இதுவும் இப்போது இல்லை...
__________________________________________________________________
இது போன்ற நிகழ்ச்சிகள் நீக்கப்பட்டதுடன் இப்போது விஜய் டீவியினால் வழங்கப்படும் ” சில “ நிகழ்ச்சிகள் தரமற்று காணப்படுகின்றது..
அவ்வாறான நிகழ்ச்சிகள் ...

1 . Boys VS Girls..
ஜோடி நம்பர் 1 ஆக இருந்த நிகழ்ச்சியை இவ்வாறு பேர் மாற்றி கெடுத்துவிட்டார்கள்..முன்னிருந்தது போல் உற்சாகம் இப்போது இந்த நிகழ்ச்சசியிலில்லை..ஷாம் , மீனாவின் நடுவர்த்தன்மையில் ஏதோ பக்கச்சார்பு இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது...

2 . அனு அளவும் பயமில்லை..

இதுவும் அனுஹாசனால் நடாத்தப்படும் நிகழ்ச்சி..சில பெண் சின்னத்திரை பிரபலங்களின் தைரியத்தை பரிசோதிக்கும் நிகழ்ச்சியிது..அன்று இந்த் நிகழ்ச்சியில் என்னடாவெற்றால் ஒரு பிரபல நடிகை கொடுக்கப்பட்ட போட்டியை எவ்வாறு கடப்பது என்று இருந்து அழுது தள்ளுகிறார்..இந்த விவகாரத்தை வைத்தே அரை மணி நேரத்தை கடத்தி விட்டார்கள்..இந்த நிகழ்ச்சியும் பார்க்கும் படியில்லை...

______________________________________________________

எது எவ்வாறு இருந்தாலும் இன்னும் விஜய் டீவி இன்னும் ரசிகர்களை கொண்டுள்ளதற்கு இந்த நிகழ்ச்சிகளே காரணம்..


1 . நீயா நானா..

கோபிநாத் என்பவரால் நடாத்தப்படும் ஒரு விவாத நிகழ்ச்சி..ஒவ்வறு வாரமும் வித்தியசமான தலைப்புகளை எடுத்து விவாதிக்கும் இந்த நிகழ்ச்சி இன்னும் ரசிக்கும் படியே உள்ளது..

2 . சூப்பர் சிங்கர் ஜூனியர்..

தமிழகத்தின் செல்ல குறலுக்கான தேடலாக நடாத்தப்படும் இந்த நிகழ்ச்சி என் பேவரிட் நிகழ்ச்சியாகும்..சின்ன குழந்தைகளின் பாடும் திறனை வளர்க்கும் இந்த நிகழ்ச்சி வர வேற்கத்தக்கது...

3 . தமிழ் எங்கள் பேச்சு..

தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் நிகழ்ச்சி என்பதாலேயே எனக்கு இந்த நிகழ்ச்சியில் ஓர் ஆர்வம்..இப்போது இது தமிழ் எங்கள் பேச்சு சுட்டிகள் ஆக நடைப்பெறுகிறது.. நல்ல நிகழ்ச்சி..

4 . பாட்டு பாட வா...

இந்த நிகழ்ச்சி பாடகி அனுராதா ஸ்ரீராம் அவர்களால் தொகுத்தளிக்கப்படுகிறது..பின்ணனிப்பாடகர்களின் பாட்டு வரிகளை சோதிக்கும் ஒரு நிகழ்ச்சி..வித்தியாசமான நல்ல நிகழ்ச்சி..

5 . அது இது எது???..

சிவகார்த்திகேயனால் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி..பிரபலங்களுடனான ஒரு கலகலப்பான நிகழ்ச்சி..விஜய் டீவியின் புதிய அறிமுகம்..பார்க்கலாம்..


இது போன்ற நிகழ்ச்சிகள் இருப்பினும் முன்பிருந்தது போல விஜய் தொலைக்காட்சியில் இருந்த விருவிருப்பு குறைந்துள்ளது என்று நான் சொல்கிறேன்..என்ன நான் சொல்றது??
:)))

விஜய் டீவி உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறோம்....

__________________________________________________

ஓகே ஃப்ரெண்ஸ் அடுத்த பதிவில பார்ப்போம்..
வர்ட்டா..
:)))

விஜய் TV யின் தரம் குறைகிறதா???..ஓர் அலசல்..SocialTwist Tell-a-Friend

23 Responses:

வந்தியத்தேவன் said...

Boys Vs Girls படு மொக்கை சென்ற முறை இருந்த பெண்கள் அழகாகவும் அடக்கமாகவும் இருந்தார்கள் இந்தமுறை அனைவரும் வாயாடிகள் அதிலும் சான்ட்ராவும் ஐஸ்வர்யாவும் பெரிய ஸ்டார் வால்யூ நடிகைகள் போல் ஆடும் ஆட்டம் தாங்கமுடியவில்லை. மீன் கடையை விட சத்தம் அதிகம், ஷாம் மீனா இருவரும் நல்ல நடுவர்கள் அல்ல மீனாவிற்க்கு என்ன சொல்வது என்பது தெரியவில்லை.

காஃபி வித் அனுவில் இனிப் பேட்டி காண யாரும் இல்லை. அதனால் தான் அது நிறுத்தப்பட்டது. லொல்லு சபா இளையதலைவலியின் தந்தையாரின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டதாக தகவல்.

