5/28/2009

இவன் யார்???

நண்பர்களே....

நம்மளயும் ஒரு மனுஷன்னு மதிச்சு ஒரு தொடர்பதிவுக்கு அழைச்சிருக்காங்க....
அழைத்த அந்த பெரிய உள்ளம் ஜமால் அண்ணா தான்...அதோட இது தான் நம்மளோட முதலாவது தொடர் பதிவு...
:)))
சரி விஷயத்துக்கு வருவோம்..

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எங்கப்பா இந்த ஜோசியம் எல்லாம் பாக்குறது இல்ல...சோ என்னோட அண்ணாவோட பேருக்கு ரைமிங்கா வச்சிருப்பார் போல...(அண்ணா பேர் பிரசன்னா..)....எனக்கு ஆரம்பத்தில் பிடிக்க வில்லை..போகபோக பிடிச்சுபோச்சு...

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
என் நண்பன் இறந்த போது...

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ஹ்ம்ம்..
முன்பு ஆசிரியரிடம் திட்டு வாங்கியதுண்டு..இப்ப அதுக்காகவே நல்ல பேர் வாங்குகிறேன்..இப்போதெல்லாம் என்னயே என் எழுத்து கவர்கிறது....

4.பிடித்த மதிய உணவு என்ன?
அவரைக்காய் கறி(அவரைக்காய் கொட்டையுடன்..),வல்லாரை கீரை, உருளைக்கிழங்கு பொரியல்,கோலி ஃப்லவர் கறி....

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
யோசிச்சுத்தான் பாக்கனும்...
:)))

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் தான் குளிக்கப்பிடிக்கும்..காரணம் அலையோடு விளையாட விருப்பம்....

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஹ்ம்ம்...
முகத்தத்தான் பார்ப்பேன்..

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்சது : எல்லா விஷயத்துலயும் கலக்கனும்னு நினைக்குறது..

பிடிக்காதது : சில வேளைகளில் என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போவது...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
இதுக்கு விடை கொடுக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை...

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
கடவுள்...இவர தவிர இப்போதுக்கு எல்லாரும் பக்கத்துல தான் இருக்காங்க...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கறுப்பு காற்சட்டை,மண் நிற டீ-சர்ட்....

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கம்ப்யூட்டர் ஸ்க்ரீனப்பாத்து கிட்டு "சகல கலா டாக்டர் "(வசூல்ராஜா MBBS)கேட்டுகிட்டிருக்கன்...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சிவப்பு..

14.பிடித்த மணம் ?
சாரி.. நம்மளுக்கு இந்த மணம் எல்லாம் தெரியாது...

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
அஸீஸ்- நல்ல அழகான கவிதைகள் எழுதுவார்..
அன்புடன் அருணா- இவரும் நல்லா கவிதகள் வரைவார்..
புதியவன்- அட இவர் கூட சூப்பரா கவிதைகள் தீட்டுவார்..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
குறித்து சொல்லவே முடியாது...
இவரு போட்டா அது ஹிட்டாகாம போகாது...

17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கட்(T20)

18.கண்ணாடி அணிபவரா?
நம்ம கண்ணோட பவரே பவரு..(அட போட மாட்டேன்ங்குறதத்தான் அப்பிடி சொன்னேன்..)


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைச்சுவைப்படம் பிடிக்கும்..
கமல்லோட எல்லா படம்முமே பிடிக்கும்...



20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன்



21.பிடித்த பருவ காலம் எது?
ஜில்லுன்னு ஒரு மழைக்காலம்...

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
மீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எப்போதெல்லாம் வெட்டியா இருக்கனோ அப்பெல்லாம் மாத்துவன்...


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது : குழந்தைகளின் சிரிப்பு சத்தம்..

பிடிக்காதது : வாகன இரைச்சல்...



25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
யாழ்ப்பாணம் தான்... தூரம் சரியாகத்தெரிய வில்லை....

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நிறைய உண்டு..குறிப்பா எல்லாரயும் நல்லா கலாய்ப்பேன்...



