9/12/2009

மனுஷன் எப்ப தாய்யா சந்தோஷமா இருக்கிறது??? :)))

வணக்கம் தோழர்களே....


எனக்கு கிடைத்த விஷயமொன்றை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.....

ஒரு மனுஷன் சந்தோஷமா இருக்கனும்மனா 3 விஷயம் தேவைப்படுது...
அவை என்னன்னா....

1 . காசு
2 . சக்தி (உற்சாகம்)
3 . நேரம்....

இனி மனிதனோட முக்கிய 3 பருவங்கள பார்ப்போம்...

1 . இளமை...
2 . வேலைப்பருவம்(அதாங்க வேலை செய்யிற வயசு)
3 . முதுமை....

இப்ப பாருங்க ஒரு மேட்டர சொல்றேன்....
(அப்ப இன்னும் மேட்டருக்கே வரலயோ... :)))

மனிதன் சந்தோஷமா இருக்க தேவையான இந்த 3 விஷயங்களும் 3 பருவத்திலும் கிடைக்குதான்னு பார்ப்போம்....

1 இளமை..

சக்தி + நேரம் உண்டு ஆனா காசு இல்லை.....





2 . வேலைப்பருவம்..

சக்தி + காசு உண்டு ஆனா நேரமில்லை....





3 . முதுமை...

காசு + நேரம் உண்டு ஆனா சக்தி அதாவது உற்சாகம் இல்லை....



_____________________________________________________

இப்ப சொல்லுங்க மனுஷன் எப்ப சந்தோஷமா இருக்கிறது???
:))))

அடுத்த பதிவுல சந்திபோம்....

மனுஷன் எப்ப தாய்யா சந்தோஷமா இருக்கிறது??? :)))SocialTwist Tell-a-Friend

9/07/2009

புதிய முயற்சிகள்..படங்கள் :)))

ஹாய் நண்பர்களே....

ஒரு கால இடைவேளைக்குப்பிறகு மீண்டும் ஒரு படங்களுடனான பதிவிடுகிறேன்....

இந்த படங்கள் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை...
இந்த படங்கள் நாம் இது வரையில் நினைத்திராத பல புதிய கற்பனைகளையுடையது...

இந்த படங்கள் உங்களுக்காக...


1 . இதோ இப்படி செட் பண்ணி விட்டால் செருப்பை வைப்பதும் எடுப்பதும் இலகுவாகிவிடும்...


2 . இந்த முறையினால் நாங்களே எங்களை படமெடுத்துக்கொள்ளலாம்...



3 . பெல்ட்டை (belt) அளவு கோளாக பயன்படுத்துகிறார்கள்...



4 . பூ போன்ற பல்ப்...


5 . இருவருக்கும் ஒரே குடை...


5. புத்தகங்களிலான கதிரை...

6.ஒரே தடைவையில் இரண்டுக்கும்



எப்படி படங்கள்???

அடுத்த பதிவில் பார்க்கலாம்...
கருத்துகளை பின்னூட்டமாக இடுங்கள்....

:)))

புதிய முயற்சிகள்..படங்கள் :)))SocialTwist Tell-a-Friend

8/30/2009

விஜய் TV யின் தரம் குறைகிறதா???..ஓர் அலசல்..


மீண்டும் ஒரு ஹாய் நண்பர்களே....

என்னடா இந்த வழிப்போக்கன் ஒரே மொக்கயனா இருக்கானேன்னு பீல் பண்ணும் “நல்ல உள்ளங்களுக்கு” இந்த முறை ஒரு அலசல் பதிவை இடுகிறேன்...
இந்த பதிவை முழுதாக படித்து ஏதேனும் தவறாயின் பின்னூட்டமிடவும்...


நான் ஏன் விஜய் டீவியை எடுத்துள்ளேன் என்றால் அவர்கள் தான் நம்மலுகேற்ற முழு நேர பொழுதுபோக்கு சேனல்....





நான் ஏன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளேன் என்றால் முன்பிருந்த தரம் விஜய் தொலைக்காட்சியிடம் குறைந்துள்ளது..அதற்கான காரணங்களாக நான் கருதும் காரணங்கள்....

