4/30/2009

"காலையில் சாலை" - கவிதை

நம்ம சக வலைப்பதிவு அண்ணாக்கள் எல்லாம் கவித கவிதயா வடிச்சு தல்லுறத பாத்த நம்மளுக்கும் கவித எழுதனும்ன்னு ஒரு ஆசை..
அதன் ஒரு வெளிப்பாடே இந்த கவித(அப்பிடின்னு நெனைச்சு தான் எழுதுறேன்)

நேற்று மாலை வகுப்பு முடிந்து பேரூந்தில் இருந்த போது தோன்றியது...
ஆரம்பிக்கிறேன்..


"காலையில் சாலை"
அதிகாலை அலாரம் வைத்து
அம்மா எழுப்பிவிட
கனவுப்புத்தகத்தை மூடிவிட்டு
கண்முழித்தேன்...

வறண்டு கிடந்த முகத்தைக் கழுவி
தேநீரை உறிஞ்சினேன்...
இஸ்திரித்த சீருடையை அணிந்து
இட்லி இரண்டை விழுங்கினேன்..

அடுக்கி வைத்த புத்தக பையுடன்
அவசரமாக புறப்பட்டேன்..
நேற்று கொடுத்த வீட்டுவேலையை
உடனே சென்று முடிக்க வேண்டுமே
என்ற நினைவில்..

இன்று என் அதிர்ஷ்டம் -நெருங்கியது
ஒரு அழகிய பேரூந்து..
பாய்ந்து ஏறினேன் -
மனதில் மகிழ்ச்சியுடன்..

கால்வாசி தூரம் விரைந்தது.
அதன்பின் தான் அகப்பட்டேன்
இந்த நேரத்தைப்போக்கி வெறுப்பை-
கூட்டும் "வாகன நெருக்கடியில்"..
:(((

திறந்து கிடந்த ஜன்னலின் ஊடாக
எட்டிப்பார்த்தேன்..
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
அசையாது நின்றன வாகனங்கள்..

"பிச்சை போடுங்கய்யா.."கேட்டது-
வெளியில் ஒரு ஏழை..போட்டேன்
மகிழ்ச்சியில் காணப்பட்டான் அவன்..
இதனால் இன்று நல்ல வருமானம் போலும்..

பக்கத்தில் இருந்தவன் பற்றினான்-
ஒரு சிகரட்டை..
காற்றும் அவன் பக்கம்
கண்றாவி மனம் என்னிடமே வந்தது..
:(((

பொன்னான நேரம் கரைந்து போக
காணப்பட்டேன் கவலையுடன்..
ஒருவழியாக பள்ளியை அடைந்தேன்..
இறங்கி ஓடினேன் அவசரமாக..

வகுப்பை அடைந்தேன்..
அதுவும் வீணானது
ஆசிரியர் சொன்னார்..
"மணி அடிச்சாச்சு வெளியே நில்"என்று..

_______________________________________________

எப்பிடி கவித???

ஏதாவது பிழை இருந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்ளவும்..ஏனென்றால் இது என் கன்னிக்கவிதை....

பிடித்தால் வோட்டயும் குத்துங்கள்..
அடுத்த பதிவில் சந்திப்போம்......

"காலையில் சாலை" - கவிதைSocialTwist Tell-a-Friend

4/27/2009

பள்ளி கால நகைச்சுவைகள்...:)))

நாம் பள்ளிபருவத்தில் செய்த சுட்டிகளை ஒரு தொகுப்பாக தரலாம் என எண்ணியதன் செயல் வடிவமே இந்த பதிவு...1.ஆசிரியர்:வாட்டிஸ் யுவர் நேம்???
மாணவன்:சூரிய பிரகாசம்..
ஆசிரியர்:நான் கேள்வியை இங்லிஷ்ஷில் கேட்டால்,நீ அத‌ற்கு இங்லிஷ்ஷில் தான் பதிலலிக்க வேண்டும்..
மாணவன்:சன் லைட் மிஸ்..