27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தொடர்ந்து உண்மை பேசுதல்...
:)))



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
என் மனம் தான்..சிலவேளை என்னையே மீறிவிடும்..



29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
யாழ்ப்பாணம்...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
எல்லோராலும் விரும்பும் படியாக...


31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
சாரி பாஸ்..அதான் சொன்னேன்ல....


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை...


எப்பிடி நம்ம பதில்கள்...???

தொடர் பதிவுக்கு நான் அழைப்பது...
அஸீஸ் -
HUMMING BIRD
அன்புடன் அருணா - அன்புடன் அருணா
புதியவன் - :: வானம் உன் வசப்படும் ::

இவன் யார்???SocialTwist Tell-a-Friend

30 Responses:

அன்புடன் அருணா said...

ம்ம்ம்ம் மாட்டி விட்டாச்சா?ஏற்கெனவே சஞ்செய் தம்பி மாட்டி விட்டுட்டாரே!
அன்புடன் அருணா

Ramanan Sharma said...

//யாழ்ப்பாணம் தான்... தூரம் சரியாகத்தெரிய வில்லை....
around 400km

//முகத்தத்தான் பார்ப்பேன்..
mm I look at the eyes

//உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தொடர்ந்து உண்மை பேசுதல்...//
today only I got to know this!! :-)

mm..interesting!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரொம்ப ஆர்வமா சொல்லியிருக்கீங்க தல

போனஸா இன்னும் பத்துக் கேள்விகள் சேர்த்து கேட்டிருக்கணும்

தினேஷ் said...

//தொடர்ந்து உண்மை பேசுதல்...//
உண்மை பாசு...

அப்துல்மாலிக் said...

உங்க பதிகள் அனைத்தும் எதார்தமா வெளிப்படையா இருந்தது வழிப்போக்கன்

ஆமா வழிப்போக்கன் என்ற பெயர் எப்படி வந்ததுனு சொல்லலியே

நட்புடன் ஜமால் said...

அட
இவ்வளவு வேகமா செயல்பட்டு இருக்கீங்க ...

நன்றிப்பா

நட்புடன் ஜமால் said...

\\5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
யோசிச்சுத்தான் பாக்கனும்...
:)))\\


ரொம்ப எதார்த்தமா சொல்லியிருக்கீங்க

இப்படி ஒரு பதில் இந்த தொடரில் படிச்சதா ஞாபகம் இல்லை ...

நட்புடன் ஜமால் said...

\\கமல்லோட எல்லா படம்முமே பிடிக்கும்...\\


நான் இதனை சொல்லவில்லை, இருப்பினும் இதேதான் யாமும்.

நட்புடன் ஜமால் said...

\\32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை...\\


அருமை தம்பி ...

ஆதவா said...

எல்லா கேள்விகளையும் ரசித்தேன்.... மனம் திறந்து சொல்லியிருக்கீங்க.

புதியவன் said...

யதார்த்தமான பதில்கள்...

என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்துவிட்டீர்களா...?

ஏற்கெனவே இரவீ என்னை அழைத்திருந்தார்...

வேத்தியன் said...

மாப்ள கலக்கீட்டே....

நல்ல பதில்கள்...

வாழ்த்துகள்...

:-)

(ஆமா உங்க அண்ணன் பெயர் ஓகே..
உன் பெயர சொல்லவே இல்லையே..
:-) )

வழிப்போக்கன் said...

அன்புடன் அருணா said...

ம்ம்ம்ம் மாட்டி விட்டாச்சா?ஏற்கெனவே சஞ்செய் தம்பி மாட்டி விட்டுட்டாரே!
அன்புடன் அருணா//

ஓ....
பரவா இல்ல....
ஜமாய்ங்க....
:)))

வழிப்போக்கன் said...

Ramanan Satha said...

//யாழ்ப்பாணம் தான்... தூரம் சரியாகத்தெரிய வில்லை....
around 400km

//முகத்தத்தான் பார்ப்பேன்..
mm I look at the eyes

//உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தொடர்ந்து உண்மை பேசுதல்...//
today only I got to know this!! :-)

mm..interesting!!//

நன்றி அண்ணா...