1 .விஜய் டீவிக்கே என பிரபலமான நிகழ்ச்சிகள் தற்போது ஒளிபரப்பப்படுவதில்லை..

முதலில் அவ்வாறு நீக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப்பார்ப்போம்.....


1 . கலக்கப்போவது யாரு?..

விஜய் டீவிக்கே தனித்தன்மையான இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது..மக்களின் பெரும் வரவேற்பைப்பெற்ற இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது விஜய் தொலைக்காட்சியை பார்க்கும் ஆர்வத்தை மக்களிடம் நிச்சயம் குறைத்திருக்கும்...ஆனால் இப்போது கலக்கப்போவது யாரு சுட்டிகள் தேர்வு இடம் பெறுவதாக கேள்விப்பட்டேன்..பார்ப்போம் எப்படி வருகிறது என்று...

2 . லொல்லு சபா..




தமிழ்த்திரைப்படங்களை வைத்து நடாத்தப்பட்டு வந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி...இந்த நிகழ்ச்சி மூலம் தான் நடிகர் சந்தானம் தமிழ்த்திரையுலகிற்கு கிடைத்தார்..பல நகைச்சுவை ரசிகர்களைக்கொண்ட இந்த நிகழ்ச்சி இப்போது ஒலிபரப்பப்படுவதில்லை..

3 . Mathan's திரைப்பார்வை

தமிழ் திரைப்படங்களைப்பற்றி அதிக அறிவுள்ள மதன் அவர்களால் நடாத்தப்பட்டு வந்த ஒரு திரைப்படங்களைப்பற்றிய ஒரு அலசல் நிகழ்ச்சி...இதுவும் விஜய் தொலைக்காட்சியின் தரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வந்தது..இப்போது இதுவும் நிறுத்தப்பட்டுள்ளது..

4 . கனாக்காணும் காலங்கள்..

சீரியல் என்றாலே ஒரே அழுகை என்னும் எண்ணத்தை மாற்றிய தொடர்..அதிக பள்ளி ரசிகர்களைக்கொண்ட இந்த தொடர் புது முகங்கள் மூலம் புத்துயிர் பெற்று பின் நிறுத்தப்பட்டது..காரணம் புரியவில்லை..

5 .இசைக்குடும்பம்..

இசைக்கலைஞர்களை வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி...ஒரு சீசனுடன் அப்பீட்டகிவிட்டது...எனக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக இருந்தது..

6 . coffee வித் அனு..

பிரபங்களின் அனுபவங்கள் , புகைப்படங்கள் போன்ற விஷயங்களுடன் அவர்களுடனான ஒரு பேட்டி நிகழ்ச்சி..அனுஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார்..இதுவும் இப்போது இல்லை...
__________________________________________________________________
இது போன்ற நிகழ்ச்சிகள் நீக்கப்பட்டதுடன் இப்போது விஜய் டீவியினால் வழங்கப்படும் ” சில “ நிகழ்ச்சிகள் தரமற்று காணப்படுகின்றது..
அவ்வாறான நிகழ்ச்சிகள் ...

1 . Boys VS Girls..




ஜோடி நம்பர் 1 ஆக இருந்த நிகழ்ச்சியை இவ்வாறு பேர் மாற்றி கெடுத்துவிட்டார்கள்..முன்னிருந்தது போல் உற்சாகம் இப்போது இந்த நிகழ்ச்சசியிலில்லை..ஷாம் , மீனாவின் நடுவர்த்தன்மையில் ஏதோ பக்கச்சார்பு இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது...

2 . அனு அளவும் பயமில்லை..

இதுவும் அனுஹாசனால் நடாத்தப்படும் நிகழ்ச்சி..சில பெண் சின்னத்திரை பிரபலங்களின் தைரியத்தை பரிசோதிக்கும் நிகழ்ச்சியிது..அன்று இந்த் நிகழ்ச்சியில் என்னடாவெற்றால் ஒரு பிரபல நடிகை கொடுக்கப்பட்ட போட்டியை எவ்வாறு கடப்பது என்று இருந்து அழுது தள்ளுகிறார்..இந்த விவகாரத்தை வைத்தே அரை மணி நேரத்தை கடத்தி விட்டார்கள்..இந்த நிகழ்ச்சியும் பார்க்கும் படியில்லை...