2.ஆசிரியர்:உன் பேர் என்ன???
மாணவன்:ப்ரேட் டீ மிஸ்..

ஆசிரியர்:என்ன இது??? ஒழுங்கா உன் பேர சொல்லு...
மாணவன்:பாண்டீ மிஸ்..3.ஆசிரியர்:1869இல் என்ன நடந்தது???
மாணவன்:மாகாத்மா காந்தி பிறந்தார்..
ஆசிரியர்:1873இல் என்ன நடந்தது?
மாணவன்:காந்தி 4 வயதை அடைந்தார்...


4.ஆசிரியர்: What is the full form of maths?
மாணவன்: Mentally affected teachers harassing students..


5.ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நம‌க்கெல்லாம் என்ன கிடைத்தது?
மாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..


6.ஆசிரியர்:சரி..எனக்கு இப்ப யாராவது இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடப்பதற்கு ஒர் உதாரணம் சொல்லுங்க‌ள் பார்ப்போம்???

மாணவன்:சார்..என் அப்பாவும்,அம்மாவும் ஒரே நாளில்,ஒரே நேரத்தில் தான் கல்யாணம் கட்டினார்கள்..


7.ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???
மாணவன்:என்னோட வயசுதான் சார்..

ஆசிரியர்:எப்டீடா???
மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..

எப்பிடி நம்ம சின்ன பசங்களோட ச்ச்சுட்ட்டிதனம்???பிடித்திருந்தால் வாக்களிக்கவும்...

பள்ளி கால நகைச்சுவைகள்...:)))SocialTwist Tell-a-Friend

4/24/2009

நடிகைகளின் அசல்...

எனக்கு சில நடிகைகளின் அசல் புகைப்படங்கள்(ஒப்பனை செய்யாத) கிடைத்தது...

சரி எதுக்கு நேரத்த கடத்திகிட்டு???
நேரா மேட்டருக்கு வருவோம்....
இதுல நிறைய நடிகைகள் பாலிவூட்டை சேர்ந்தவர்கள்....

பாருங்க பாத்து ரசிங்க....

முதல்ல நம்ம ஐஸ்...

அடுத்து நம்ம நயன்....

ப்ரியங்கா சோப்ரா....

மனீஷா கொராலா...

நம்ம ஸ்னேகா...

தீபிகா படுகோனே...

கஜோல்...

அட நம்ம த்த்திரிஷா.....
கத்ரீனா கைஃப்...

கரீனா கபூர்...
சுஷ்மிதா சென்...

ராணி முகர்ஜீ...

தபூ...
என்ன பாத்தச்சா???
:)))
மீண்டும் அடுத்த பதிவுல சந்திப்போம்....நடிகைகளின் அசல்...SocialTwist Tell-a-Friend

4/19/2009

மானாட மயிலாட..ஒரு கேவலமான பார்வை..

எல்லாருக்கும் வணக்கம்...

இது அரசியல் கூட்டமோ,கட்சி மாநாடோ இல்ல இது மானாட மயிலாட பார்த்தவன் ஒருவனின் புலம்பல்....(அந்நியன் ஸ்டைல்ல.. :))) )
நேற்று ஞாயிற்றுக்கிழமை..(19/04/2009)..IPLல்ல தென்னாபிரிக்காவுக்கு மாத்தினதும் மாத்தினான் அத நம்மூர் டீவி எதிலயும் போட மாட்டேங்குறான் என்ற கடுப்புல வந்து இருந்தேன்..
முன்னாடி மேசைல ரிமோட் இருந்திச்சு..