வழிப்போக்கன் said...

SUREஷ் said...

ரொம்ப ஆர்வமா சொல்லியிருக்கீங்க தல

போனஸா இன்னும் பத்துக் கேள்விகள் சேர்த்து கேட்டிருக்கணும்//

நாம எப்பவுமே இப்பிடிதான்...
:)))

வழிப்போக்கன் said...

சூரியன் said...

//தொடர்ந்து உண்மை பேசுதல்...//
உண்மை பாசு...//

நன்றி அண்ணா..
:)))

வழிப்போக்கன் said...

அபுஅஃப்ஸர் said...

உங்க பதிகள் அனைத்தும் எதார்தமா வெளிப்படையா இருந்தது வழிப்போக்கன்

ஆமா வழிப்போக்கன் என்ற பெயர் எப்படி வந்ததுனு சொல்லலியே//

நான் என்றும் இந்த வலை உலகில் வழிப்போக்கனா இருக்கனும்ன்னு வச்சுகிட்டது...
நன்றி அண்ணா...

வழிப்போக்கன் said...

நட்புடன் ஜமால் said...

\\5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
யோசிச்சுத்தான் பாக்கனும்...
:)))\\


ரொம்ப எதார்த்தமா சொல்லியிருக்கீங்க

இப்படி ஒரு பதில் இந்த தொடரில் படிச்சதா ஞாபகம் இல்லை ...//

ஆஹா ,இதுக்கு இப்பிடியா???
இது சும்மா ஃப்லோல போட்டது...
:)))

வழிப்போக்கன் said...

நட்புடன் ஜமால் said...

\\கமல்லோட எல்லா படம்முமே பிடிக்கும்...\\


நான் இதனை சொல்லவில்லை, இருப்பினும் இதேதான் யாமும்.//

அண்ணாத்த நீங்களும் நம்மாளா???
:)))

வழிப்போக்கன் said...

ஆதவா said...

எல்லா கேள்விகளையும் ரசித்தேன்.... மனம் திறந்து சொல்லியிருக்கீங்க.//

நன்றி அண்ணா....

வழிப்போக்கன் said...

புதியவன் said...

யதார்த்தமான பதில்கள்...

என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்துவிட்டீர்களா...?

ஏற்கெனவே இரவீ என்னை அழைத்திருந்தார்...//

ஓ அப்பிடியா???
நன்றி கலக்குங்க....

வழிப்போக்கன் said...

வேத்தியன் said...

மாப்ள கலக்கீட்டே....

நல்ல பதில்கள்...

வாழ்த்துகள்...

:-)

(ஆமா உங்க அண்ணன் பெயர் ஓகே..
உன் பெயர சொல்லவே இல்லையே..
:-) )//

சரி சொல்லீட்டாப்போச்சு...

"பிரவீன்" எப்பிடி???
:)))

தேவன் மாயம் said...

பிடிச்சது : எல்லா விஷயத்துலயும் கலக்கனும்னு நினைக்குறது..//

வலையில் உன் கலக்கல் தாங்கல சாமி!!

தேவன் மாயம் said...

உன் மூளை அபாரம்!! பதில்களில் அது தெரியுது!!

வழிப்போக்கன் said...

thevanmayam said...

பிடிச்சது : எல்லா விஷயத்துலயும் கலக்கனும்னு நினைக்குறது..//

வலையில் உன் கலக்கல் தாங்கல சாமி!!//

ஐயோ அப்பிடியே புல்லரிக்குதுண்ணா...
:)))

அமிர்தவர்ஷினி said...

fantastic answers...

வழிப்போக்கன் said...

அமிர்தவர்ஷினி said...

fantastic answers...//

நன்றி அக்கா...

*இயற்கை ராஜி* said...

நல்ல பதில்கள்...

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல பதில்கள்........

ப்ரியமுடன் வசந்த் said...

//14.பிடித்த மணம் ?
சாரி.. நம்மளுக்கு இந்த மணம் எல்லாம் தெரியாது.....//

மூக்கடைப்போ......