______________________________________________________

எது எவ்வாறு இருந்தாலும் இன்னும் விஜய் டீவி இன்னும் ரசிகர்களை கொண்டுள்ளதற்கு இந்த நிகழ்ச்சிகளே காரணம்..


1 . நீயா நானா..

கோபிநாத் என்பவரால் நடாத்தப்படும் ஒரு விவாத நிகழ்ச்சி..ஒவ்வறு வாரமும் வித்தியசமான தலைப்புகளை எடுத்து விவாதிக்கும் இந்த நிகழ்ச்சி இன்னும் ரசிக்கும் படியே உள்ளது..

2 . சூப்பர் சிங்கர் ஜூனியர்..

தமிழகத்தின் செல்ல குறலுக்கான தேடலாக நடாத்தப்படும் இந்த நிகழ்ச்சி என் பேவரிட் நிகழ்ச்சியாகும்..சின்ன குழந்தைகளின் பாடும் திறனை வளர்க்கும் இந்த நிகழ்ச்சி வர வேற்கத்தக்கது...

3 . தமிழ் எங்கள் பேச்சு..

தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் நிகழ்ச்சி என்பதாலேயே எனக்கு இந்த நிகழ்ச்சியில் ஓர் ஆர்வம்..இப்போது இது தமிழ் எங்கள் பேச்சு சுட்டிகள் ஆக நடைப்பெறுகிறது.. நல்ல நிகழ்ச்சி..

4 . பாட்டு பாட வா...

இந்த நிகழ்ச்சி பாடகி அனுராதா ஸ்ரீராம் அவர்களால் தொகுத்தளிக்கப்படுகிறது..பின்ணனிப்பாடகர்களின் பாட்டு வரிகளை சோதிக்கும் ஒரு நிகழ்ச்சி..வித்தியாசமான நல்ல நிகழ்ச்சி..

5 . அது இது எது???..

சிவகார்த்திகேயனால் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி..பிரபலங்களுடனான ஒரு கலகலப்பான நிகழ்ச்சி..விஜய் டீவியின் புதிய அறிமுகம்..பார்க்கலாம்..


இது போன்ற நிகழ்ச்சிகள் இருப்பினும் முன்பிருந்தது போல விஜய் தொலைக்காட்சியில் இருந்த விருவிருப்பு குறைந்துள்ளது என்று நான் சொல்கிறேன்..என்ன நான் சொல்றது??
:)))

விஜய் டீவி உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறோம்....

__________________________________________________

ஓகே ஃப்ரெண்ஸ் அடுத்த பதிவில பார்ப்போம்..
வர்ட்டா..
:)))

விஜய் TV யின் தரம் குறைகிறதா???..ஓர் அலசல்..SocialTwist Tell-a-Friend

8/27/2009

சில இயக்குனர்களின் அடுத்த பட கதை....கற்பனை :)))

வணக்கம் தோழர்களே....

இதுவும் ஒரு மொக்கைப்பதிவு தான்... நான் நீண்ட காலமா ஒரு மொக்கைப்பதிவு போடாததால் நீங்க எல்லாம் சோர்ந்து போயிருப்பீங்க என்பது எனக்கு தெரியுது......

அதான் கெளம்பீட்டன்....

இந்த முறை சில இயக்குனர்களின் அடுத்த படக்கதை என்னவாக இருக்கும்ன்னு ஒரு காமெடிக்கற்பனை...

முதலில்...

1 . பேரரசு








இவரோட அடுத்த படப்பேரு “கீழ்ப்பாக்கம்” ஆ இருக்கும்...ஏன்னா இவரோட படத்த பாக்குறவங்க எல்லாம் @#$#@ ஆ போற்தனால...
சரி கதை இது தான்...
ஹீரோவோட பக்கத்துவீட்டு பொன்னுதான் ஹீரோயின்..அந்த நேரத்துல வில்லன் “பீடா பிச்சாண்டி” ஹீரோயின் வீட்டோட தகராறு பான்றான்.அப்ப ஹீரோ அத தடுக்கப்போக ஹீரோவோடு பிரச்சனை வருகிறது.. அத ஹீரோ எப்பிடி சமாளிக்கிறார்..ஹீரோயினோடு எப்பிடி சேர்கிறார் என்பது தான் கதை..