போட்டு பாக்கலாம்ன்னு எடுத்து போட்டேன்..
அப்பதான் போட்டதும் வந்தது கலைஞர் டீவி...
மானாட மயிலாட தான் போய்கிட்டு இருந்திச்சு..சரி இது வரைக்கும் பாத்ததில்ல இன்னைக்காவது பாப்பமேன்னு போட்டேன்..(அட நிஜமா தாங்க..:))) )


முன்னால வந்து நின்னுச்சு காம்பேர் “டா”வும் காம்பேர் “டீ”யும்(அதாங்க அந்த 2 பேர்)..
முதல்ல அந்த “டா” கத்திச்சு...
“அடுத்து நாம பாக்க போறது ரஞ்ஜித் ஆண்ட் ஐஸ்வரியாவோட பர்ஃபாமன்ச..”என்றது...

இருவரும் வந்து ஆடினர்...
ஏதோ திருவிழா ரவுண்டாமாம்...பரவாஇல்லை சுமாராகத்தான் ஆடினார்கள் (பொய் சொல்ல கூடாதில்ல..)

திருப்பியும் ரெண்டு காம்பேரும் வந்தார்கள்...திருப்பியும் அந்த “டா” கத்திச்சு..
“ரஞ்ஜித் ஆண்ட் ஐஸ்வையாவோட பர்ஃபார்மன்ஸ் உண்மையிலேயே ஒரு திருவிழாவை பாத்த மாதிரி இருந்திச்சு”ன்னான்...
உடனே அந்த பொண்ணு வாங்கி (ஐஸ்வரியா) “இன்னும் பர்ஃபார்மன்ஸ் முடியல “ன்னு சொல்லீட்டு திருப்பியும் சாங்க போட்டுட்டு ஒரு 1 நிமிஷம் ஆடிச்சு...

திருப்பியும் “டா” வாங்கி “இப்ப தான் நிஜமான திருவிழா முடிஞ்சிருக்கு...கலா மாஸ்டர் நீங்க சொல்லுங்க “என்றான்..
மாஸ்டர் மைக்க வாங்கி “இன்னும் முடியல..ன்னுட்டு இதோ நானும் வரேன்”என்ற்றாங்கோ...
அவங்களும் அங்க போய் திருப்பியும் ஒரு நிமிஷம் ஆடி முடிச்சுட்டு..
குஷ்புவ பாத்து ”இன்னும் முடியல ’குஷ்’(குஷ்ஷாமாம்..) இங்க வா”என்றார்..
குஷ்பு கூடவே ரம்பாவும்(எங்க தன்னையும் திருப்பி கூப்பிட வைக்காம :))) ) அங்க போய் மறுபடியும் ஒரு நிமிஷம் ஆடி முடித்தனர்...(இத பாத்து முடிக்கவே ’ஷபா முடியல’)..

முடிஞ்சாச்சா..இந்த முறை “டீ” வாங்கி ”கலா மாஸ்டர் இப்ப சொல்லுங்க எப்பிடி இவங்களோட பர்ஃபார்மன்ஸ்???” என்றது...
கலா மாஸ்டர் “ரஞ்ஜித் பின்னீட்டடா...ஸ்ஸூப்பர்ப்.., ஸுப்பர்ப்.., ஸூப்பர்ப்..என்னோட மார்க்ஸ் 20”என்றார்..(பாராட்ட தான் வேணும் ஆனா இது கொஞ்சம் ஓஓஓவர் தானே???)

பிறகு “டா” வாங்கி “குஷ்பூ மேடம் நீங்க சொல்லுங்க”என்றான்..
‘குஷ்’ மைக்க வாங்கி “ ஐசூ வாட்ட எஸ்ப்பரஷன்??..’உம்மா’ என்றார்..(என்னாத்திது???) மை மார்க்ஸ் ஆல்சோ 20”என்றார்..இவரோட பங்குக்கு வெளுத்து வாங்கீட்டு போக ”டீ” அடுத்து ”ரம்பா மேடம் நீங்க சொல்லுங்க”ன்னுச்சு...
ரம்பா வாங்கி “அவங்க சொன்னாப்பிறகு நான் என்ன சொல்லுறது என்னோட மார்க்ஸும் 20”என்றார்..(இதுலயும் காப்பி அடிக்கிற பழக்கம் போகவில்லயா???)..

