9/12/2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - ஒரு பார்வை..

ஹாய் தோழர்களே....
மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை வலையுலகில் சந்திப்பதில் மகிழ்ச்சி.....

ஓவரா பேசாம மேட்டருக்கு வருவோம்.....

2 நாள் முன்னால ரிலீஸான "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்தின் எனது பார்வை இதோ.....

நடிகர்கள் ‍ஆர்யா , சந்தானம், நயன்தாரா
இயக்கம் ராஜேஷ்
இசை யுவன்சங்கர்ராஜா
தயாரிப்பு சீனிவாசன்


இனி கதைக்கு வருவோம்.....

நம்ம நாயகன் பாஸ்கரன்(ஆர்யா)..அவர எல்லாரும் "பாஸ்"ன்னுதான் அழைப்பாங்க...பாஸ் வேல வெட்டி இல்லாத ஒரு சாதாரண பையன்..
பாஸோட அண்ணனுக்கு பொண்ணு பார்கிறாங்க..பொண்ணோட தங்கைதான் சந்திரிக்கா( ந‌யன்)...சந்திரிக்காவை பாஸ் , த‌ன் நண்பன் "தல தளபதி" நல்லதம்பி(சந்தானம்)உதவியோட கரெக்ட் பண்ண முயற்சி செய்கிறார்..

இது தொடர்பாக தனது அண்ணியிடமும் போய் பொண்ணு கேட்க ஒரு வேலையும் இல்லாத உனக்கு எப்பிடி என் தங்கையை தருவது என கிண்டலாக கூற தன்னாலும் உழைக்க முடியும் என வீட்டை விட்டு கிளம்புகிறார்...

பின் நல்லதம்பி உதவியுடன் டூடோரியல் சென்டரை தொடங்கி எவ்வாறு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்..சந்திரிகாவை கைப்பிடிக்க நினைக்கையில் வரும் புதிய பிரச்சனையை எவ்வாறு வென்று சந்திரிக்காவை கைப்பிடிக்கிறார் என்பது தான் கதை...


ஆர்யா காமெடியில் பின்னி எடுக்கிறார்..படத்தில் ஒரு சீரியஸ் சீனையும் காணோம்...முழுதும் சிரிப்பு...சந்தானம் படம் முழுக்க ஆதிக்கம் செழுத்துகிறார்..அவர் கிட்டத்தட்ட 95% காட்சிகளில் தோன்றுவதால் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை...

நயனின் இறுதிப்படம் இதுவாக அமையலாமோ என்ற வதந்தி பரவும் இந்த நேரத்தில் இந்தப்படம் கண்டிப்பாக ஒரு சூப்பர் ஹிட்டாக அமையும் என்பதில் ஐயமில்லை...கிடைத்த காட்சிகளில் சிறப்பாக பண்ணி இருக்கார்...


இசையை பொறுத்தமட்டில் "யார் இந்த பெண்தான்"பாடல் சிறப்பாக உள்ளது..இது தவிர "பாஸு பாஸு" பாடலும் ரசிக்கும் படி உள்ளது..மற்றவை சுமார் ரகம்...பின்ணனி இசை சிறப்பாக உள்ளது...


ஆக மொத்தம் லாஜிக் பார்க்காமல் (க்ளைமேக்ஸ் காட்சியில் யதார்த்தம் தவறுகிறது...)இரண்டரை மணி நேரம் சிரித்து பார்க்க மிக சிறப்பான படம்....வழிப்போக்கனின் பார்வையில் பாஸ் என்கிற பாஸ்கரன் ஒரு கலக்கல் காமெடிப்படம்...

பாஸ் என்கிற பாஸ்கரன் - ஒரு பார்வை..SocialTwist Tell-a-Friend

5 Responses:

Subankan said...

Welcome back Boss :)

வழிப்போக்கன் said...

thanks anna...

தேவன் மாயம் said...

வருக வருக! நீண்ட நாள் கழித்து!

பழமைபேசி said...

ரொம்ப நாளைக்கப்புறமாவா?? சரி, வாங்க...

வழிப்போக்கன் said...

எல்லாம் உங்க ஆசியுடன் தான்....
வரவேற்புக்கு நன்றி....