இம்முறை ஹீரோக்கு அவரோட பக்கத்து வீட்டுக்குமுள்ள தொடர்பு சம்மந்தமாக கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்...
:)))


2 . சேரன்

(இவரோட ஆட்டோகிராஃப் க்கு நான் ரசிகன்...
பொக்கிஷத்துக்காக தான் இந்த மொக்கை..)

இவரோட அடுத்த படக்கதை - ஒரு ஊர்..அந்த ஊர்ல இருக்கிற ஹீரோவும் ஹீரோயின்னும் சின்ன வதிலிருந்தே காதல் பண்ணுறாங்க...ஆனா ஹீரோ சின்ன வயதிலேயே அப்பாவோட ட்ரான்ஸ்ஃபர் காரணமாக நகரத்துக்கு கெளம்பி வந்துடுறாங்க..சிட்டிக்கு வந்த ஹீரோ நம்மள மாதிரி ப்ளாக் ஸ்பாட்டில் ஒரு தளத்தை ஆரம்பித்து அதில் ஹீரோயின்னுடனான தனது காதலை பதிவுகளாக எழுதி draft ஆக சேமித்து வைக்கிறார்...இவ்வாரு இருக்கும் தருணத்தில் ஹீரோ இறந்து விடுகிறார்..
அப்போது ஹீரோவின் கணனியைப்பார்த்த அப்பா அவரின் ப்ளாகர் தளத்துக்கு போகிறார்..அங்கு draft ஆக இருக்கும் பதிவுகளைப்பார்த்து கவலைப்பட்டு அந்த பதிவுகளை எப்பிடி போஸ்ட் செய்கிறார் என்பது தான் கதை...

:)))

3 . A.M.ராஜா(ஜெயம் ரவியின் அண்ணன்..)

(இவ்ரோட படங்கள் தான் Mகுமரன் சன் ஆஃப் மகாலஷ்மி , உனக்கும் எனக்கும்[ 2 உம் தெலுங்கில் வெற்றி பெற்ற படங்களின் ரீமேக்])

இவரோட அடுத்த படம் அனேகமா( நிச்சயமாகவே) தெலுங்கில் வெற்றிகரமாக ஓடி முடித்த ஏதாவது ஒரு படத்தை ரீமேக்குக்கு தேடிக்கொண்டிருப்பார்.. இங்க போய் பாருங்க...(சாரி நமக்கு தெலுங்கு பக்கம் அவ்வளவா தெரியாது..)


4 . ஷங்கர்

இவரப்பத்தி தான் உங்களுக்கே நல்லாத்தெரியுமே...இவரோட அடுத்த படம் அனேகமா ரஜினிய வச்சுத்தான் இருக்கும்...பெரும் பொருட்செலவில் ”வாழ்க்கைத்தர வேறுபாட்டப்பத்தி”ஒரு கத பண்ணுவாரு(கதை சொல்லி ஓய்ந்து பொயிட்டேன் நீங்களே இத மையமா வச்சு ஒரு கத சிரியேட் பண்ணி கொள்ளுனங்க ஓகே..)ஸ்ஸ்ஸ்ஸபாபாபாபா.....


இன்னும் இந்த லிஸ்ட்டில் விக்ரமன் , சுசி கணேஷன்(கந்தசாமிக்கு பிறகு..)இப்பிடி நிறைய பேர் வருவாங்க..ஆனா ரொம்ப பேசக்கூடாதுன்னு எங்கப்பா சொல்லி இருக்காரு..
:)))


அதனால இத்தோட நிறுத்திகிறேன்...
வர்ட்டா..

அடுத்த பதிவில் சந்திப்போம்...

சில இயக்குனர்களின் அடுத்த பட கதை....கற்பனை :)))SocialTwist Tell-a-Friend

8/20/2009

ஆதவன் பாட்டு கலக்கல்....

ஹாய் நண்பர்களே......