இதுக்கு பிறகு என் வாழ்க்கையிலேயே இத பாக்குறது இல்லன்னு முடிவு பண்ணி டீவியயே ஆஃப் பண்ணீட்டேன்..

என் சோக கதைய கேட்டுடீங்க இல்ல??? இனிமேல் இத பாக்குற நோக்கம் இருந்தால் அத கைவிடுவதே நல்லது...
:)))

ஓக்கே...
நான் இதுக்கு ரூம் போட்டு ஃபீல் பண்ணனும் .. நான் வரேன்..
:)))

மானாட மயிலாட..ஒரு கேவலமான பார்வை..SocialTwist Tell-a-Friend

4/18/2009

டிப்பெஸ்(white ink) கல்வியை வளர்க்குதா??? இல்ல அழிக்குதா??? :)))

ஹாய் நண்பர்களே...

இத படிச்ச உடனே சில பேருக்கு "டிப்பெஸ்"ன்னா என்னன்னு ஒரு கேள்வி எழும்பி இருக்கலாம்...சோ அத முதல்ல தீர்ப்போம்..

டிப்பெஸ்ன்னு நாங்க எத சொல்லுவோம்ன்னா பேனாவால எழுதிய எழுத்துக்களை வெறும் அழிரப்பரால (rubber eraser) அழிக்க முடியாது..அதனால அத அழிக்க பயன்படுத்துவது தான் இந்த டிப்பெஸ்(வெள்ளை மை)..
இத நீங்க சிலவேளை வேறு மாதிரி அழைத்திருக்கலாம்..நாங்க இத இப்பிடி தான் அழைப்போம் அதான்......

இது தான் அது..

இப்ப ஓக்கேவா, சரி மேட்டருக்கு வருவோம்....

நான் இன்னும் ஒரு பள்ளி மாணவனாக இருக்கேன்ல..
இப்பிடி தான் அன்று ஒரு நாள் எமது வகுப்பில சார் ர்ர்ரொம்ப தீவிரமா பாடம் எடுத்துகிட்டிருக்கையில் எனக்கு முன்னால் இருந்த மாணவனுக்கு ராக்கெட் வேகத்தில் பறந்து வந்து விழுந்தது ஒரு டிப்பெஸ்...
அவன் அதை தொட்டு கும்பிட்டான்..(படிக்கிற பொருட்கள் கீழே விழுந்தாலோ,மிதி பட்டாலோ தொட்டு கும்பிடும் நல்ல பழக்கத்த நம்மவர்கள் கொண்டிருக்கிறார்கள்)

சார் அத பாத்துட்டார்...
உடனே அவன எழுப்பினார்..(சார் அப்ப ரொம்ப நல்ல மூட்ல இருந்ததால கோபப்படவில்லை)
"என்னடா செய்ற???"என்றார்..
அவன் "சார் டிப்பெஸ் விழுந்திடுச்சு அதான்..."ன்னு இழுத்தான்..

அப்பதான் சார் கேட்டார்.."டிப்பெஸ்ஸ போய் கும்பிடுறியே அது படிப்ப அழிக்கிற பொருள் இல்லயாடா??"அப்பிடின்னு..

பையன் குழம்பீட்டான்..
அப்பரமா "சார் அது .."அப்பிடின்னு ஏதோ ஆரம்பிக்க உடனே சார் "என்னடா நீங்க??? சரி சரி இரு"ன்னு முடிச்சுவச்சுட்டார்...

பிறகு தான் நான் இத யோசிச்சு பாத்தேன் எனக்கு அது படிப்ப வளர்க்குதா?? இல்ல அழிக்குதா??ன்னு தெரியல..
அதான் இங்க பல மேதாவிகள்,அறிஞர்கள் இருப்பீங்க..இதுக்கு சரியான தீர்வு சொல்லுவீங்கன்னு இங்க இத அவுத்து விடுறேன்....
பாத்து நல்ல விடையா சொல்லுங்க....