இப்போது உலக நாயகன் கமல் பற்றிய நிகழ்ச்சியைத் திறம்படச் செய்கின்றார்கள்.

வழிப்போக்கன் said...

ரொம்ப டார் ஆகீட்டீங்க போல??/
ஆம் , நானும் அந்த நிகழ்ச்சிக்காக தான் வெயிட் பண்ணுறன்..
:)))

நட்புடன் ஜமால் said...

ஷாம் , மீனாவின் நடுவர்த்தன்மையில் ஏதோ பக்கச்சார்பு இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது...]]

மிகச்சரியே

வழிப்போக்கன் said...

நன்றி ஜமால் அண்ணா....

Anbu said...

என்னோட பேவரைட் நீயா நானா தான்......

டக்ளஸ்... said...

உண்மைதான் தலைவா..!

வழிப்போக்கன் said...

நன்றிகள்...

அன்பு அண்ணா.....
டக்ளஸ் அண்ணா...

கவிதை காதலன் said...

நானும் விஜய் டிவி யில வேலை செஞ்சவன்தான். உண்மையிலையே வித்தியாசமான நிகழ்ச்சிகள் தரணும் அப்படிங்கிறதுதான் அவங்களோட குறிக்கோள். சில தனிப்பட்ட காரணங்கள், அக்ரிமெண்ட் போன்ற காரணங்களால அந்த நிகழ்ச்சிகளை தொடரமுடியாம போயிடுது. இது எல்லாத்தையும் விட மிக முக்கியமான காரணம் TRP. பல புரோக்ராம்களோட உயிர் நாடி இந்த TRP தான்.

(ஒரு சின்ன விஷயம்.. தப்பா எடுத்துக்காதீங்க... உங்க எழுத்துக்கள்'ல இருக்குற சில எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கவனியுங்க.)

ராம்ஜி.யாஹூ said...

your post is good, But VIJay TV should be appreciated for introducing new kind of programmes (though they copies from UK TV channels).

Vijay TV only eradicated (to certain level) the serial culture.

Even today I would say, Vijay TV is much better than sun TV & kalaignar TV .

வழிப்போக்கன் said...

நன்றிகள்...

கவிதை காதலன்...
ராம்ஜி.யாஹூ...

லோகு said...

பாய்ஸ் Vs கேர்ள்ஸ், அணு அளவும் பயமில்லை ரெண்டுமே எனக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை.. பிடித்த நிகழ்ச்சிகளில் லியோனி யின் அந்த காலம், இந்த காலம் நிகழ்ச்சியும் ஒன்று.. நல்ல நல்ல நிகழ்ச்சிகளை திடீரென நிறுத்தி விடுவது விஜயின் இயல்பு.. உதாரணம் சகலை Vs ரகளை.. கடவுள் பாதி மிருகம் பாதி ....

நல்ல அலசல்..

ஜெட்லி said...

அது எது இது சூப்பர் நண்பரே....

எம்.ரிஷான் ஷெரீப் said...

நேரமிருக்கும்போது இவற்றைப் பாருங்கள்

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய்யின் அபத்த அவஸ்தையும் ! http://bit.ly/2i11ty

பாட்டு (மட்டும் தமிழில்) பாடவா http://bit.ly/188PIG

'அணுவளவும் பயமில்லை' http://bit.ly/31KA6r

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க எழுத்துக்கள்'ல இருக்குற சில எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கவனியுங்க

விஜய் டிவி tharam kurainthu varuvathu unmaithaan nanbare.

தேவன் மாயம் said...

விஜய் டி.வி. அலசல் சூப்பர். ஓட்டும் போட்டாச்சு.

வழிப்போக்கன் said...

நன்றிகள்..

லோகு அண்ணா...
ஜெட்லி அண்ணா...
எம்.ரிஷான் ஷெரீப் அண்ணா...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)..
தேவன் மாயம் அண்ணா...

tataindiaxenon said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

கலையரசன் said...

ஐ லவ் விஜய் டி.வி.!
என்ன அவங்க குறைன்னா.. பே சேனலா இருக்கறதுதான்.
அதை அவங்க கொஞ்ச நாள் தளர்திகிட்டா அவங்க இன்னமும் ரீச் ஆக வாய்ப்புகள் அதிகம்!

பிரியமுடன்...வசந்த் said...

நல்ல விமர்சனம்

ஐ லவ் விஜய்.டி.வி.

அபுஅஃப்ஸர் said...

நான் விரும்பி ரசித்து பார்க்கும் ஒரே நிகழ்ச்சி நீயா நானா

மற்ற நிகழ்ச்சிகள் ஒன்றும் குறையில்லை...

பாய்ஸ் கேர்ள்ஸ் சொதப்பல்

வழிப்போக்கன் said...

நன்றிகள்...

கலையரசன் அண்ணா....
வசந்த் அண்ணா...
அபுஅஃப்சர் அண்ணா....

கபிலன் said...

நல்ல அலசி எடுத்துட்டீங்க..
உண்மை தாங்க வழிப்போக்கன்.

joseph said...

mathan thirai parvaiya kandipa miss pondran. mendum mathanai ethirparpoum