மீண்டும் ஹாரிஸ் மற்றும் சூர்யா இணைந்திருக்கும் படம் “ஆதவன்”..கே.ஸ்.ரவிகுமார் இயக்கும் இந்த படத்தில் முதல் முறையாக நம்ம நயன் சுர்யாவுடன் ஜோடி போடுகிறார்....இதற்கு முன் இவர்கள் இருவரும் இணைந்து கஜினியில் நடித்திருந்தாலும் இப்போது தான் ஜோடியாக நடிக்கிறார்கள்...


இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன... நான் இந்த பதிவை போடும் வரையில் எந்த பிரபல தளங்களிலும் இந்த பட பாடல்கள் வெளியாகவில்லை..அதான் நாம முந்திகலாம்ன்னு இந்த பட பாடல்களை உங்களுக்கு தருகிறேன்...

இந்த பட பாடல்களை இங்கே கிளிக்குவதன் மூலம் டவுன்லோட் செய்யலாம்....

அத்துடன் இந்த திரைப்பட பாடல் ஒன்றின் வீடியோவும் தருகிறேன்....



எப்பூடின்னு சொல்லுங்க..

அடுத்த பதிவில் பார்ப்போம்....

ஆதவன் பாட்டு கலக்கல்....SocialTwist Tell-a-Friend

8/14/2009

மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில.. - பார்ட் 2

ஹையோ...ஹையோ...


மற்ற நண்பர்கள் எல்லாம் ஏதேதோ புதுசு புதுசா பதிவ போட்டு கலக்கு கலக்குன்னு கலக்குறாங்க...
நாம தான் எப்பயாவது ஒரு பதிவ போட்டு கிட்டு இருக்கோம்...
அதான் இப்ப கொஞ்சம் பதிவர்களை சிரிக்க வைக்கலாம்ன்னு திரும்ப கெளம்பி இருக்கேன்....

இதோட பார்ட் 1 இங்க..



இத ஜோக்ஸ்ன்னு நினச்சு போடுறேன்....
சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
:)))



1 . உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே..உங்களுக்கு தெரியுமா???
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதே...

_________________________________________________________

2 . நாம நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்???
தெரியலயே...
ட்ராஃபிக் ஜாம் ஆகிடும்...

_________________________________________________________
3 . மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்???
தின்னுடும்...
இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்....

_________________________________________________________

4 . சொந்த ஊர் எது???
அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...

_________________________________________________________

5 . நேத்து ஏன் ஆஃபீசுக்கு லீவு போட்டீங்க????
ஒரு சேஞ்சுக்கு விட்டிலேயே தூங்கீட்டேன்...

_________________________________________________________

6 . என்னால வாயே தொறக்க முடியல டாக்டர்...
சரி..சரி..உங்க மனைவிய வெளிய போகச்சொல்லுறேன்....

_________________________________________________________

7 . உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்???
வாயாலதான்....

_________________________________________________________

8 . கடவுள் நம்ம பாவங்கள் எல்லாத்தையும் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும் சாமி???
முதல்ல பாவம் பண்ணனும்...

__________________________________________________________

9 . சோம்பேரிகளுக்கான போட்டீல உனக்கு முதலிடம் கிடச்சதாமே..எப்படிடா??
போட்டிக்கு பேர் கொடுத்தேன்.. கலந்துகவே இல்ல....

_________________________________________________________

10 . ஆனாலும் இவர் கொஞ்சம் முன் ஜாக்கிரதையானவர்....ட்ரைவர் கிட்ட “மெதுவா போ..மெதுவா போ”ன்னு சொல்லுறார்...

ஏன் அதுல என்ன தப்பு???

ட்ரைவர் நடந்து போய்கிட்டிருக்கார் சார்...
_________________________________________________________

எப்பூடி???
மீண்டும் சந்திப்போம்....



மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில.. - பார்ட் 2SocialTwist Tell-a-Friend

8/08/2009

டூ இன் ஒன்....



ஹாய் நண்பர்களே...

அடிச்சுது பாருங்க லக்கு...
வலை உலகில் வழங்கப்படும் 2 பெரிய விருதுகள் எனக்கு ஒன்றாய் கிடைத்திருக்கிறது.....