ஓக்கே..
-------------------------------------------------------------------------------------------------

இந்த பதிவ படிக்கிறவங்களுக்கு அதே சார் கேட்ட ஒரு கேள்வியயும் சொல்லுறேன் ..பதில் சொல்ல முயற்சி பண்ணுங்க..( நம்ம பையன் ஒருத்தன் உடனே எழுந்து அந்த நேரமே பதில் சொல்லீட்டான்..)

2 பேர் ஒருநாள் காட்டுக்கு மரம் வெட்ட போனாங்களாம்..
ஒருத்தன் காலைல இருந்து நான்ஸ்டாப்பா வெட்டினானாம்..அவனால வெறும் 8 மரம் தான் வெட்ட முடிந்ததாம்..
மற்றவன் ஒவ்வொறு மரம் வெட்டி முடிந்ததும் ஒரு ஓரமாக இருந்து வெற்றிலை மென்று கொண்டிருந்து விட்டு தான் அடுத்த மரம் வெட்ட போவானாம்..ஆனால் அவன் 11 மரம் வெட்டினானாம்..

எப்பிடி இது சாத்தியம்???

ஒகே..
ஓவரா பேசியாச்சு...
இது ரெண்டுக்கும் நல்ல தீர்வ சொல்லுங்க....

பிடிச்சா வோட்டயும் குத்துங்க...
பை..பை..

டிப்பெஸ்(white ink) கல்வியை வளர்க்குதா??? இல்ல அழிக்குதா??? :)))SocialTwist Tell-a-Friend

4/12/2009

ஆண்கள் தான் நல்ல நண்பர்கள்... நிரூபணம்

இது எனக்கு கிடச்ச ஒரு காமெடியான விஷயம் ....

**(யாரும் சீரியஸ்ஸா எடுக்க வேண்டாம்)**

பெண்களின் நட்பு...

ஒரு முறை மனைவி இரவு வீட்டுக்கு வரவில்லையாம்...

மறுநாள் காலை கணவனிடம் இவ்வாறு கூறினாள் "நான் நேற்று என் நண்பியின் வீட்டில் உறங்கி விட்டேன்"...

கணவன் தன் மனைவியின் 10 நண்பிகளை அழைத்தான்...

அவர்களில் நால்வர் தான் அதனை ஒப்புக்கொன்றனர்... மற்றவர்கள் தாம் அதனைப்பற்றி அறியவில்லை எற்றே கூறினர்...
ஆண்களின் நட்பு...

கணவன் ஒருமுறை வீட்டுக்கு வரவில்லையாம்...

மறுநாள் காலை மனைவியிடம் இவ்வாறு கூறினான் "நான் நேற்று என் நண்பனின் வீட்டில் உறங்கி விட்டேன்"...

மனைவி தன் கணவனின் 10 நண்பர்களை அழைத்தாள்...

அவர்களில் 8 பேர் அதனை ஒத்துக்கொன்றதுடன் 2 பேர் அவன் இன்னும் தன் வீட்டிலேயே தான் இருக்கிறான் என்றனர்...


சோ..
எப்பிடி நம்ம பசங்களின் நட்பு???
ஹி..ஹி..

சின்ன பதிவுன்னு கோப்பபடாதீங்க...
அடுத்த பதிவு சீக்கிரமே வரும்...
ஓக்கே..வரேன்..

ஆண்கள் தான் நல்ல நண்பர்கள்... நிரூபணம்SocialTwist Tell-a-Friend

4/11/2009

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள்

நம் மனித வாழ்வில் நாம் சந்தோஷமாக இருக்கும் சில சந்தர்ப்பங்கள்...
நான் ரசித்தமையினால் உங்களுடன் பகிர்கிறேன்...
1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)

2.வயிறு வலிக்கும் வரையில் சிரித்தல்...

3.மலைப்பிரதேசங்களை ஒரு சுற்று சுற்றுதல்...

4.ரேடியோவில் பிடித்த பாடலை கேட்டு ரசித்தல்...

5.உறங்க செல்ல முன் ஜன்னல் வழியாக மழை பெய்வதை ரசித்தல்...

6.நம் இறுதி பரீட்சை பேப்பரை செய்து முடித்துவிட்டு ஆசிரியரிடம் கையளித்தல்...(பிறகென்ன லீவுதான்)

7.ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடலில் இணைதல்...

8. நம் பழைய காற்சட்டையில் இருந்து நாணயமொன்றை எடுத்தல்...

9.உங்களின் சில செயற்பாட்டை நினைத்து நீங்களே சிரித்தல்...

10.உங்கள் அனைத்து நண்பர்களுடனும் ஒரு இனிமையான இராப்போசனத்தை ருசித்தல்...

11.தற்செயல்லாக யாராவது உங்களைப்ற்றி நன்றாக கூறுவதை கேட்டல்...

12.மாலைப்பொழுதில் சூரியன் மறைவதை ரசித்தல்...

13.உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவரை நினைவுபடுத்தும் பாடலொன்றை கேட்டல்...

14.முதல் முத்தத்தை கொடுக்கும் போதும் பெறும் போதும்...

15.உங்கள் நண்பர்களுடன் சிறப்பான பொழுதொன்றை கழித்தல்...

16.உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்க செல்லுதல்...

17.உங்கள் பழைய நண்பன்/நண்பி உடன் பழைய ஞாபகங்களை பகிருதல்...

இவ்வளவு தான் என் நினைவில் பட்டது...
உங்களுக்கு வேறு ஏதாவது தோன்றினால் அதையும் சொல்லுங்கள்...

*****உண்மையான நண்பர்கள் நம் சந்தோஷத்துக்கு நாம் அழைத்தால் வருவார்கள்....
கஷ்டம் என்றால் நாம் அழைக்காமலே வருவார்கள்...*****

இதுக்கும் உங்கள் ஆதரவு எதிர் பார்க்கப்படுகிறது...(அட வோட்டீட்டுப்போங்கப்பா...)

அடுத்த பதிவில சந்திபோம்...
:)))

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள்SocialTwist Tell-a-Friend

4/10/2009

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் "GOA" பட ஸ்டில்ஸ்

நம்ம கங்கைஅமரனோட புள்ள வெங்கட் பிரபு தனது 2 பெரிய வெற்றிப்படங்கள தொடர்ந்து அடுத்த படத்தயும் தொடங்கீட்டாரு...
அதோட பேரு "GOA"னு வச்சு இருக்கார்....


இதப்பத்தி சொல்லுறதுன்னா இது நாலு வாலிப பசங்கள பத்திய ஒரு கலகலப்பான காதல் கதை...
இதுலயும் அவரோட அதே பழைய டீம் பசங்களான ஜெய்,வைபவ்,அரவிந்த் ஆகாஷ்,தம்பி ப்ரேம்ஜி அமரன் எல்லாருமே இருக்காங்க..
இவங்களோட நம்ம புன்னகை அரசியும் (சினேகா) சேந்திருக்காங்க...

இந்த கதைய முதல்ல நம்ம சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் சார் கிட்ட தான் நம்ம வெங்கட் சொல்லி இருக்கார்...அவர் அத அவரோட மகள் செளந்தர்யா கிட்ட பரிந்துரைக்க அவங்க கதைய கேட்டுட்டு தானே அத தயாரிக்கிறதா சொல்லீட்டாங்க...

அதனால இந்த படத்த செளந்தர்யாவோட "OCHER STUDIOS"தயாரிக்குது...
இதுல பிரதான கதாப்பாத்திரத்த ஜெய் ஏற்றிருக்கார்...