முதலாவதாக...

INTERESTING BLOG AWARD...


இந்த விருதை எனக்கு நண்பர் சுபாங்கன் வழங்கினார்....
( நம்ம வலை என்ன அவ்வளவு சுவாரஸ்யமாவா இருக்கு??? :)))
இந்த விருதை எனக்களித்த அவருக்கு என் நன்றிகள்....
நான் இந்த விருதை

1 . தமிழ் மாங்கனி -http://enpoems.blogspot.com/

2 . புதியவன் - http://puthiyavanonline.blogspot.com/

இவர்களுக்கு வழங்க ஆசைப்படுகிறேன்....

மற்றய விருது...



வண்ணாத்துப்பூச்சி விருது...

இந்த பெருமைக்குறிய விருதினை எனக்கு சுகுமார் சுவாமி நாதன்- வலைமனைஅவர்கள் வழங்கினார்கள்...
இந்த விருதினை நான்

1 . லோக்கல் தமிழன் - http://localtamilan.blogspot.com/

2 . டக்ளஸ் - http://tucklasssu.blogspot.com/
ஆகியோருக்கு வழங்க ஆசைப்படுகிறேன்....

இந்தவிருதினை பெற எனக்கு ஊக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துகள்....


அடுத்த பதிவில் சந்திப்போம்.....

டூ இன் ஒன்....SocialTwist Tell-a-Friend

7/24/2009

4 கேள்வி முடிந்தால் பதிலளியுங்கள்... :)))

வணக்கம் நண்பர்களே....

இதுவும் ஒரு படங்கள் உள்ள பதிவு தான்....
எனக்கு மின்னஞ்சலில் வந்தது...
நான் பதிலளிக்க முனைந்தேன்....
முடிந்ததா இல்லயான்னு கடைசில சொல்றேன்....

இப்ப கேள்விய பாருங்க..(ஆங்கிலத்தில் உள்ளது..பொறுத்துக்கொள்ளவும்..)






























என்ன மக்கா??
எப்பூடி???
இப்ப சொல்லுறேன்...
நம்மளால “முடியல..”
:)))
முடிந்ததான்னு பின்னூட்டத்துல சொல்லுங்க...

பிறகு சந்திப்போம்...
:)))

4 கேள்வி முடிந்தால் பதிலளியுங்கள்... :)))SocialTwist Tell-a-Friend

7/19/2009

நிதி நெருக்கடியால் பிரபல நிறுவனங்களின் சின்னங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் :)))

நண்பர்களே வணக்கம்...



தற்போது உலக நாடுகள் நிதி நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளன...இது யாவரும் அறிந்ததே...இதை வைத்து பிரபல நிறுவனங்களின் சின்னங்கள் மீது நகைச்சுவையாக சில மாற்றங்களை ஏற்படுத்தி சில படங்கள் என் மின்னஞ்சலுக்கு வந்தது...
அதை உங்களுடன் பகிர்கிறேன்....

1.APPLE நிறுவனம்...



2 . FERRARI நிறுவனம்..


3 . Ford நிறுவனம்..


4 . GOOD YEAR நிறுவனம்..



5 . LG நிறுவனம்..

6 . Nike நிறுவனம்..


7 . NOKIA நிறுவனம்..


8 . YAHOO நிறுவனம்..


9 . adidas நிறுவனம்..
எப்படி கற்பனை???

பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன....

அடுத்த பதிவில் சந்திப்போம்......
:)))

நிதி நெருக்கடியால் பிரபல நிறுவனங்களின் சின்னங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் :)))SocialTwist Tell-a-Friend

7/17/2009

ஆரம்ப பள்ளி ஞாபகங்கள்...

நண்பர்களே வணக்கம்...

என்னடா இவன ரொம்ப நாளா காணோமேன்னு தேடின நல்ல உள்ளங்களுக்கு முதலில் என் நன்றிகள்...
அது வேறு ஒன்னும் இல்ல... நாளானா இந்தப்பரீட்சைய மட்டும் வச்சுடுறாங்க...
அதுக்கு முகம் கொடுக்கத்தான் இவ்வளவு நாள்...
இனி வழமை போல் வருவோம்ல....
என்னை 2வது தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள்....ஐந்தறைப்பெட்டிஎன்னும் வலையை நடாத்தும் சுபாங்கன் அண்ணாதான் அழைத்தார்...

இதில் என் ஆரம்ப பள்ளி பற்றி குறிப்பிட சொல்லி இருக்கிறார்கள்...

சரி ஆரம்பிக்கலாமா.......

அப்போ எனக்கு 6 வயசு இருக்கும...montessori(தொடக்கப்பள்ளிக்கு முன்னர் அடிப்படைகளை சொல்லித்தரும் இடம்..) முடிச்சுட்டு இருந்தேன்...
அப்பதான் என்னை றோயல் கல்லூரி என்னும் பிரபல பாடசாலையில் சேர்த்தார்கள் என் பெற்றோர்....
ரொம்ப பெரிய பாடசாலை.முதல் கொஞ்ச நாள் பிடிக்காமல்த்தான் இருந்தது..போகபோக பிடித்தது...என் முதல் வகுப்பு ஆசிரியர் பெயர் தவகுமார் மிஸ்..முதலாம் வகுப்பு என்பதால் ரொம்ப பணிவுடன் சொல்லித்தந்தார்..அப்ப என்ன அ,ஆ,இ,ஈ தானே ஜாலியாக இருந்தது... நிறைய நண்பர்கள்...சந்தோஷமா போச்சு வாழ்க்கை..
இதுதான் என் முதலாமாண்டு படம்..(இதுல நான் எங்க நிக்கிறேன் என்று சொல்ல மாட்டேனே...)

2ம் வகுப்புக்கு வந்ததும் நம்ம முதுகுல புததக பைய ஏத்தீட்டாங்க ஆனாலும் அப்ப கொஞ்ச குறைவுதான்..புது வகுப்பு எல்லாம் சந்தோஷமா இருந்தது..எனது 2வது மற்றும் 3வது எடுத்தவங்க மகில்ராஜன் மிஸ்...
அப்பெல்லாம் நான் அவரேஜ் ஸ்டூடண்ட் தான்...ஏதோ என்னால முடிஞ்சத படிப்பேன்..ஆனாலும் பெற்றோர் கூட்டத்துல எல்லா ஆசிரியர்களும் “இவரோட அண்ணா அளவுக்கு படிக்கிறார் இல்ல”ன்னு சொல்லுவாங்க..
அப்பிடியே ஒருமாதிரியா 4வகுப்பு வந்தது..

லோகநாதன் மிஸ்...இவங்க என்னை கொஞ்சம் உற்சாகப்படுத்தினாங்கன்னுதான் சொல்லனும்..இவங்க வகுப்புல தான் நான் ஒருமுறை கணித பாடத்துக்கு 100 மார்க்ஸ் வாங்கினேன்..(அட நிஜமாதான்... :))) அதுல இருந்து தான் இவனும் கொஞ்சம் படிப்பான்னு சொல்ல தொடங்கினாங்க...இந்த வருடமும் மிக சந்தோஷமான வருடம்...

இனி 5ம் ஆண்டு.....
இந்த வருடம் தான் புலமைப்பரிசில் பரீட்சை...என்னை விசேட தனியார் வகுப்புகளுக்கு அனுப்ப தொடங்கிய ஆண்டும் இது தான்.... நானும் அனுப்பிய இடங்களுக்கெல்லாம் போய் படிச்சேன்...வருட முடிவில் பரீட்சையும் வந்தது... நானும் எழுதினேன் >>>>>>>>>>>>> பாஸ் பண்ண முடியல...அந்த வருடம் எனக்கு மறக்க முடியத வருடம்....சில ஏச்சுபேச்சுக்கள் , சில ஆதரவுகள்.....

அப்பிடியே 6 வது வகுப்புக்கு போனேன் ....இதுதான் என் ஆரம்ப கல்வி அனுபவம்..

என் ஆரம்ப பள்ளிப்பக்கம் இப்பவும் நான் போக நேரும் போது பழைய ஞாபகங்கள் என்னை ஈர்க்கும்....(இப்பவும் அதே பள்ளியில் தான் படிக்கிறேன்..கடைசி வருடம்..)