சோ..மேட்டருக்கு வரலாம் இந்தப்படத்தோட ஸ்ட்டில்ஸும் ஷூட்டிங் ஸ்பாட் படங்களும்....ஓகேவா???
புடிச்சிருந்தா வோட்டீட்டு போங்கப்பா...

அடுத்த பதிவுல சந்திப்போம்...
:)))

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் "GOA" பட ஸ்டில்ஸ்SocialTwist Tell-a-Friend

4/09/2009

"உன்னைப்போல் ஒருவன்"ட்ரைலர்...

மக்களே...
இது பரீட்சை காலம் அல்லவா..அதான் கொஞ்சம் லேட்டு...

இந்த பட ட்ரைலர நீங்க ஏற்கனவே பார்த்திருந்தாலும் பார்த்திருப்பா( நம்ம தசாவதாரம் கறுப்பு கமல் ஷ்டைல்ல )..இருந்தாலும் நம்ம பக்கமும் திருப்பியும் பார்க்க வந்ததுக்கு நன்றிகள்...

இதப்பற்றின ஏனைய தகவல்களை நம்ம சக பதிவாளர்கள் போட்டதால நான் அதை தவிர்த்திருக்கிறேன்(காரணம் அவர்களோட பக்கமும் போகட்டுமே என்றுதான்)..ஹி..ஹி

ஓகே..விஷயத்த பாத்துட்டு ,ஓட்டயும் போட்டுட்டு ஓடுங்கோ..


இதுல "kollywoodtoday"னு இருக்கு அத கண்டுக்காதீங்க..
ஓகே... அடுத்த பதிவுல சந்திப்போம்...

"உன்னைப்போல் ஒருவன்"ட்ரைலர்...SocialTwist Tell-a-Friend

4/01/2009

மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..

எனக்கு மின்னஞ்சலில் வந்த சில பல கடி ஜோக்குகள் இதோ...*தையிர் ஏன் வெள்ளையா இருக்கு???

தோய்க்கிறதால தான்..

*காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க???

அவுங்க "மெய்"மறந்தது காதலிகிறவங்கலாச்சே..


*"என்ன சேர் இன்டர்வியூ பண்ணாம முகத்தயே பாத்துகிட்டிருக்கீங்க???

"இது "நேர் முக"தேர்வுப்பா ....

*அந்த பாம்புக்கு என்ன நோயாம்???

வேறென்ன "புற்று" நோயாம்...

*அரபு நாடுகளில் போட்டோ எடுத்தா எப்பிடி இருக்கும்???

ஒரே "ஷேக்"கா இருக்கும்...

* உங்க படத்துல வசனங்களெல்லாம் கிணத்துல இருந்து கேக்குற மாதிரி இருக்கே ஏன்???

எல்லாம் அவ்வளவு "ஆழமான"வசனங்கள்...

*ஆசிரியர்:கலிங்கத்து ராஜா கோட்டை கட்டினார்..ஷாஜகான் தாஜ்மஹால் கட்டினார்..சோழ ராஜா என்ன கட்டினார்???

மாணவன்:வேஷ்டி சார்...

*எதுக்கு பசங்க எல்லாரயும் வாசல்ல உக்காரவச்சு பரீட்சை எழுத வச்சிருகாங்க???

"எண்ட்ரன்ஸ் எக்ஸாமாம்"

*நம்ம தமிழாசிரியர யாரோ அடிச்சுட்டாங்கலாமே???

"இங்க தமிழ் ஆசிரியர் யாரு???"னு கேட்டதுக்கு "அடியேன்"னு இருக்கார் அதான்...

*A-Z எழுத்துக்களில் "B"க்கு தான் ஜலதோஷம் புடிக்கும்...

ஏன்???

ஏன்னா அது ACக்கு நடுவில இருக்கிறதால..எப்பிடி நம்மாளுங்கலோட "கடி"???
காதருந்திருக்குமே???

ஹி..ஹி..

மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில..SocialTwist Tell-a-Friend