என் நண்பர்கள் இன்னும் என்னுடன் இருப்பதால் இப்பவும் ஜாலிதான்...ஆனாலும் எந்த சுமையும் இல்லாத அந்த நாற்கள் இன்னும் என் நெஞ்சில் பசுமையாய்....இந்த பசுமையான நினைவுக்கு என்னை அழைத்த சுபாங்கன் அண்ணாவுக்கு நன்றிகள்....

இனி நான் அழைக்கணும்மில்ல....
1. தமிழ்துளி - தேவா அண்ணா
2. கற்போம் வாருங்கள் - ஜமால் அண்ணா
3. பொன்னியின் செல்வன் - கார்த்திகைப்பாண்டியன் அண்ணா

அப்போ அடுத்த பதிவில் சந்திப்போம்...
:)))

ஆரம்ப பள்ளி ஞாபகங்கள்...SocialTwist Tell-a-Friend

6/26/2009

மைக்கல் ஜாக்சன் “THE KING OF POP" க்கு சமர்ப்பணம்





நண்பர்களே வணக்கம்...

பாப் பாடல்களின் அரசன் என வர்ணிக்கப்படும் மைக்கல் ஜாக்சன் (மைக்கல் ஜோசப் ஜாக்சன்) லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று மரணமடைந்தார்...மைக்கல் ஜாக்சன் என்றால் தெரியாதவர்கள் மிகக்குறைவு...அந்த அளவுக்கு உலக மக்களை தன் குரலாலும் ஆட்டத்தாலும் கவர்ந்திருந்தார்...

மைக்கல் ஜாக்சன் 1958 ஆகஸ்ட் 29ம் திகதி பிறந்தார்..அவரது குடும்பத்தில் 7வது குழந்தையாக பிறந்தார்..தனது 11 வது வயதில் முதல் முதலாக குழுவாக இசையில் தடம் பதித்தார்..பின்னர் 1971ல் சுயமாக மேடை ஏறினார்..” பாப் இசையின் அரசன் “ என வர்ணிக்கப்பட்ட இவரது 4 ஆல்பங்கள் உலகின் சிறந்த விற்பனை ரெக்காட்டை(world'd best - selling record)கொண்டுள்ளன..Off the wall(1979) , Bad(1987) , Dengerous(1991) , History(1995) என்பனவே அவையாகும்..ஆனாலும் அவரது Thriller(1982) எப்போதும் சிறந்த விற்பனையாகும்..

1980களில் ஜாக்சனே அமெரிக்க ஆபிரிகாவின் சிறந்த பாடகராக இருந்தார்..அவரது "Beat it" , "Billie jean" போன்ற பாடல்களாலும் அவரது தனித்துவமான நடனத்தாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார்..அவரது பாடல்கள் இலகுவில் புரிந்து கொள்ள கூடியவை..

அவர் பல கின்னஸ் உலக சாதனைகளையும் , க்ராமி அவார்டுகளையும் (Most successful entertainer of all time உட்பட)பெற்றுள்ளார்....இவ்வளவு பெருமைமிக்க மைக்கல் ஜாக்சன் சிரிது காலம் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார்.. நேற்று தனது 50வது வயதில் காலமானார்..
அவரின் ரசிகனான நான் இந்த பதிவை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்....
அவரின் படங்கள் சில...



























மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

மைக்கல் ஜாக்சன் “THE KING OF POP" க்கு சமர்ப்பணம்SocialTwist Tell-a-Friend

6/20/2009

அட நம்பினா நம்புங்க.. நம்பாட்டி போங்க...


ஹாய் நண்பர்களே...

நான் அண்மையில் கண்டு களித்த சில பிரமிக்க வைக்கும் படங்களை பகிர ஆசைப்படுகிறேன்...

இவை மிகவும் ஆச்சரியத்தை உண்டு பண்ணின...

பார்த்து மகிழுங்கள்...






























எப்பிடி படங்கள்???


உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக இடுங்கள்...

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்....
:)))



அட நம்பினா நம்புங்க.. நம்பாட்டி போங்க...SocialTwist Tell-a-Friend